வேலூரில் யாரிந்த பெண்? புளிய மரத்தில் காதலியை கண்டதுமே டக்குனு முடிவெடுத்த காதலன்.. பரபர குடியாத்தம்
வேலூர்: வேலூரில் நடந்த துயர சம்பவம் குறித்து போலீசார் விசாரணையை முடுக்கி விட்டிருக்கிறார்கள்.. என்ன நடந்தது?
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் அன்பு.. இவர் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர்... 2 மகன்கள் இருக்கிறார்கள்.. இந்துபிரியா என்ற ஒரே ஒரு மகளும் இருக்கிறார்.. பி.ஏ., பி.எட். படித்துள்ள இந்துப்பிரியாவுக்கு 25 வயதாகிறது.

இந்துப்பிரியா அதே கிராமத்தைச் சேர்ந்த மணிமேகன் என்பவரை காதலித்து வந்தார்.. 27 வயதாகும் மணிமேகன் எம்.ஏ., பி.எட் படித்திருக்கிறார்.. இருவருமே ஒருவரையொருவர் உயிருக்குயிராக விரும்பவும், இவர்கள் காதல் விவகாரம் இரு வீட்டிலும் தெரியவந்தது. இதையடுத்து, பெற்றோர்கள் சம்மதத்தின் பேரில் திருமணமும் நிச்சயமானது..
திருமண நிச்சயம்: அதன்படி வருகிற 10-ந் தேதி இருவருக்கும் திருமணம் செய்ய முடிவானது. அன்றைய தினம் காலையில் பள்ளிகொண்டா ரங்கநாதர் கோவிலில் திருமணமும், மாலையில் பாக்கம் கிராமம் அருகே உள்ள திருமண மண்டபத்தில் வரவேற்பு நிகழ்ச்சியும் நடத்த முடிவானது.. இரு வீட்டினருமே இதற்கான திருமண பத்திரிகைகளை அச்சடித்து, உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் வழங்கி வந்தனர்.
இந்நிலையில், நேற்று காலை இந்துபிரியா, தன்னுடைய வீட்டுக்கு அருகே உள்ள தோட்டத்து பகுதிக்கு சென்றுவருவதாக வீட்டில் சொல்லிவிட்டு கிளம்பி சென்றிருக்கிறார்.. ஆனால் அதற்கு பிறகு அவர் வீடு திரும்பவில்லை.. இதனால் பதறிப்போன பெற்றோர், தோட்டத்து பக்கம் சென்று பார்த்தபோது, அங்கிருந்த வயலிலுள்ள புளிய மரத்தில் துப்பட்டாவால் தூக்கிட்ட நிலையில் இறந்து கிடப்பதை பார்த்து கதறி துடித்தனர்.
தற்கொலை: இந்த விஷயம் தெரிந்து, காதலன் மணிமேகன் ஓடோடி வந்தார்.. மரத்தில் காதலி பிணமாக தொங்குவதை பார்த்ததுமே, அதிர்ச்சியடைந்து நின்றார்.. பிறகு காதலியின் மரணத்தை ஜீரணிக்க முடியாமல் அங்கிருந்த விவசாய கிணற்றில் ஓடிச்சென்று குதித்துவிட்டார்.. இதைப்பார்த்த கிராம மக்களும், உறவினர்களும் உடனடியாக கிணற்றில் குதித்து மணிமேகனை உயிருடன் மீட்டனர்...
இதுகுறித்து பாக்கம் விஏஓ வெங்கடாஜலபதி பரதராமி போலீஸில் புகார் தரவும், போலீசார் விரைந்து வந்து, இந்துபிரியாவின் சடலத்தை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணையையும் தீவிரப்படுத்தியிருக்கிறார்கள்...
விசாரணை: ஆனால், இந்துப்பிரியா எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்று இதுவரை தெரியவில்லை.. திருமணம் நடைபெற ஒரு வாரமே இருந்த நிலையில் இந்த தற்கொலை பல்வேறு சந்தேகங்களை கிளப்பிவிட்டுள்ளது.. காதலியின் தற்கொலையும், இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த காதலனின் தற்கொலை முயற்சியும் என ஒரே நேரத்தில் நடந்த சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்திவிட்டுள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications