வேலூர் கணக்கு வாத்தியார் போட்ட "தப்புக்கணக்கு".. மாணவினு யோசிக்கல.. தடுமாறிய புத்தி.. தூக்கிய போலீஸ்
வேலூர்: வேலூர் பள்ளி ஆசிரியர் செய்த காரியம், ஒட்டுமொத்த பள்ளி மாணவர்களிடையே பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் தந்து விட்டது. இது தொடர்பாக விசாரணையை மேற்கொண்ட போலீசார், சம்பந்தப்பட்ட நபரை உடனடியாக கைது செய்துள்ளனர்.
சமீப காலமாக பாலியல் அத்துமீறல் சம்பவங்கள் அதிகமாகி கொண்டிருக்கின்றன.. அதிலும் பள்ளி மாணவிகள் பாலியல் தொல்லையில் சிக்கி அவதிப்படுவதும், மன உளைச்சல்களுக்கு ஆளாவதும் பெருகி வருகிறது.. இதுபோன்று பள்ளி மாணவிகள் பாலியல் ரீதியாக பாதிக்கப்படுவதற்கு காரணமே, அவர்களது ஆசிரியர்களாக இருப்பது, பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை தந்து வருகின்றன.

எத்தனையோ ஆசிரியர்கள் தங்கள் உயிரை கொடுத்து, பிள்ளைகளை நல்வழிப்படுத்தி வரும்நிலையில், ஒருசில ஆசியர்களின் தவறான நடவடிக்கைகள், பொதுமக்களுக்கு வருத்தத்தையும், கவலையையும் உண்டுபண்ணி வருகின்றன.
கடலூர் ஆசிரியர்: சில நாட்களுக்கு முன்புகூட, கடலூர் மாவட்டத்தில், ஒரு ஆசிரியர் போக்சோவில் கைதானார்.. காட்டுமன்னார்கோவிலை அடுத்த மாமங்கலம் அருகே செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப்பள்ளியில், வேதியியல் ஆசிரியராக பணிபுரிகிறார் மலர்செல்வம்.. இவருக்கு திருமணமாகி குழந்தைகளும் உள்ளனர். கடந்த வருடம் இவரிடம் படித்த 12ம் வகுப்பு மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை தந்து, அத்துமீறி நடந்துள்ளார்..
அந்த மாணவி 12ம் வகுப்பை முடித்துவிட்டு, தற்போது சென்னையில் ஒரு கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். சில நாட்களுக்கு முன்பு மாணவிக்கு வயிற்றில் வலி ஏற்படவும், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றிருக்கிறார். அப்போது மாணவிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.. இதனால் மாணவியின் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.
கிளாஸ் ரூம்: இது குறித்து விசாரித்தபோது தான், பள்ளியில் வேதியியல் ஆசிரியர் பாலியல் வன்கொடுமை செய்ததை சொன்னார்.. பிறகு, மாணவியின் உறவினர்கள் கொந்தளித்து, போலீசில் புகார் தந்ததையடுத்து, போக்சோவில் மலர்செல்வம் கைதானார். கிளாஸ் ரூமில் பாடம் நடத்தி கொண்டிருந்தபோதே அவரை போலீசார் கைது செய்தனர்.
இவர் வேதியல் ஆசிரியர் என்பதால், தன்னுடைய ஆசைபடி நடக்காவிட்டால், 12ம் வகுப்பு பிராக்டிக்கல் மார்க்கை குறைத்து விடுவதாக சொல்லி, கெமிஸ்ட்டிரி லேப்-பிலேயே பலமுறை மிரட்டி அம்மாணவியை பலாத்காரம் செய்தது விசாரணையில் தெரியவந்தது.
கணித ஆசிரியர்: இதே பாணி மிரட்டலைதான் வேலூரில் கணக்கு ஆசிரியர் ஒருவரும் கையாண்டிருக்கிறார்.. வேலூர் மாவட்டம் கொணவட்டம் மதினாநகரை சேர்ந்தவர் முகமது சானேகா.. 35 வயதாகிறது.. வேலூரில் உள்ள தனியார் பள்ளியில் கணித ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார் சானேகா..
இந்த நிலையில், பத்தாம் வகுப்பு மாணவி ஒருவரிடம், சாயங்காலம் வீட்டுக்கு போனதும் தன்னிடம் வீடியோ காலில் பேச வேண்டும், ஆபாச செயல்களில் ஈடுபட வேண்டும் என்றும் கட்டாயப்படுத்தி வந்திருக்கிறார் ஆசிரியர் முகமது சானேகா.
வீடியோ கால்: இதற்கு மாணவி மறுப்பு தெரிவித்துள்ளார்.. அதற்கு ஆசிரியர், "நான் சொல்வதை செய்யாவிட்டால், தேர்வில் மதிப்பெண் குறைத்து வழங்குவேன்" எனறு மிரட்டல் விடுத்திருக்கிறார். இதனால் பயந்துபோன மாணவி, ஆசிரியருடன் வீடியோ காலில் பேசியிருக்கிறார்.
இதற்கு பிறகு, "குளிக்கும் போதும் வீடியோ காலில் பேச வேண்டும்" என்று மீண்டும் ஆசிரியர் மிரட்டி வந்திருக்கிறார். ஆசிரியரின் மிரட்டல்கள் தினம் தினம் அதிகமானதால், கடுமையான மனஉளைச்சலுக்கு ஆளானார் மாணவி. இதனால் நேற்று முன்தினம் வீட்டிலிருந்தபோது தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கும் முயன்றிருக்கிறார்... இதை பார்த்து அலறிப்போன பெற்றோர், உடனடியாக மகளை தடுத்து நிறுத்திவிட்டார்கள்.
டார்ச்சர்கள்: என்ன நடந்தது என்று விசாரித்தபோதுதான், தனக்கு நேர்ந்த டார்ச்சர்களை பற்றி பெற்றோரிடம் அழுதுகொண்டே சொல்லியிருக்கிறார் மாணவி. இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக வேலூர் மகளிர் போலீசுக்கு சென்று புகார் தந்துள்ளனர்.. இந்த புகாரின் அடிப்படையில் போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டு, கணக்கு ஆசிரியர் முகமது சானேகாவையும் கைது செய்து, வேலூர் ஜெயிலில் அடைத்துள்ளனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications