வேலூர் விநோதம்.. ஆண்களை ஓட ஓட விரட்டி அடித்த மலைவாழ் பெண்கள்.. 5 மலைகளுக்கு நடுவே குத்தாட்டம்.. ஆஹா
வேலூர்: வேலூர் மாவட்டம் ஒடுகத்தூரில் நடந்த பெண்களின் திருவிழா, வியப்பையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி வருகிறது. என்ன காரணம்?
வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அடுத்த பீஞ்சமந்தை ஊராட்சிக்கு உட்பட்டது இந்த தொங்குமலை கிராமம்.. ஒடுகத்தூர் அருகே தொங்குமலை கிராமத்தில் உள்ள காளியம்மன் கோயிலிலும் கோலாகலமாக மலைவாழ் மக்களின் பாரம்பரிய திருவிழா நடைபெறும்..

இந்த தொங்குமலை கிராமத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக காளியம்மன் திருவிழாவை 12 கிராம மக்களும் சேர்ந்துதான் இதனை கொண்டாடி வருகிறார்கள்.
ஆண்கள் திருவிழா: இதில் சிறப்பம்சமாக 12 கிராமங்களை சேர்ந்த ஆண்களுக்காக 3 நாட்களும், பெண்களுக்கு என்று கடைசியாக ஒரு நாளும் திருவிழா நடைபெறுகிறது. நேற்றுமுன்தினம் ஆண்களுக்கான திருவிழா சிறப்பாக நடந்து முடிந்தது. வெட்டவெளியில் வைக்கப்பட்டுள்ள ஜலாமரத்தில் வழிபாடு செய்யப்பட்டது.
பிறகு எருதுகட்டும் நிகழ்ச்சியும் நடந்தது. இறுதியில் 100 ஆடுகளை பலியிட்டு காளியம்மனை வழிபட்டார்கள்.. இந்த விழாவில் பீஞ்சமந்தை, சின்ன எட்டிபட்டி, தேந்தூர், பெரியபணப்பாறை, பலாம்பட்டு, ஜார்தான்கொல்லை உள்ளிட்ட ஏராளமான மலை கிராமங்களில் இருந்து 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கண்டுகளித்தனர்.
ஊர்வலம்: 3 நாட்களும் ஆண்களுக்கான திருவிழா முடிந்த நிலையில், பெண்கள் மட்டுமே பங்கேற்கும் கடைசி நாள் திருவிழா, நேற்றைய தினம் நடைபெற்றது.. வழக்கமான திருவிழா போலல்லாமல், மங்கையர்களுக்கு கொடுக்கும் மகத்துவமான திருவிழாவாக இது மலைவாழ் மக்களால் பார்க்கப்படுகிறது. திருவிழாவில், பெண்களுக்கு மட்டும் ஒருநாளை ஒதுக்குவது, மங்கையர்களுக்கு தரப்படும் மதிப்பு, மரியாதையாகவும் கருதப்படுகிறது.
இதற்காக அதிகாலை 5 மணிக்கு ஊரிலிருந்து 2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள குளத்தில் நீராடிய பெண்கள், சிறப்பு வழிபாடு நடத்தினர். தொடர்ந்து கையில் கட்டைகளால் ஆன கத்திகளை ஏந்திக்கொண்டு பாட்டு பாடியபடி கிராமத்திற்கு வந்தார்கள்..
சிறுமிகள்: 12 மலை கிராமங்களை சேர்ந்த பெண்கள் ஒன்று கூடி கும்மியடித்தும், பாரம்பரிய நடனமாடியும் மகிழ்ந்தனர். பிறகு, 2 சிறுமிகளில் ஒரு சிறுமிக்கு மணப்பெண் போல் அலங்காரம் செய்தனர்.. இன்னொரு சிறுமிக்கு மணமகன் ஆடையும் உடுத்தி மணக்கோலத்தில் அமரவைத்து திருமணம் செய்வது போல் சடங்குகளை செய்தனர்.
பின்னர் இந்த சிறுமிகளை கிராம பெண்கள் தெய்வமாக பாவித்து வழிபட்டனர். இதையடுத்து ஊர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் குலதெய்வம் இருப்பதாக சொல்லி, அங்கு அனைவரும் சென்று திருமண சடங்கு நடத்திய 2 சிறுமிகளையும் உட்கார வைத்து சுற்றி வந்து கும்மி அடித்து பாட்டு பாடி வழிபட்டனர். தொடர்ந்து, சுமார் 2 கிலோமீட்டர் தூரம் தாரை தப்பட்டை முழங்க பெண்கள் குத்தாட்டம் போட்டபடியே மகிழ்ச்சியுடன் கிராமத்தை வலம் வந்தனர்.
மணக்கோலம்: இதற்கு காரணம், முன்னொருகாலத்தில், திருமணம் முடிந்ததுமே மணக்கோலத்தில் தம்பதி 2 பேரும் இறந்துவிட்டார்களாம். அவர்களை இந்த மலைவாழ் மக்கள் தங்கள் கடவுளாக வழிபட்டு வருகிறார்கள்.. இவர்களை வழிபட்டு வரும்போது, எந்த நோய் நொடியும் தங்களை அண்டாது என்றும், மழை தவறாமல் பெய்யும் என்றும் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்.
மணக்கோலத்தில் இந்த 2 குழந்தைகளையும் வீட்டிற்கு அழைத்து வந்தால், கடவுளையே தங்களுடன் வீட்டுக்கு அழைத்து வருவதாக ஒரு நம்பிக்கை இம்மக்களிடம் உண்டு..
வினோதம்: அதுமட்டுமல்ல, பெண்களுக்கான இந்த திருவிழா நிகழ்ச்சியில் ஆண்கள் யாரும் பங்கேற்கக்கூடாது. அப்படி பங்கேற்றால் அருள் வந்து ஆடும் பெண்கள், அந்த ஆண்களை ஓட ஓட விரட்டி அடிப்பார்களாம்.. இப்படி விரட்டியடிப்பது இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வாகவும் பார்க்கப்படுகிறது. இதையும் மீறி, திருவிழாவிற்குள் நுழையும் ஆண்களுக்கு ரூ 5 ஆயிரம் அபராதமாகவும் விதிக்கப்படுகிறது.
மொத்தத்தில், 5 மலைகளுக்கு நடுவே 12 கிராம பெண்களும் நடத்திய திருவிழாவும், நடுமலையில் குழந்தைகளுக்கு திருமணம் செய்து அவர்களை தெய்வமாக பார்க்கப்பட்ட நிகழ்வும், இணையத்தில் வைரலாகி வருகிறது.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications