மக்களே நாளை முதல் 5 நாள் வீட்டை விட்டு வெளியே வராதீங்க.. வெயிலால் வேலூருக்கு வந்த வார்னிங்
வேலூர்: தமிழகம் முழுவதும் வெயில் என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தான் வேலூர் மாவட்டத்தில் வரும் 14ம் தேதி வரை 5 நாட்கள் வெயில் இயல்பை விட அதிகம் இருக்கும் என்பதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். தேவையின்றி வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று மாவட்ட கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த மாதமே வெயில் அதிகரிக்க தொடங்கி விட்டது. இப்போது ஏப்ரல் மாதத்தில் வெயில் தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்கிறது. மதிய வேளையில் வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. வீட்டில் ஃபேன், ஏசி பயன்படுத்தாமல் இருக்க முடியாத நிலை உருவாகி உள்ளது. அவ்வப்போது சில மாவட்டங்களில் மழை பெய்தாலும் கூட வெயிலின் தாக்கம் மட்டும் குறையவே இல்லை.

ஏப்ரல் மாதத்திலேயே வெயில் இப்படி வெளுத்து வாங்கும் நிலையில் மே மாதத்தை நினைத்து மக்கள் பெரும் கவலையில் உள்ளனர். விரைவில் கத்தரி வெயில் காலமும் வர உள்ளதால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரை இன்று அதிகபட்சமாக வேலூரில் 38.5 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது. சேலத்தில் 38.2 டிகிரி செல்சியஸ், திருப்பத்தூரில் 37.1 டிகிரி செல்சியஸ், கரூர் பரமத்தியில் 36.5 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது. சென்னை (மீனம்பாக்கம்) 35.2 செமீ, சென்னை (நுங்கம்பாக்கம்) 34.5 டிகிரி செல்சியஸ் வெயில் பதிவானது. இந்நிலையில் தான் வரும் நாட்களில் வேலூர் மாவட்டத்தில் இயல்பை விட வெப்பம் அதிகரிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இதனால் பொதுமக்கள் வீடுகளில் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று வேலூர் மாவட்ட கலெக்டர் சுப்புலட்சுமி அறிவுரை வழங்கி உள்ளார்.
இதுதொடர்பாக வேலூர் கலெக்டர் சுப்புலட்சுமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ‛‛தமிழ்நாட்டில் 10.04.2025 முதல் 14.4.2025 வரை வடமாவட்டங்களில் 40 டிகிரி செல்சியஸ் முதல் 42 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் வெப்பத்தின் தாக்கம் இயல்பை விட அதிகம் இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
எனவே வேலூர் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் 10.4.2025 முதல் 14.4.2025 வரை வெப்பத்தின் தாக்கம் இயல்பை விட அதிகமாக இருக்கும் என்பதால் அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் வெளியே வர வேண்டும். அத்தியாவசிய பணிகளை தவிர்த்து வீட்டை விட்டு வெளியே வருவதை தவிர்க்க வேண்டும். மேலும் பொதுமக்கள் கீழ்கண்ட பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
* தாகம் இல்லாவிட்டாலும், அவ்வப்போது போதுமான குடிநீரை அருந்த வேண்டும்.
* லேசான ஆடைகள், வெளிரிய ஆடைகள், உடலை இறுக்கி பிடிக்காத, தளர்வான முழுகை ஆடைகள், நூற் துணி, பருத்தி ஆடைகளை அணிதல் வேண்டும்.
* வீட்டில் ஜன்னல் கதவுகளுக்கு திரைச்சீலை அமைத்திருப்பின் பகல் நேரங்களில் அவற்றை மூடிய நிலையிலும், இரவு நேரங்களில் அவற்றை விலக்கி வைத்து வீட்டினை குளுமையாக இருக்கும் வகையில் பராமரித்து கொள்ள வேண்டும்.
* மின்விசிறி பயன்படுத்தியும் மற்றும் குளிர்ந்த நீரில் அடிக்கடி குளித்தும் உடல் வெப்பத்தை குறைத்திட வேண்டும்.
* இளநீர், நொங்கு, தர்பூசணி, மோர் போன்றவற்றை அதிகமாக உட்கொள்ள வேண்டும்.
* வீட்டில் செய்யப்பட்ட லஸ்ஸி, சாதநீர், எலுமிச்சை சாறு, மோர், ஓஆர்எஸ் எனப்படும் உப்பு சர்க்கரை கரைசல், உப்பு கலந்த கஞ்சி, பழரசங்கள் போன்றவற்றை பருகவும் கேட்டு கொள்ளப்படுகிறது.
* வெளியில் பயணம் மேற்கொள்ளும்போது கையோடு குடிநீர் கொண்டு செல்ல வேண்டும்.
* கால்நடை மற்றும் வளர்ப்பு பிராணிகளை நிழலான இடத்தில் கட்டி வைத்து அதற்கு தேவையான குடிநீர் மற்றும் தீவனம் அளிக்க வேண்டும்.
* கர்ப்பிணி பெண்கள் காலை 10 மணி மதல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். வெளியில் செல்லும்போது கையில் குடை மற்றும் தண்ணீர் எடுத்து செல்ல வேண்டும்.
* மது, தேநீர், காபி போன்றவற்றை அருந்துவதை தவிர்க்க வேண்டும்.
* அதிக புரதம்/மாமிச கொழுப்பு சத்துள்ள மற்றும் கார வகைகளை தவிர்க்க வேண்டும்.
* சர்க்கரை நோய், இருதய நோய் போன்ற நாள்பட்ட நோ்களால் பாதிக்கப்பட்டவர்கள் வெயிலில் செல்வதை தவிர்க்க வேண்டும்.
* வயதானவர்கள்/குழந்தைகள், நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோர் வெயிலின் தாக்கத்தினால் அதிகமாக பாதிக்கப்படுவர். எனவே இவர்கள் வெயில் நேரத்தில் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்.
* குழந்தைகளையும், வளர்ப்பு பிராணிகளையும் மூடிய வாகனங்களில் தனியாக அமர்ந்திருக்க அனுமதிக்க வேண்டாம்.
மேற்கண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றி வெப்ப பாதிப்புகளிலிருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டும்'' என்று கூறப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications