வேலூரில் தந்தை கண்ணில் மிளகாய் பொடி தூவி! 4 வயது சிறுவன் கடத்தல்! ஒருவர் கைது!
வேலூர்: வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா அருகே ப்ரீகேஜி படித்து வந்த 4 வயது சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணையில் திடுக்கிடும் தகவல்களை அவர் தெரிவித்துள்ளார். இந்த கடத்தல் சம்பவம் குறித்து சிசிடிவி காட்சிகள் வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் காமாட்சி அம்மன்பேட்டையைச் சேர்ந்தவர்கள் வேணு- ஜனனி தம்பதியினர். இவர்களது 4 வயது மகன் யோகேஷ். இவர் தனியார் பள்ளியில் ப்ரீகேஜி படித்து வருகிறார்.

வேணு தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராக உள்ளார். அவர் தற்போது வீட்டில் இருந்தே பணியாற்றி வருவதால் அவரது குழந்தையை தினமும் பள்ளிக்குச் சென்று அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வருவது வழக்கம்.
அந்த வகையில் இன்று காலை வழக்கம் போல பள்ளிக்குச் சென்ற தனது குழந்தையை வகுப்பு முடிந்ததும் இரு சக்கர வாகனத்தில் வீட்டிற்கு அழைத்து வந்தார். அப்போது 12.22 மணி இருக்குமாம். வீட்டின் கேட்டை வேணுவின் மனைவி ஜனனி திறந்துவிட்டார்.
அப்போது வேணு குழந்தையை இறக்கிவிட்டார். அந்த நேரம் அவருக்கு பின்னால் ஒரு கார் இருந்தது. அதிலிருந்து ஹெல்மெட் போட்டுக் கொண்டு இறங்கிய ஒருவர் கையில் மிளகாய் பொடியை கொண்டு போனார். அப்போது அந்த கார் முன் பக்கம் நின்றிருந்தது.
உடனே அந்த நபர் வேணு மீது மிளகாய் பொடியை தூவிவிட்டு, வாசலில் இருந்த குழந்தையை ஏற்றிக் கொண்டு காரில் தப்ப முயன்றார். அப்போது பின்னாலேயே வேணுவும் துரத்திக் கொண்டு ஓடினார். ஆனால் அந்த மர்ம நபர் வேணுவை கீழே தள்ளிவிட்டுவிட்டு தப்பினர். வேணுவோ சாலையில் தேய்த்து கொண்டே தரதரவென வாகனத்தில் இழுத்துச் செல்லப்பட்டார். எனினும் அவரால் குழந்தையை காப்பாற்ற முடியவில்லை.
பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் குறித்து வேணு, குடியாத்தம் காவல் துறையில் புகார் அளித்தார். இது குறித்து போலீஸார் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக கொண்டு குழந்தையைக் கடத்திய வாகனம் குறித்து விசாரித்தனர். அப்போது அந்த வாகனம் கர்நாடகா பதிவெண் கொண்டதாக இருந்தது.
இதையடுத்து குழந்தையை மீட்க 6 தனிப்படைகள் அமைத்து மாவட்டம் முழுவதும் தேடினர். அது போல் பள்ளிக்கொண்டா, வாணியம்பாடி உள்ளிட்ட பகுதிகளிலும் தீவிர சோதனை நடத்தினர். இதனிடையே காவல் துறை தங்களை நெருங்குவதைத் தெரிந்து கொண்ட கடத்தல்காரர்கள், அந்த குழந்தையை மாதனூர் பகுதியில் கீழே இறக்கிவிட்டுவிட்டு தப்பினர்.
இதனால் சாலையில் அழுதுக் கொண்டிருந்த குழந்தையை அவ்வழியாக வந்த பொதுமக்கள் மீட்டு குடியாத்தம் காவல் துறையிடம் ஒப்படைத்தனர். இந்த நிலையில் குழந்தையை கடத்தியவர்கள் காமாட்சி அம்மன்பேட்டையைச் சேர்ந்த பாலாஜி, விக்கி ஆகிய இருவர் என தெரியவந்தது.
போலீஸாருக்கு அஞ்சி 6 மணி நேரமாக தலைமறைவாக இருந்த இருவரையும் போலீஸார் கைது செய்தனர். இதையடுத்து பாலாஜி மாட்டிக் கொண்ட நிலையில் விக்கி தப்பிவிட்டார். அவரை போலீஸார் தேடி வருகிறார்கள். பாலாஜியிடம் விசாரணை நடத்தினால்தான் குழந்தை ஏன் கடத்தப்பட்டது என்பது தெரியவரும். பட்டப்பகலில் குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அந்த பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
-
கேரளா Amusement park-ல் ஆகாய ஊஞ்சல் உடைந்து தமிழர்கள் உள்பட 7 பேர் காயம்! நடந்தது என்ன? -
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்! -
Rooster பொஷிஷனில் மனைவிக்கு ‘டார்ச்சர்'.. வீட்டுக்குள் சிறை வைத்து கணவர் செய்த வெறிச்செயல் -
சட்டம் ஒழுங்கு காலி.. எங்கே போனது சிங்கப்பெண் படை? முதல்வர் விஜய் அரசை விளாசிய டிடிவி தினகரன்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்!












Click it and Unblock the Notifications