வேலூரில் டெய்லருக்கு பேங்கில் இருந்து வந்த போன்.. மறு நிமிடமே தலைகீழாக மாறிய நிலைமை
வேலூர்: வேலூர் சைபர் கிரைம் போலீஸார் அடிக்கடி பொதுமக்களுக்கு விழிப்புணர்வுகளையும், அட்வைஸையும் வழங்கியபடியே இருக்கிறார்கள்.. ஆனாலும், சில அப்பாவிகளுக்கு இது புரியாமல், ஆபத்துகளிலும் விழுந்துவிடுகிறார்கள்.. இதுஒருபுறமிருந்தாலும், குடியாத்தம் டெய்லருக்கு நடந்த சம்பவம், வேலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை தந்து வருகிறது.
தமிழக சைபர் கிரைம் போலீசார், பொதுமக்களின் விழிப்புணர்வுக்காக அடிக்கடி அலர்ட் மெசேஜ்களை தந்து வருகிறார்கள்.. சில நாட்களுக்கு முன்புகூட ஒரு அறிவிப்பு வெளியிட்டிருந்தனர்.

ஆன்லைன் மோசடி
அதில், "ஆன்லைனில், அரசுத் துறைகளைச் சேர்ந்தவை என கூறப்படும் தகவல் தொடர்புகள் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையுடனும், விழிப்புடனும் இருக்க வேண்டும்.. எந்த ஒரு சமூக ஊடக கணக்கிலிருந்து வரும் செய்திகளுக்கும் பதிலளிப்பதற்கு முன், அதன் நம்பகத்தன்மையை சரிபார்க்க வேண்டும்.
சந்தேகத்திற்கிடமான வகையில், ஆதார் எண், வங்கி விவரங்கள், ஓடிபி போன்ற தனிப்பட்ட தகவல்களை பகிர்வதை தவிர்க்க வேண்டும்.. அத்தகைய கணக்குகள் குறித்து உடனடியாக அதிகாரிகளுக்கும் தெரியப்படுத்திவிட வேண்டும்" என்று கேட்டுக்கொண்டிருந்தனர்.
வேலூர் மாவட்டம்
ஆனாலும்கூட, வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் கடந்த வாரம் ஒரு மோசடி நடந்தது.. அருண்குமார் என்பவர் குடியாத்தம் ஸ்டேட் பாங்க் வங்கி ஏடிஎம்மில் பணம் செலுத்த சென்றிருக்கிறார். ஆனால், வரிசையில் ஏராளமானோர் நின்றிருந்ததால், அருண்குமாரும் வரிசையில் நின்றார்.
அப்போது டிப் டாப் உடை அணிந்த நபர் அவசரமாக அருண்குமாரிடம், "சார், என்னுடைய அம்மாவை ஆஸ்பத்திரியில் சேர்த்திருக்கிறேன். அவசரமாக பணம் கட்டணும். நீங்கள் ஏடிஎம்மில் டெபாசிட் செய்யும் பணத்தை என்னிடம் தந்தால், நான் உங்களுக்கு ஜிபே மூலம் பணத்தை திருப்பி அனுப்பிவிடுகிறேன்" என்றார்.
உடனே அருண்குமாரும் பரிதாபப்பட்டு, தான் டெபாசிட் செய்ய வைத்திருந்த பத்தாயிரத்தை தந்துள்ளார்..
ஸ்டேட் பேங்க் ஏடிஎம்
பிறகு அந்நபர், ஜிபே மூலம் பணம் அனுப்ப லேட்டாகும், அதனால் உங்களுடைய செல்போனிலுள்ள ஸ்கேனரை காட்டுங்க, இப்பவே ஸ்கேன் செய்து உங்களுக்கு பணத்தை அனுப்பிடறேன் என்றார்.
அருண்குமாரும் தன்னுடைய செல்போனில் உள்ள ஸ்கேனரை காட்டியிருக்கிறார்.. உடனே ஸ்கேன் செய்து பணம் அனுப்பியதற்கான ஆதாரத்தை அருண்குமாரிடம் காட்டி விட்டு அந்நபர் அங்கிருந்து வேகமாக ஓடிவிட்டார்..
அவர் சென்றபிறகுதான் அருண்குமார் தன் அக்கவுண்ட்டை பார்த்துள்ளார்.. ஆனால் பணம் வரவில்லை. உடனே பேங்க் மேனேஜரிடம் சென்று இதை பற்றி கேட்டதற்கு, பணம் எதுவும் வங்கி கணக்கில் வரவில்லை என்று உறுதிபடுத்தி உள்ளார். பிறகுதான், அருண்குமார் குடியாத்தம் போலீசுக்கு சென்று புகார் தந்தார்.. ஏடிஎம் வாசலில் உள்ள சிசிடிவியை வைத்து விசாரணையும் நடக்கிறது.
குடியாத்தம் அப்பாவி டெய்லர்
இந்த சம்பவத்தின் அதிர்ச்சி அடங்காத நிலையில், மீண்டும் ஒரு கொடுமை அதே வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் நடந்துள்ளது..
குடியாத்தம், பரதராமி பகுதியைச் சேர்ந்தவர் அந்த தையல் தொழிலாளி.. இவருக்கு சில நாட்களுக்கு முன்பு, செல்போனில் அழைப்பு ஒன்று வந்துள்ளது..
அழைப்பின் மறுமுனையில் பேசிய மர்ம நபர், "உங்க பேங்கில் இருந்து ஆபீசர் பேசுகிறோம். உங்களது வங்கிக் கணக்கு விவரங்களை சரிபார்க்க வேண்டும், இல்லாவிட்டால் அக்கவுண்ட் முடக்கப்படும்" என்று சொல்லி உள்ளார்..
இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அப்பாவி டெயிலர், போனில் கேட்ட விவரங்களை எல்லாம் ஒன்றுவிடாமல் சொல்லிவிட்டார்..
பிறகு அடுத்த சிறிது நேரத்திலேயே, டெய்லரின் வங்கிக் கணக்கில் இருந்து அடுத்தடுத்து பணப் பரிவர்த்தனைகள் மூலம் ரூ.57,000 பணம் எடுக்கப்பட்ட மெசேஜ் வந்துள்ளது..
இதைப்பார்த்து மீண்டும் அதிர்ச்சி அடைந்த டெயிலர், உடனே வேலூர் சைபர் கிரைம் போலீசுக்கு ஓடினார்.. தான் ஏமாற்றப்பட்டதை சொல்லி, புகாரும் அளித்தார்.
இந்த புகாரின் அடிப்படையில், போலீஸார் தற்போது வழக்குப்பதிவு செய்து, வாட்ஸ்அப்புக்கு வந்த போன் நம்பர் என்ன? பணம் யாருடைய அக்கவுண்ட்டிற்கு மாற்றப்பட்டது, எந்த தளத்தின் வழியாக பரிவர்த்தனை நடந்தது? என்பன குறித்து தொழில்நுட்ப நிபுணர்கள் வழியாக போலீசார் தகவல்களை சேகரித்து வருகின்றனர். மோசடி செய்த நபர் எந்த இடத்தில் இருந்து அழைத்தார் என்பதை கண்டறிய முயற்சியும் வேகமடைந்துள்ளது.
போலீஸ் எச்சரிக்கை
இந்தச் சம்பவம் குறித்து சைபர் கிரைம் போலீஸ் சொல்லும்போது, "எந்த வங்கியும், அதன் அதிகாரிகளும், கஸ்டமர்களிடம் ATM நம்பர், OTP, CVV ரகசிய விவரங்களை போனில் கேட்க மாட்டார்கள். பொதுமக்கள் இதுபோன்ற அழைப்புகளை நம்பி ஏமாற வேண்டாம். விழிப்புடன் இருந்தால் மட்டுமே சைபர் மோசடிகளைத் தடுக்க முடியும்" என்று மீண்டும் அலர்ட் செய்துள்ளனர்.
-
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான்












Click it and Unblock the Notifications