Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வேலூர் டாஸ்மாக்கில் இப்படியா? திருப்பத்தை தந்த திருப்பத்தூர் மது விற்பனை! கிர்ன்னு பாட்டில் சுத்துதே

Subscribe to Oneindia Tamil

வேலூர்: பொங்கல் பண்டிகைக்கு, விடுமுறை நாட்களில் ரூ.725 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளதாக டாஸ்மாக் அதிகாரிகள் தகவல் வெளியிட்டிருந்த நிலையில், வேலூர், திருப்பத்தூர் டாஸ்மாக் கடைகளில் எவ்வளவு மது விற்பனை நடந்துள்ளது தெரியுமா?

தமிழ்நாட்டில் 4,829 டாஸ்மாக் மதுக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகளை பொறுத்தவரை தினமும் சராசரியாக ரூ.150 கோடி அளவிற்கு மதுவிற்பனை நடைபெறுவது வழக்கமாகும்.. குறிப்பாக, சனி, ஞாயிறு உள்ளிட்ட வார இறுதி நாட்களில் ரூ.200 கோடிக்கும், பண்டிகை காலங்களில் ரூ.250 கோடிக்கும் மது விற்பனை நடைபெறுவதாக தெரிகிறது.

vellore tasmac shops tirupattur

இவை எல்லாவற்றையும்விட, புத்தாண்டு, பொங்கல், தீபாவளி பண்டிகையின்போது மும்மடங்கு மது விற்பனை நடைபெறும் என்கிறார்கள்.. அதுபோலவே, இந்தாண்டு பொங்கல் பண்டிகைக்கும் இலக்கு வைத்து மதுவிற்பனை நடந்ததாக கூறப்பட்டது.

மது விற்பனை: இந்நிலையில், பொங்கல் விடுமுறையின் 3 நாட்களிலும், ரூ.725 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது.. அதாவது ஜனவரி 13ம் தேதி முதல் 16ம் தேதி வரை (15ம் திருவள்ளுவர் தினம் தவிர்த்து) 3 நாட்களில் ரூ.725.56 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது.. இந்த முறை கூடுதலாக ரூ.47 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்தாண்டு இதுவரை கூடுதலாக ரூ.162 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது குறித்து டாஸ்மாக் அதிகாரிகள் சொன்னபோது, ஏராளமானோர் சொந்த ஊர்களுக்குச் சென்றதால், சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் மது விற்பனை குறைந்தது. பெரம்பலூர், கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் அதிகப்படியான விற்பனை நடைபெற்றது. பெரம்பலூரில் கடந்த ஆண்டை விட கூடுதலாக 15.26 சதவீதம் விற்பனையாகியுள்ளது. கன்னியாகுமரி, நாகப்பட்டினம், திருவாரூர், ராமநாதபுரம் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் விற்பனை சற்று குறைந்துள்ளது என்று கூறியிருந்தனர்.

டாஸ்மாக் கடைகள்: இந்நிலையில், வேலூர், திருப்பத்தூர் மாவட்ட டாஸ்மாக் கடைகளில் நடைபெற்ற மதுவிற்பனை குறித்த தகவல் ஒன்று தற்போது வெளியாகியிருக்கிறது.

அதன்படி, பொங்கல் பண்டிகையொட்டி 3 நாட்களில் ரூ.21 கோடிக்கு மது விற்பனை நடந்ததாக அதிகாரிகள் கூறுகிறார்கள். வேலூர், திருப்பத்தூர் மாவட்டத்தில் 105 டாஸ்மாக் கடைகள் கடைகள் செயல்பட்டு வரும்நிலையில், பொங்கல் பண்டிகையொட்டி 25 சதவீத மது பானங்கள் அதிகளவில் குவித்து வைக்கப்பட்டிருந்தது. 15ம் தேதி திருவள்ளுவர் தினம் என்பதால் அதற்கு முன் நாளான பொங்கல் பண்டிகையன்று விற்பனை களைக்கட்டியது.

21 கோடி ரூபாய்: நீண்ட வரிசையில் காத்து நின்று மது பிரியர்கள் மது பாட்டில்களை வாங்கி சென்றிருக்கிறார்கள்.. இதனால் பெரும்பாலான டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களில் கூட்டம் நிரம்பி வழிந்தவாறே இருந்துள்ளது.. சாதாரண நாட்களில் 3 கோடி வரை விற்பனை நடப்பது வழக்கமாகும். ஆனால், பொங்கல் பண்டிகையொட்டி 3 நாட்களில் மட்டும் 21 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதில் பொங்கல் அன்று மட்டும் 7.80 கோடி ரூபாய்க்கு விற்பனை நடந்துள்ளதாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+