வேலூரில் தவெக நிர்வாகி மாமூல் கேட்பதாக புகார்.. செங்கல் சூளை உரிமையாளர்கள் சாலை மறியல்
வேலூர்: வேலூர் மாவட்டம் கணியம்பாடி பகுதியில் தவெக கிழக்கு ஒன்றிய செயலாளர் விஜயக்குமார் மாமூல் கேட்டு மிரட்டுவதாக செங்கல் சூளை உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். வாகனங்களை வழிமறித்து 100க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டதால், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சமாதானம் செய்தனர்.. என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.
வேலூர் மாவட்டம்,கணியம்பாடி அருகே சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 350-க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் செயல்பட்டு வருகிறது தற்போது ஆளுங்கட்சி தாங்கள் என தவெகவை சேர்ந்த கணியம்பாடி ஒன்றிய செயலாளர் விஜயகுமார் அவருடன் மூன்று சென்று செங்கல் சூளை நடத்துபவர்களிடம் மாதம் ஒரு லட்சம் மாமூல் தர வேண்டுமென செங்கல் சூளை நடத்துபவர்களிடம் தவெகவினர் மிரட்டல் விடுத்ததாக புகார் எழுந்தது.

இது குறித்து கணியம்பாடியில் உள்ள வேலூர் கிராமிய காவல்நிலையத்தில் செங்கல் சூளை உரிமையாளர்கள் ஐந்து பேர் மனு அளித்தனர் தங்களை மிரட்டி மாமூல் கேட்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஐந்து செங்கல் சூளை உரிமையாளர்கள் புகார் அளித்தனர். ஆனால் காவல்துறையினர் கடந்த 4 முதல் 5 நாட்களாகியும் இதுவரையில் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால் புகார் தந்தவர்களின் மீது வழக்குபதிவு செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த செங்கல் சூளை உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் பணியாளர்கள் அனைவரும் கணியம்பாடி பஸ் நிறுத்தம் அருகில் வேலூர் ஆரணி சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் மறியலில் ஈடுபட்ட சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோரிடம் பேச்சுவார்த்தை நடத்தி தாங்கள் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த பின்னர் மக்கள் கலைந்து சென்றனர். பின்னர் வருவாய் கோட்டாட்சியர் செந்தில் குமார் தலைமையில் பேச்சுவார்த்தையும் நடைபெற்றது
முன்னதாக தவெக நிர்வாகி விஜயகுமார் திட்டவட்டமாக மறுத்தார். கனிம வளங்கள் திருட்டு போவதைத் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டதால், சிலர் வேண்டுமென்றே தன் மீது அவதூறு பரப்புவதாகவும், லஞ்சம் கேட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் முற்றிலும் பொய்யானவை என்றும் அவர் விளக்கம் அளித்திருந்தார்.
எனினும் செங்கல் சூளை உரிமையாளர்கள், தொழிலாளர்களுடன் சேர்ந்து இன்று வேலூர் கணியம்பாடியில் சாலை மறியல் போராட்டார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
-
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கோவைக்கு எய்ம்ஸ் தேவை! நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் விஜய் வைத்த கோரிக்கைகள் என்ன? -
Z பாதுகாப்பை கூட நம்ப மாட்டார்? விஜய் நம்பும் ஒரே ஆள் நயீம் மூஸா! முதல்வரின் இடது கை! யார் இவர்? -
“உங்க கட்சியிலேயே நீதி கிடைக்கல.. தமிழக பெண்களுக்கு எப்படி?” - விஜய்க்கு கீதா ஜீவன் சரமாரி கேள்வி! -
சிங்கப்பெண் அதிரடிப்படைக்கு அப்போ பவரே இல்லையா.. வழக்கு போட முடியாது! விசாரிக்கவும் முடியாதாம்! -
பிரதான எதிர்க்கட்சி முதல் 2 எம்.எல்.ஏக்கள் வரை.. இதுவரை தமிழ்நாட்டில் சிபிஐ அமைத்த கூட்டணிகள் லிஸ்ட் -
துடி துடித்த தூத்துக்குடி.. குடும்ப கவுரவத்துக்காக நடந்த கொடூரம்! 19 வயது இளம்பெண் ஆணவக்கொலை! -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
3 செய்தி சேனல்களை முடக்கி ஜனநாயகத்தின் குரலை முடக்குவதா? தவெக அரசுக்கு மத்திய அமைச்சர் கண்டனம் -
ஜான் ஆரோக்கியசாமியின் டெல்லி லாபி.. திமுகவுக்கு தூதுவிட்ட சுனில்.. சபரீசனுக்கு வந்துச்சே கோபம் -
அடிதாங்க முடியல குருநாதா.. விஜய் டெல்லிக்கு போன நேரத்தில்! பனையூருக்கு எம்எல்ஏக்களை அழைத்த புஸ்ஸி! -
தவெக வெற்றியைத் தொடர்ந்து.. தேசிய அளவில் காங்கிரஸுக்கு வியூகம் வகுக்கிறார் ஜான் ஆரோக்கியசாமி!












Click it and Unblock the Notifications