வேலூர் ஏலகிரி ரிசார்ட்டுக்கு வந்த கள்ளக்காதல் ஜோடி.. அதென்ன கையில்? அடடா, காமாட்சிக்கு என்னாச்சு
வேலூர் : வேலூர் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலங்களான ஏலகிரி மலையில், தற்போது சுற்றுலாப் பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர்.. கோடை காலம் துவங்கிவிட்டதால், குடும்பத்தினர், தங்கள் குழந்தைகளுடன் ஏலகிரி மலைக்கு படையெடுத்தவாறு இருக்கிறார்கள்.. அந்தவகையில், ஒரு கள்ளக்காதல் ஜோடியும் ஏலகிரி ரிசார்ட்டுக்கு சென்றுள்ளது. என்ன நடந்தது?
ராணிப்பேட்டையை அடுத்த முத்துக்கடை பகுதியை சேர்ந்தவர் காமாட்சி .. திருமணமாகிவிட்டது. ஆனால், கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

கள்ளக்காதல் ஜோடி
இந்நிலையில், பாண்டிச்சேரியை சேர்ந்த ஜெயராமன் என்பவருடன் காமாட்சிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் கள்ளக்காதலாக உருவெடுத்திருக்கிறது. இதையடுத்து, இருவரும் ஏலகிரி மலைப்பகுதியில் உள்ள ரெசார்ட்டில் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.
குறிப்பாக, ஜோலார்பேட்டை பகுதியில் உள்ள சுற்றுலா தலமான ஏலகிரி மலைப்பகுதிக்கு கடந்த தீபாவளி காலகட்டங்களில் ஜெயராமனுடன் ரிசார்ட்களில் அதிகமாக தங்தியிருந்தாராம் காமாட்சி..
கண்டித்த அக்கா
இந்த விஷயம், 2 வீட்டாருக்குமே தெரிந்துள்ளது.. இதனால், காமாட்சியின் அக்கா, கள்ளக்காதலர்கள் இருவரையுமே கண்டித்துள்ளார்.. நாளுக்கு நாள் வீட்டில் எதிர்ப்புகள் அதிகமாகிவிட்டதால், காமாட்சியும், ஜெயராமனும், வீட்டை விட்டு வெளியேறி ஏலகிரி மலைப்பகுதியில் உள்ள ஒரு தனியார் ரெசார்ட்டிலேயே தங்கி வந்திருக்கிறார்கள். பிறகு நேற்று திடீரென விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளனர்.
இருவருமே முன்கூட்டியே எலி மருந்து வாங்கி கொண்டு, ரிசார்ட்டுக்கு சென்றுள்ளனர்.. இருவருமே ஒன்றாக விஷம் குடித்தாலும், இதில், கள்ளக்காதலன் சம்பவ இடத்திலேயே பலியானார்...
உயிருக்கு போராடும் காதலி
கள்ளக்காதலி காமாட்சி உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.. அதற்குள் இந்த விஷயம் ஏலகிரி மலை போலீசாருக்கு தெரியவந்தது.. விரைந்து வந்த அவர்களின் ஜெயராமின் சடலத்தை மீட்டு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு போஸ்ட் மார்ட்டம் செய்ய அனுப்பி வைத்தனர். பிறகு, நிலைகுலைந்து விழுந்து கிடந்த காமாட்சியை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இதனிடையே முதலுதவி சிகிச்சை பெற்ற காமாட்சியும், அதே அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். ஏலகிரியில் கள்ளக்காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை முயற்சி செய்த காதலன் உயிரிழந்த சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்ப்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications