வேலனுக்கு ரொம்பதான் சேட்டை.. பெட்ரூம் வரைக்கும் வந்துடறான்.. செல்லம் ஜாஸ்தி!
ஆம்பூர் அருகே ஒரு கன்றுக்குட்டி தலையணை, பாயில் படுத்து தூங்குகிறது.
ஆம்பூர்: வேலனுக்கு ரொம்ப சேட்டை அதிகமாகிவிட்டது.. வீட்டில பிஸ்கட், சாக்லெட், மிக்சர் என்று எதையுமே விட்டு வைப்பதில்லை.. எல்லாத்தையும் உள்ளே புகுந்து மேய்ந்துவிடுவதுதான் வேலை!
ஆம்பூர் அடுத்த வீராங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் அறிவொளி ஆனந்தன். இவர் ஒரு விவசாயி. வீட்டில் பசுமாடுகளை வளர்க்கிறார்.
கொஞ்ச நாளைக்கு முன்னாடி வீட்டில் பசு ஒன்று ஆண் கன்றுக்குட்டியை ஈன்றுள்ளது. பிறந்தவுடனேயே ரொம்பவும் துருதுருன்னு இருந்திருக்கிறது. துள்ளி துள்ளி ஓடி விளையாடியதும் வீட்டில் இருந்தவர்கள் ஆச்சரியமாகவும், சந்தோஷமாகவும் பார்த்தார்கள். இந்த குட்டிக்கு வேலன் என்று பெயர் வைத்தார்கள்.

கன்றுக்குட்டி
பிறந்த சில நாட்களிலேயே துள்ளி துள்ளி குதித்தவாறே வீட்டின் பின்பக்க தோட்டத்தில் இருந்து வீட்டுக்குள் நுழைந்து விட்டது. வீட்டுக்குள் ஒரு ரூமை விட்டு வைப்பதில்லை.. இஷ்டத்துக்கு உள்ளே போறதும்.. வர்றதும்.. என அத்துமீறல்தான்!

செல்ல ரவுசு
அது மட்டுமில்லை.. வீட்டு பிள்ளைகளுக்கு ஸ்நாக்ஸ் வாங்கி வைத்தாலும் அதையும் எடுத்து சாப்பிட்டு ஏப்பம் விடும் அளவுக்கு வேலனுக்கு ரவுசு! இப்படி மிக்சர், பிஸ்கட்டுகளை சாப்பிடுவதால், வைக்கோல், புல், புண்ணாக்கை பார்த்தாலே வேலனுக்கு அலர்ஜி ஆகிவிடுகிறது. வாய்க்கு அவ்வளவு ருசி கேட்கிறது.

அமர்க்களம்
வீட்டில் சாப்பிட எதுவும் இல்லையென்றால், கிச்சனுக்கே போய் கத்த வேண்டியது. சாப்பிட ஏதாவது கொடுத்தால், அதை சாப்பிட்டுவிட்டு திரும்பவும் ஆட்டம், அமர்க்களம்.

டான்ஸ்
வேலன் தூங்குவது அதைவிட வித்தியாசமானது. பாய், தலைகாணி இருந்தால்தான் தூங்குவதாம். அதனால் வேலனுக்கு நிரந்தரமாக பாய், தலைகாணி, பேன் என ரூம் ரெடி பண்ணி தந்துவிட்டார்கள். பாட்டு போட்டால் டான்ஸ் ஆடுகிறானாம்!

அத்துமீறல்
தொழுவத்துல போய் அம்மாகிட்ட பால் மட்டும் குடிச்சிட்டு வர்றது. அதுக்கப்பறம் அவங்க அம்மாவை அவன் கண்டுக்கறதே இல்லை! வீட்டுக்குள்ளே ஆட்டம், பாட்டம், அடாவடி, அத்துமீறல் என ரவுசு காட்டி வருகிறான் வேலன்!
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications