விஜய்க்கு இதே வேலையாக போய்விட்டது.. பிரேமலதா விஜயகாந்த் குற்றச்சாட்டு
Recommended Video

வேலூர்: விஜய் சமீபகாலமாக சர்ச்சைக்குரிய படங்களில் நடித்து வருவதாக தேமுதிக பொருளாளர் பிரேமலதா குற்றம்சாட்டினார்.
வேலூரில் நேற்று திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த். இதன், பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியாவது:
சினிமாவைச் சினிமாவாக பார்க்க வேண்டும். அதற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து மோதல்களில் ஈடுபட கூடாது.

சர்ச்சை
திரையுலகினர் திரைப் படங்களை சர்ச்சைக்குள் கொண்டுச்சென்று, அதன் மூலம் படத்தை ஓட்ட நினைக்கிறார்களா என்றும் தோன்றுகிறது. சமீபகால நடவடிக்கைகள் பலவும் அப்படித்தான் மக்களை யோசிக்க வைத்துள்ளது.

உள்நோக்கம் என்ன
அப்படியான படங்களில்தான் விஜய் சமீபகாலமாக நடித்து வருகிறார். இதையெல்லாம் யோசித்து பார்த்து விஜய் நடிக்க வேண்டும். அதேநேரம் சென்சார் செய்யப்பட்ட படத்தை அதிமுகவினர் தடை செய்வது வன்மையாகன கண்டனத்திற்கு உரியது. ஒரு திரைப்படத்திற்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லையே.

மக்கள் பிரச்சினை
வேலைவாய்ப்புகள், குடி தண்ணீர், டெங்கு காய்ச்சல், பன்றிக்காய்ச்சல் என மக்கள் பல கஷ்டங்களைபடும் நிலையில், திரைப்படத்தின் பின்னால் ஆட்சியாளர்கள் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். மக்கள் மீது இவ்வளவுதான் அக்கறை. ஓட்டுப்போட்டு ஜெயிக்க வைத்த மக்களுக்கு அமைச்சர்கள் ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

குளிர்விட்டுப்போனது
ஜெயலலிதா இல்லாததால் நடிகர்களுக்கு குளிர்விட்டுப்போனதாக அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். ஆனால் ஜெயலலிதா இல்லாததால் அமைச்சர்களுக்கும் குளிர்விட்டுப்போயுள்ளது. இவ்வாறு பிரேமலாதா விஜயகாந்த் தெரிவித்தார்.
-
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
ராஜ்யசபா சீட்.. ஓகே சொன்ன விஜய்! 3 மாதங்களில் 2 எம்பிக்கள்! கணக்கு போட்டு தூக்கிய காங்கிரஸ்! -
புதிய டிஜிபி-யுடன் விஜய் தலைமைச் செயலக சேம்பரில் 'ஒரு மணிநேர' க்ளோஸ் டோர் மீட்டிங்.. 3 முக்கிய அசைன்மென்ட்! -
மகள் பற்றி விஜய் சந்தோஷமாக பேசினாரு.. அவ்ளோ மகிழ்ச்சி அவருக்கு! சர்ச்சைகளுக்கு மத்தியில் நடிகை ஓபன் -
உடனே வாங்க.. அதிகாரிகளை மீட்டிங் ரூமிற்கு அழைத்த விஜய்.. துளைச்சு எடுத்துட்டாரே.. வாத்தி ரெய்டு! -
மகள் கல்யாணத்திற்காக முதல்வர் விஜய்யை சந்தித்த குஷ்பு குடும்பம்.. வெளியே வந்ததும் உருக்கமான பதிவு -
முடிவுக்கு வந்த 9 மாத காத்திருப்பு.. தமிழக புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் இன்று பொறுப்பேற்பு! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம்












Click it and Unblock the Notifications