விழுப்புரம் டூ வேலூர்.. திருப்பூர் டூ திண்டுக்கல்.. ஆசிரியர்களுக்காக அரசின் அறிவிப்புகள்
வேலூர்: தமிழ்நாட்டில் திருப்பூர், ராணிப்பேட்டை, நாகர்கோவில், சிவகங்கை, தஞ்சாவூர், தென்காசி, திருவாரூர், தேனி, புதுக்கோட்டை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் தலைமை ஆசிரியர்கள் இடைநிலை, தனியார் பள்ளிகள், தொடக்கக் கல்வி மாவட்ட கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு பெற்றிருக்கின்றனர். இதேபோல் ராமநாதபுரம், நீலகிரி, தர்மபுரி, சேலம், ராணிப்பேட்டை, வேலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்ட கல்வி அலுவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு ஆண்டுதோறும் நடத்தப்படுவது வழக்கம். இந்த கலாந்தாய்வை பொறுத்தவரை எமிஸ் தளம் வழியாக வெளிப்படையாகவே நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான தொடக்க கல்வித்துறை பள்ளிகளில் தலைமை ஆசிரியர், பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கவுன்சிலிங் கடந்த ஜூலை 2 ம் தேதி தொடங்கிய நிலையில், வரும் ஜூலை 30 வரை அந்தந்த மாவட்டங்களில் நடக்கிறது. பணியிட மாறுதல் கோரி 38 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருக்கிறார்கள். அவர்கள் பணியிட மாற்றம் செய்யப்படுகிறார்கள்.

இந்நிலையில் 34 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தமிழ்நாடு பள்ளிக் கல்வி பணி விதிகளின்படி, பதவி உயர்வு வழங்கி தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
பதவி உயர்வு
பதவி உயர்வு பெற்ற தலை ஆசிரியர்கள் யார் யார்? தலைமை ஆசிரியர்கள் வடிவேல், கண்ணன், சாவித்திரி, சண்முகநாதன், பழனிவேலு, கார்த்திகேசன், சாந்தி, சுருளிவேல், புஷ்பா, மரியஜான் பிரிட்டோ, இளங்கோவன், விஷ்ணுமூர்த்தி, கனகராணி, விஜயன், தெட்சிணாமூர்த்தி, ஆரோக்கியராஜூ, பாரதி, சுரேஷ், மரகதவள்ளி, மணிமாலா, ராஜாராம், செல்வம், சத்யபிரியா, இளமதி, புருஷோத்தமன், ரவிந்திரன், சித்ராதேவி, கார்மேகம், அருள்செல்வன், இன்பராணி, ராஜேந்திரன், அஜிதா, கிளாடிசுகுணா, மணிமாறன் ஆகியோர் பதவி உயர்வு பெற்றுள்ளனர். இவர்கள் திருப்பூர், ராணிப்பேட்டை, நாகர்கோவில், சிவகங்கை, தஞ்சாவூர், தென்காசி, திருவாரூர், தேனி, புதுக்கோட்டை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இடைநிலை, தனியார் பள்ளிகள், தொடக்கக் கல்வி மாவட்ட கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளார்கள்.
இதேபோல், தமிழ்நாடு பள்ளிக்கல்வி பணி விதிகளில் வகுப்பு-4-ன் கீழ் வரும் மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் அதனை சார்ந்த பணியிடங்களில் பணி புரிந்து வரும் அலுவலர்கள் 25 பேரை பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்கள்.
யார் யார்
இடமாற்றம் செய்யப்பட்ட மாவட்ட கல்வி அலுவலர்கள் யார் யார்? மாவட்ட கல்வி அலுவலர்கள் காளிதாஸ், ஜோதி லட்சுமி, ஜெயந்தி, மாயகிருஷ்ணன், வெற்றிச்செல்வி, நளினி, திருநாவுக்கரசு, மோகன், கார்த்திகேயன், சுகப்பிரியா, ஞானசங்கர், இஸ்மாயில், சண்முகவேல், அருள், கவுசர், ரமேஷ், செந்தில்குமார், பழனி, ராஜூ, தங்கராசு, விஜயக்குமார், சின்னமாது, ஜான்பிரிட்டோ, சங்கர், துரைராஜ் ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இடமாற்றம்
இந்த மாவட்ட கல்வி அலுவலர்கள் விழுப்புரம், ராமநாதபுரம், நீலகிரி, தர்மபுரி, சேலம், ராணிப்பேட்டை, வேலூர், பெரம்பலூர், கடலூர், திருநெல்வேலி, காஞ்சீபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் தொடக்கக் கல்வி, இடைநிலை, தனியார் பள்ளிகள் மாவட்ட கல்வி அலுவலராக இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்கள். இதன் மூலம் பள்ளிக்கல்வித் துறையின் கீழ் வரும் மாவட்ட கல்வி அலுவலர் அனைத்து பணியிடங்களும் நிரப்பப்பட்டிருப்பதை அதிகாரப்பூர்வமாக பள்ளிக்கல்வி துறை அறிவித்துள்ளது.
2,342 இடைநிலை ஆசிரியர்கள்
இது ஒருபுறம் எனில், அரசுப் பள்ளிகளில் 2,342 இடைநிலை ஆசிரியர்கள் பணிநியமனத்துக்கான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக தொடக்கக் கல்வித் துறை இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியுள்ளதாவது:" தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் உள்ள இடைநிலை ஆசிரியர் காலிப் பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) மூலம் நடத்தப்பட்ட போட்டித் தேர்வில் தகுதி பெற்று மதிப்பெண்கள் மற்றும் இனச்சுழற்சி அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட 2,342 பேர் கொண்ட தேர்வுப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
எங்கு நடைபெறுகிறது:
இவர்களுக்கான நேரடி பணி நியமன கலந்தாய்வு சென்னையில் நடத்தப்பட்டு ஆணை வழங்கப்படவுள்ளது. அத்துடன் தேர்வு செய்யப்பட்டவர்களின் வீட்டு முகவரியுடன்கூடிய பெயர்ப் பட்டியல் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. அதன் பொருட்டு இடைநிலை ஆசிரியர் பணியிடத்துக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ஜூலை 14 முதல் 18-ம் தேதி வரை சென்னை சேத்துப்பட்டு எம்சிசி பள்ளி, கீழ்ப்பாக்கம் சிஎஸ்ஐ பெயின்ஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி ஆகிய இரு பள்ளிகளில் நேரடி முறையில் இட ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு நடைபெறவுள்ளது.'
முதல்வர் ஸ்டாலின் வழங்குகிறார்
ஆகவே ஆசிரியர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் முன்னுரிமைப் பட்டியல் வரிசைப்படி கலந்தாய்வு நடைபெறும் நேரத்துக்கு முன்பாகவே மையத்துக்கு வருகை புரிய வேண்டும். தாமதமாக வருபவருக்கு அந்த நேரத்தில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு மட்டுமே தேர்வுசெய்து கொள்ள அனுமதிக்கப்படும். இதையடுத்து, பணிநியமனம் பெறுபவருக்கு முதல்வர் ஸ்டாலின் நியமன ஆணைகளை வழங்குவார். அந்த விழா சென்னை பெரியமேடு நேரு உள் விளையாட்டு அரங்கில் ஜூலை 23-ம் தேதி நடைபெறும்" இவ்வாறு தொடக்கக் கல்வித் துறை இயக்குநரகம் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications