கோவை இளைஞரை காதலித்த வேலூர் இளம் பெண்.. சிக்கிய 3 பக்க கடிதம்.. ஆடிப்போன உறவுகள்

Subscribe to Oneindia Tamil

வேலூர்: வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே பல்லலகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் வஜ்ஜிரவேல். இவரது மனைவி லட்சுமி. இவர்களின் மகள் கோட்டீஸ்வரி என்ற இளம் பெண் அஞ்சல் வழியில் டிப்ளமோ நர்சிங் படித்து வந்தார். அத்துடன் சென்னையில் ஹோம்கேர் பராமரிப்பு வேலை செய்து வந்துள்ளார். இவர் வீட்டில் இருந்த கோலம் உறவினர்களை ஆடிப்போக வைத்துள்ளது. கோவையைச் சேர்ந்த இளைஞரை காதலித்த இளம் பெண் எழுதிய கடிதத்தை போலீசார் கைப்பற்றி உள்ளனர்.

காதல் விவகாரம் இன்றைக்கு சாதாரண ஒரு விஷயம் ஆகிவிட்டது. காதலிப்பதும், காதல் பிடிக்கவில்லை என்றால் பிரிந்து செல்வதும் சாதாரணமாக மாறிவிட்டது. அதேநேரம் காதலித்தவர்கள் தங்கள் காதல் பிடிக்காமல் விலகும் போது, இருவரும் ஏற்றுக்கொண்டு பிரிந்து சென்றால் பிரச்சனை இல்லை.. மாறாக யாராவது ஒருவர் காதலை கைவிட மறுக்கும் போது அல்லது காதலித்து ஏமாற்றும் போது தாங்கி கொள்ள முடியாமல் தவறான முடிவெடுக்கிறார்கள்.

what did the young woman from Vellore Peranampattu who fell in love with a Coimbatore youth do

சிலர் காவல் நிலையத்தில் புகார் அளித்து சிறையில் தள்ளுகிறார்கள். இன்றைக்கு இளம் பெண்கள், காதல் விவகாரத்தில் அவசரப்பட்டு முடிவெடுப்பது நடக்கிறது. எதிர்காலத்தை பற்றி யோசிக்காமல் தவறான முடிவெடுத்து வாழ்க்கையை தொலைக்கிறார்கள். வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பகுதியில் நடந்த சம்பவம் பற்றி பார்ப்போம்.

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே பல்லலகுப்பம் கிராமத்தில் வாழ்ந்து வருபவர் வஜ்ஜிரவேல். இவரது மனைவி லட்சுமி. இவர்களின் மகள் கோட்டீஸ்வரிக்கு 21 வயது ஆகிறது. இவர் அஞ்சல் வழியில் டிப்ளமோ நர்சிங் படித்து வந்தார். மேலும் கடந்த ஆண்டு சென்னையில் ஹோம்கேர் பராமரிப்பு வேலை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இவர் தனது வீட்டில் உயிரை மாய்த்துக் கொண்டார்.

அவர் இருந்த கோலத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த லட்சுமி உடனே மேல்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் குடியாத்தம் துணை டிஎஸ்பி ராமச்சந்திரன், பேரணாம்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன், மேல்பட்டி போலீசார் ஆகியோர் வந்தனர். அங்கிருந்த கோட்டீஸ்வரியின் உடலை கைப்பற்றி அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் விசாரணையில், இளம்பெண் கோட்டீஸ்வரி இறப்பதற்கு முன்பு எழுதியுள்ள 3 பக்க கடிதத்தில், சென்னையில் வேலை செய்து வந்தபோது ஒரு வாலிபரை காதலித்து வந்ததாகவும், தற்போது அவர் ஏமாற்றியதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பேரணாம்பட்டு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -2464000 (24 மணி நேரம்)

மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+