எல்லாத்துக்கும் காரணம் அந்த "புல்லட்" மகேஸ்வரியாமே.. மண்ணெண்ணையுடன் வந்த மணிமேகலை.. அதிர்ந்த போலீஸ்

குழந்தைகளுடன் கலெக்டர் அலுவலகத்தில் ஒரு பெண் தற்கொலைக்கு முயன்றார்

Subscribe to Oneindia Tamil

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியை சேர்ந்த தம்பதி சீனிவாசன் - மகேஸ்வரி.. சீனிவாசனுக்கு 44 வயசு.. மகேஸ்வரிக்கு 40 வயசு. இந்த ஜோடி கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பவர்கள்.

சாராயம் காய்ச்சுவதில் மகேஸ்வரிதான் ரொம்ப எக்ஸ்பர்ட் என்கிறார்கள்.. பல வருஷமாகவே இந்த தம்பதிக்கு இதேதான் வேலை..

ஏற்கனவே சில வருடங்களுக்கு முன்பு மகேஸ்வரியை குண்டர் சட்டத்திலும் போலீசார் கைது செய்திருக்கிறார்கள்.

சாராயம்

சாராயம்

ஆனால், ஜெயிலில் இருந்து வெளியே வந்த மகேஸ்வரி மறுபடியும் சாராயம் காய்ச்சிவிடுவார்.. இவர் சாராயம் காய்ச்சினால், சீனிவாசன் கஞ்சா விற்பனை செய்வாராம்.. இப்படித்தான் ஒருமுறை மகேஸ்வரியை கைது செய்ய போகும்போது, ஒரு பெண் போலீஸின் கையை மகேஸ்வரி முறித்துவிட்டார்.. இன்னொரு முறை கைது செய்ய முயன்றபோது ஒரு போலீஸ் அதிகாரியை கடித்துவிட்டு, வீட்டுக்குள் போய் உள்ளே கதவை பூட்டிக் கொண்டவர்தான் இந்த மகேஸ்வரி..

 பைக் - புல்லட்

பைக் - புல்லட்

இப்படி பலமுறை போலீஸ்காரர்களின் கையை கடிப்பது, முறிப்பது என முரண்டு பிடிப்பார்.. அதுமட்டுமல்ல, மகேஸ்வரியை பொறுத்தவரை அந்த ஊர் தாதா போலதான் இருப்பாராம்.. பெரிய புல்லட், பைக்கில்தான் ஊருக்குள் ரவுண்டு அடித்து கொண்டே இருப்பார்.. யாராவது தன்னை பற்றி புகார் தந்துவிட்டால் போதும், மகேஸ்வரி அவர்களின் வீடுபுகுந்து தெருவில் இழுத்து போட்டு உதைத்து விடுவாராம்.. எனினும் போலீசார் இவரை கைது செய்து கொண்டே இருக்கிறார்கள்..

 மகேஸ்வரி

மகேஸ்வரி

இதுவரை சுமார் 12 முறை குண்டர் சட்டத்தின் கீழ் போலீசார் இவரை கைது செய்துள்ளனர்... 6 மாதமாக மகேஸ்வரி கைதாகி உள்ளே இருக்கிறார்.. இந்நிலையில், மகேஸ்வரின் கூட்டாளி ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.. கடந்த மாதம் அப்பகுதியில் உள்ள கோயில் திருவிழாவின்போது சாராய கும்பலுக்கும், இளைஞர்களுக்கும் தகராறு நடந்துள்ளது.. இதில், சாராய வியாபாரியின் அடியாட்கள் சிலர் பயங்கர ஆயுதங்களுடன் வந்து இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தியதால் கை, கால், மண்டை உடைந்துவிட்டன..

 குண்டர் சட்டம்

குண்டர் சட்டம்

இதுகுறித்து இளைஞர்கள் தாலுக்கா போலீசில் புகார் தரவும், அதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், நேதாஜி நகர் பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவரை கைது செய்தனர்.. இவரை விரைவில் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய வாய்ப்பிருப்பதாகவும் தெரிகிறது.. இந்த விஷயம் தெரிந்து, முருகனின் மனைவி 30 வயது மணிமேகலை ஆவேசம் அடைந்தார்.. 8 வயது மகள், 7 வயது மகன், என தன் குழந்தைகளுடன் இன்று திருப்பத்தூர் கலெக்டர் ஆபீசிற்கு வந்தார்..

 கலெக்டர் ஆபீஸ்

கலெக்டர் ஆபீஸ்

கலெக்டர் தலைமையில் நடந்து கொண்டிருந்த குறை தீர்ப்பு கூட்டத்திலும் பங்கேற்றார்.. அப்போதுதான், திடீரென மணிமேகலை கையில் மறைத்து கொண்டு வந்திருந்த மண்ணெண்ணெயை எடுத்து தன் மீது ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயற்சித்தார்... பிறகு, குழந்தைகள் மீதும் வேக வேகமாக தெளித்தார்.. இதனால் அங்கிருந்தவர்கள் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

சமாதானம்

சமாதானம்

பாதுகாப்பு போலீசார், அதிகாரிகள் பதறிப்போய் மணிமேகலை கையில் இருந்த மண்ணெண்ணெய் கேனை பிடுங்கி எறிந்து அவரை மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.. கணவர் மீதான புகாரை வாபஸ் பெறக்கோரியிருந்த நிலையில், அதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மணிமேகலையிடம் சமாதானப்படுத்தப்பட்டது.. எனினும், கலெக்டர் ஆபீசில் திடீரென பெண் ஒருவர் 3 குழந்தைகளுடன் தீக்குளிக்க முயற்சித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+