Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆம்பூர் ஏட்டு காளிதாஸ்.. வாணியம்பாடியில் வண்டியில் வந்தவருக்கு காத்திருந்த எமன்.. இப்படியா ஆகணும்

Subscribe to Oneindia Tamil

வேலூர்: திருப்பத்தூர் மாவட்டம், புதூர்நாடு மலை கிராமத்தை சேர்ந்த காளிதாஸ் என்பவர் ஆம்பூர் காவல் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வந்தார். இவர் நாட்டறம்பள்ளி பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல பணியை முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது தான் யாரும் எதிர்பார்க்காத சம்பவம் நடந்தது. அங்கிருந்த ஒரு தடுப்பு சுவர் போலீஸ் ஏட்டு காளிதாசுக்கு எமனாக மாறியது.

இரவு நேரங்களில் சாலையில் இருசக்கர வாகனத்தில் பயணிக்கும் போது மிகவும் கவனமாக செல்ல வேண்டும்.. ஏனெனில் சாலையில் பள்ளங்கள் இருந்தால் தெரியாது. புதிதாக நீங்கள் செல்லும் சாலை என்றால் இன்னும் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். சாலைகளில் பொதுவாக சிறிய பள்ளங்கள் அதிக அளவில் இருக்கும். திடீரென ஆங்காங்கே இருக்கும் பள்ளத்தை கவனிக்காமல் விட்டால் பெரிய விபத்திற்கு காரணமாகிவிடும்.

vellor Tirupattur police

கார்கள், லாரிகள், பேருந்துகளை விட பள்ளம் நிறைந்த சாலைகள் இருசக்கர வாகன ஓட்டிகளையே பாதிக்க வைக்கிறது. அதேபோல் இருசக்கர வாகன ஓட்டிகள் அதிகம் சந்திக்கும் இன்னொரு சிக்கல் என்றால், அது சாலையில் உள்ள தடுப்பு சுவர் தான். தடுப்பு சுவரில் சிக்கி விபத்தில் சிக்கும் வாய்ப்பு உள்ளது. அப்படித்தான் வாணியம்பாடி பகுதியில் நடந்துள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம், புதூர்நாடு மலை கிராமத்தை சேர்ந்த 37 வயதாகும் காளிதாஸ் என்பவர் ஆம்பூர் காவல் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வந்தார். இவர் வேலைக்கு சென்று வருவதற்காக நாட்டறம்பள்ளி பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வசித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல பணியை முடித்து விட்டு இருசக்கர வாகனத்தில் நாட்டறம்பள்ளிக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.

போலீஸ் ஏட்டு காளிதாஸ், வாணியம்பாடி- புதூர் பகுதியில் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சென்ற போது திடீரென சாலையில் உள்ள தடுப்பு வேலி மீது அவரது இருசக்கர வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் தலை மற்றும் முகம், தாடை உள்ளிட்ட பகுதிகளில் படுகாயம் அடைந்த ஏட்டு காளிதாஸ், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதுகுறித்து அந்த பகுதி மக்கள் தகவல் அளித்தனர். அதன்பேரில் விரைந்து வந்த வாணியம்பாடி நகர போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா, வாணியம்பாடி துணை காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். விபத்தில் உயிரிழந்த போலீஸ் ஏட்டுக்கு வளர்மதி என்ற மனைவியும் ஒரு மகளும், மகனும் உள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+