தமிழக அரசின் புதிய திட்டம்.. 35 சதவீதம் மானியத்துடன் கடன்.. தொழில் முனைவோருக்கு அருமையான வாய்ப்பு
வேலூர்: ஆதிதிராவிட, பழங்குடியின சமுகத்தை சேர்ந்த ஆர்வம் உள்ள தொழில் முனைவோருக்கு கடன் வழங்கும் திட்டம் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் ஆகும். இந்த திட்டப்படி வேலூர் மாவட்டத்தில் 15 பயனாளிகளுக்கு ரூ.5.5 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க விரும்பும் புதிய தொழில் முனைவோர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்றும் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் தொழில், பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க வேண்டும் என்றும் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கவும் தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஒவ்வொரு மாவட்டங்களில் உள்ள தொழிற்மையம் மூலம் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர்கள் மற்றும் புதிய தொழில் முனைவோர்களுக்கு பல்வேறு திட்டங்களில் வங்கிகள் மூலம் கடனுதவி மற்றும் மானியம் வழங்கப்படுகிறது.

நீட்ஸ், அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் போன்ற திட்டங்கள் மூலம் புதிய தொழில் முனைவோர்களுக்கு அவர்கள் தொடங்க உள்ள புதிய தொழில்களுக்கு ஏற்ப அரசு மானியத்துடன் கடனுதவி வழங்கி வருகிறது. இதன் மூலம் புதிய தொழில் முனைவோர்கள் உருவாகி வேலையில்லாத இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெறுவார்கள் என்பதால் அரசு இந்த திட்டத்தை எல்லா மாவட்டங்களிலும் செயல்படுத்தி வருகிறது.
இதில் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் என்பது ஆதிதிராவிட, பழங்குடியின தொழில் முனைவோரின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டம் ஆகும். இந்த திட்டத்தில் வேலூர் மாவட்டத்தில் இந்த ஆண்டில் 15 பயனாளிகள் பயன் அடைந்திருக்கிறார்கள். இந்த திட்டத்தின் கீழ் ரூ.5.5 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வேலூர் மாவட்ட தொழிற்மைய அதிகாரிகள் கூறுகையில், ஆதிதிராவிட, பழங்குடியின சமுகத்தை சேர்ந்த ஆர்வம் உள்ள தொழில் முனைவோருக்கு கடன் வழங்குவதற்காக அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின சமூகத்தை சேர்ந்த 21 வயது முதல் 55 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். வேளாண்மையை தவிர உற்பத்தி, வணிகம், சேவை சார்ந்த புதிய தொழில் தொடங்க கடன் உதவி பெற முடியும்.
புதிய தொழில் திட்டத்தின் மொத்த மதிப்பீட்டில் 35 சதவீதம் மானியம் வழங்கப்படும். அதாவது அதிகபட்சமாக ரூ.1.50 கோடி வரை கடன் பெறலாம். மொத்த திட்டத்தில் 65 சதவீதம் வங்கிக்கடனும், 35 சதவீதம் அரசின் மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்திற்காக வேலூர் மாவட்டத்தில் இந்த நிதியாண்டில் 18 பயனாளிகளுக்கு ரூ.5 கோடியே 89 லட்சம் கடன் உதவியும், ரூ.2 கோடியே 6 லட்சம் மானியமும் ஒதுக்கப்பட்டது. இதுவரை 15 பயனாளிகள் 1 கோடியே 95 லட்சம் மானியத்தில் ரூ.5 கோடியே 57 லட்சம் கடனுதவி பெற்றுள்ளார்கள்
இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க விரும்பும் புதிய தொழில் முனைவோர்கள் ஆன்லைனில் விண்ணபிக்கலாம். பின்னர் விண்ணப்பித்த சான்றிதழ், திட்ட அறிக்கை உள்ளிட்டவற்றை வேலூர் காட்பாடி காந்திநகரில் இயக்கி வரும் மாவட்ட தொழிற்மையத்தில் நேரில் வழங்க வேண்டும்" இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ், ஆர்வமுள்ள புதிய தொழில் முனைவோர் முன்மொழியும், நேரடி வேளாண்மை தவிர்த்த, உற்பத்தி, வாணிகம் மற்றும் சேவை சார்ந்த எந்தத் தொழில் திட்டத்துக்கும் கடனுதவியோடிணைந்த மானியம் வழங்கப்படும். அது
உணவுப்பதப்படுத்தல், ஆயத்த ஆடைகள் தைத்தல், ப்ளை ஆஷ் செங்கல், சிமிண்ட் செங்கல், கயிறு மற்றும் கயிறு நார்சார்ந்த பொருட்கள், மளிகைக்கடை, வாணிகப் பொருட்களின் மொத்த மற்றும் சில்லறை விற்பனை, அழகு நிலையம், உடற்பயிற்சிக் கூடம், நகரும் அலகுகள் கொண்ட டிராவல்ஸ், காங்கிரீட் மிக்சர், ஆம்புலன்ஸ், ரிக் போரிங், ரைஸ் மில், ஆயில் மில் உள்ளிட்ட எந்தத் திட்டமாகவும் இருக்கலாம்.
இயங்கிக் கொண்டிருக்கும் தொழில் அலகுகளின் விரிவாக்கம், பல்துறையாக்கம், நவீனமாக்கல், தொழில்நுட்ப மேம்பாட்டு முன்மொழிவுகளுக்கும் உதவி வழங்கப்படும். மானியம் மொத்த திட்டத் தொகையில் 35% ஆகும். மானிய உச்சவரம்பு ரூ.1.5 கோடி. இதுவன்றி, கடன் திரும்பச் செலுத்தும் காலம் முழுதும் 6% வட்டி மானியமும் வழங்கப்படும். தொழில் முனைவோர் தம் சொந்த நிதியில் செயல்படுத்தும் திட்டங்களுக்கும் மானியம் உண்டு.
இத்திட்டத்தில் பயன்பெற www.msmeonline.tn.gov.in என்ற இணைதளம் வழியாக விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். அந்தந்த மாவட்டங்களில் உள்ள மாவட்ட தொழில் மையத்தையும் அணுகி முழு விவரங்களை அறியலாம். பட்டியல் மற்றும் பழங்குடி பிரிவினர் தொழில் தொடங்க சிறப்பான திட்டமான இந்த திட்டத்தை பயன்படுத்தி அவர்கள் தொழில் தொடங்கி முன்னேறலாம்.
-
ஆப் லோன்களுக்கு மாற்றாக உள்ள சூப்பர் வழிகள்.. கடன் வாங்கியவர்களுக்கு லட்சக்கணக்கில் லாபம் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ!












Click it and Unblock the Notifications