எங்க கூட "உறவு" வெச்சுக்கணும்.. மறுத்த இளைஞனின் கழுத்தை நெறித்து கொன்ற நண்பர்கள்!
தன்பால் உறவுக்கு மறுப்பு சொன்ன இளைஞன் கொலை செய்யப்பட்டுள்ளார்
Recommended Video
வேலூர்: தன்பால் உறவுக்கு மறுப்பு சொன்ன இளைஞரை அவரது நண்பர்களே கழுத்தை நெறித்து கொலை செய்தது வேலூர் மாவட்ட மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நாட்றம்பள்ளி அடுத்த வெலக்கல் நத்தம் பகுதியை சேர்ந்தவர் ஆனந்த். இவருக்கு 20 வயசு. இவருடைய நண்பர்கள் பாலாஜி, கார்த்திக்.
வாட்ஸ்ஆப் குரூப் மூலம் பழக்கமானவர்கள். பாலாஜிக்கு 23 வயசு, கார்த்திக்கு 22 வயசாகிறது. ஆனால் நண்பர்களை ஆனந்த் ஒருமுறைகூட நேரில் சந்தித்து இல்லை.

நண்பர்கள்
இந்நிலையில், கடந்த மாதம் 13-ம் தேதி நாட்றம்பள்ளிக்கு வருமாறு, ஆனந்தை கார்த்திக்கும், பாலாஜியும் கூப்பிட்டுள்ளனர். நண்பர்கள் கூப்பிட்டதால் ஆனந்தும் சொன்ன இடத்துக்கு சென்றார். அப்போது ஆனந்தை தன்பால் உறவுக்கு இரு நண்பர்களும் கட்டாயப்படுத்தி உள்ளனர்.

கொலை
ஆனால் இதற்கு ஆனந்த் மறுப்பு சொல்லி உள்ளார். பலமுறை தொடர்ந்து வற்புறுதியுத்தியும் ஒத்து கொள்ளாததால், ஆத்திரமடைந்த நண்பர்கள் 2 பேரும் ஆனந்தை கொலை செய்து பச்சூர் அருகே ரயில்வே தண்டவாளத்தில் வீசி சென்றுவிட்டனர்.

தற்கொலை?
இதையடுத்து ரயில்வே போலீசார், ஆனந்தின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வந்தனர். ஒருவேளை ரயில் முன் விழுந்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்றும், காதல் தோல்வி அல்லது வேறு ஏதாவது பிரச்சனையால் இருக்கலாம் என்று சந்தேகித்து வந்தனர்.

கைது
அந்த சமயத்தில்தான், ஆனந்தின் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வந்தது. அதில், கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது. இதன்பின்னர் போலீசார், ஆனந்தின் செல்போன் நம்பர்களை ஆய்வு செய்தபோதுதான், நண்பர்கள் இருவரிடம் இருந்து கடைசியாக அழைப்பு வந்திருந்தது தெரியவந்தது. பிறகு, அவர்களை பிடித்து விசாரித்ததில், கொலைக்கான காரணத்தை தெரிவித்தனர். இதையடுத்து, இருவரும் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா












Click it and Unblock the Notifications