எங்கள் எதிரி திமுக தான்.. இப்பவும் விட்டுத் தராம முட்டுக் கொடுக்கிறாரே ராஜு!
ஆர்.கே.நகரில் தினகரனின் வெற்றிமுகத்தை தொடர்ந்து அதிமுகவின் ஓரே எதிரி திமுக தான் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
மதுரை: ஆர்.கே.நகர் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் பாதிக்கு பாதி வாக்கு வித்தியாசத்தில் தினகரன் முன்னிலையில் உள்ளதால் ஆளுங்கட்சி அமைச்சர்கள் கொஞ்சம் அடக்கி வாசிக்க ஆரம்பித்துள்ளனர்.
மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செல்லூர் ராஜூ, ஆர்.கே.நகர் தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளியாகும் வரை அதனை பற்றி கருத்து தெரிவிக்க முடியாது எனக் கூறினார். மேலும் தினகரன் வென்று ஆளுங்கட்சிக்கு நெருக்கடி தருவாரா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், யாரும் அரசுக்கோ, அதிமுகவுக்கோ அப்படி நெருக்கடி தரமுடியாது என்று கூறினார்.

அதிமுக மிகப்பெரிய ஆலமரம் அதனை யாரும் எதுவும் செய்துவிட முடியாது என்று கூறிய அவர், தங்களின் ஒரே எதிரி திமுக தான் என்றார். இதுவரை தினகரன் மற்றும் சசிகலாவை எதிர்த்து வந்த ஆளுங்கட்சியினர் தினகரனின் வெற்றிமுகத்தை தொடர்ந்து தற்போது தங்கள் நிலையிலிருந்து மாறி ஜகா வாங்க ஆரம்பித்துள்ளதாக தெரிகிறது.
திமுக - அதிமுக எதிரி கட்சிகள் என்று பலவருடமான பழைய மாவில் தோசை சுட்டு மக்களை ஏமாற்றி வந்த அதிமுகவினர் மீண்டும் தற்போது அதே மாவை இப்போது கையில் எடுத்திருப்பதாக தெரிகிறது. தினகரனும் மதுரையில் இருக்கும் இந்த வேளையில் மதுரையில் உள்ள செல்லூர் ராஜூவின் இந்த நழுவில் பதில் தினகரனுக்கு விடும் சமாதான தூதாகவும் கருதப்படுகிறது.
இந்த சம்பவங்களை கூட்டி கழித்து பார்த்தால், தினகரன் அடிக்கடி கூறும் ஒரு வாக்கியம் தொடர்ந்து நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை. "அதிமுகவில் எங்களின் ஸ்லீப்பர் செல்கள் நிறைய பேர் உள்ளனர்"
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications