சட்டசபையில் அமைச்சரின் பதிலில் திருப்தியில்லை... திமுக வெளிநடப்பு - வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: காவிரி, சிறுவாணி பிரச்சனை தொடர்பாக எதிர்கட்சியினர் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர் அளித்த பதில் திருப்தியளிக்கவில்லை எனகூறி சட்டசபையில் இருந்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
இது குறித்து எதிர்கட்சித் தலைவர் முக ஸ்டாலின் கூறியதாவது: சிறுவாணி ஆற்றில் கேரளா அரசு அணை கட்ட மத்திய அரசு அனுமதி அளித்ததற்குக் கண்டனத்திற்குரியது. சிறுவாணி, காவிரியாறு பிரச்னை தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டத்தைக் கூட்டி விவாதித்து முடிவெடுக்க வேண்டும். மேலும், சிறுவாணி ஆற்றில் கேரளா அரசு அணைகட்டுவதை எதிர்த்து பேரவையில் தீர்மாணம் நிறைவேற்ற வேண்டும் என்று கூறினார்.












Click it and Unblock the Notifications