கரூர் மாணவி பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட வழக்கு... குற்றவாளிக்கு சாகும் வரை சிறை- வீடியோ
Subscribe to Oneindia Tamil
கரூர்: கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் பிச்சம்பட்டியைச் சேர்ந்த வனிதா என்ற பிளஸ் 2 மாணவி கடந்த 2014ம் ஆண்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவர் கைது செய்யப்பட்டார். போலீசாரின் விசாரணையில் வனிதாவைப் பலாத்காரம் செய்து கொலை செய்ததை அவர் ஒப்புக் கொண்டார். அதனைத் தொடர்ந்து ராமச்சந்திரனுக்கு வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். இந்த கொலை சம்பவத்தின் போது ராமச்சந்திரனுக்கு உதவியதாக கைது செய்யப்பட்ட மணிகண்டனுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications