தொடரும் இலங்கை கடற்படையின் தாக்குதல்... புதுவையில் விடுதலை வேங்கை அமைப்பினர் ஆர்ப்பாட்டம்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
புதுச்சேரி: எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக தமிழக மற்றும் புதுவை மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் தாக்குவதும், சிறை பிடிப்பதும் தொடர்கதையாக உள்ளது. அந்தவகையில் சமீபத்தில் காரைக்கால், நாகை மீனவர்கள் கோடியக்கரை அருகே நடுக்கடலில் இலங்கைக் கடற்படையினரால் கண்மூடித்தனமாகச் சுடப்பட்டனர். இந்த தாக்குதல் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், உலக மீனவர் நாளையொட்டி புதுவையில் விடுதலை வேங்கை அமைப்பினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட அவர்கள் முயற்சித்ததால், போலீசாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் 30க்கும் மேற்பட்டோரைப் போலீசார் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications