வெடிகுண்டு வழக்கில் கைதான 4 பேர்... பெங்களூரு கோர்ட்டில் ஆஜர்படுத்த மதுரை நீதிபதி உத்தரவு- வீடியோ
Subscribe to Oneindia Tamil
மதுரை: பெங்களூரு, மைசூர், கேரளா உட்பட 5 இடங்களில் வெடிகுண்டு வைத்த வழக்கில் அப்பாஸ் அலி, கரீம் ராஜா, சம்சுதின் உள்ளிட்ட 4 பேரை தமிழக மற்றும் கேரள போலீசார் கைது செய்தனர். இவர்கள் 4 பேரும் மேலூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். இவர்கள் மீது 15 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலூர் நீதிமன்ற நீதிபதி செல்வகுமார் இவர்களிடம் விசாரணை நடத்தினார். விசாரணைக்குப் பின்னர் அவர்கள் 4 பேரையும் டிசம்பர் 1ம் தேதி பெங்களூரு என்.ஐ.ஏ கோர்ட்டில் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications