மத்திய, மாநில அரசுகள் உதவ வேண்டும்... கலெக்டரிடம் மனு கொடுத்த தங்கம் வென்ற கபடி வீராங்கனை- வீடியோ
Subscribe to Oneindia Tamil
விழுப்புரம்: ஐந்தாவது ஆசிய கடற்கரை விளையாட்டு போட்டி‚ வியட்நாமில் நடைபெற்றது. இதில், கபடி போட்டியில் 6 பேர் கொண்ட இந்திய குழு கலந்து கொண்டு தங்கம் வென்றது. இக்குழுவில் திருக்கோவிலுார் அடுத்த சோழவாண்டியபுரம் கிராமத்தை சேர்ந்த சவரிமுத்து மகள் அந்தோணியம்மாள் என்பவரும் ஒருவர். இவருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில், 'மாநில அரசும், மத்திய அரசும் தனக்கு மேலும் உதவி புரிந்தால், அடுத்து நடைபெற உள்ள கபடி உலகப் போட்டியில் கலந்து கொண்டு பதக்கம் வெல்ல வாய்ப்பாக அமையும்' என அந்தோணியம்மாள் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக விழுப்புரம் மாவட்ட ஆட்சியாளரை சந்தித்து அவர் மனுவும் அளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications