பெற்றோர்களுக்கு எச்சரிக்கை! குடத்தில் சிக்கிய குழந்தை.. அப்படியே ஆட்டோவில் தூக்கிச்சென்ற தாய்
விழுப்புரம்: திருவெண்ணைநல்லூர் அருகே காலி சில்வர் குடத்திற்குள் சிக்கிக்கொண்ட சிறுவனை ஒரு மணி நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் வெளியே கொண்டு வந்தனர்.
Recommended Video
பெரியசெவலை புது காலனி பகுதியை சேர்ந்தவர் செல்வம். இவருக்கு பாக்கியலட்சுமி என்ற மனைவியும் 3 வயது யஸ்வந்த் என்ற ஆண் குழந்தையும் உள்ளது. இந்த நிலையில், குழந்தை யஸ்வந்த் தனது வீட்டில் வைத்திருந்த காலி சில்வர் குடத்திற்குள் இறங்கி விளையாடிக் கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராவிதமாக குழந்தையின் இரு கால்களும் சில்வர் குடத்திற்குள் மாட்டிக்கொண்டன. இதனால் குழந்தை வெளியே வரமுடியாமல் அலறியுள்ளது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த தாய் பாக்கியலட்சுமி செய்வதறியாமல் தவித்துள்ளார். உடன் குழந்தையில் குடத்தில் இருந்தபடியே ஆட்டோ மூலம் திருவெண்ணைநல்லூர் தீயணைப்பு நிலையத்திற்கு அவர் எடுத்துச் சென்றார்.
அங்கிருந்து தீயணைப்பு நிலைய அலுவலர் சுந்தர்ராஜன் தலைமையான வீரர்கள், சில்வர் குடத்தை உடைத்து குழந்தையை பத்திரமாக உயிருடன் மீட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தனது குழந்தையை காப்பாற்றிய தீயணைப்பு வீரர்களுக்கு தாய் பாக்கியலட்சுமி கண்ணீர் மல்க நன்றியைத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications