தமிழகத்தில் மீண்டும் ஒரு கொரோனா மரணம்! விழுப்புரத்தில் 35 வயது இளைஞர் பலி
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் பெரப்பேரியைச் சேர்ந்த 35 வயதான தியாகராஜன் என்பவர் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். ஐதராபாத்தில் வேலை செய்து வந்த அவர், கொரோனா பாதிப்பு காரணமாக சொந்த ஊர் திரும்பி இருக்கிறார். இதன்பின் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கிறார்.
நாடு முழுவதும் மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. கேரளா, மேற்கு வங்கம், தமிழ்நாடு, டெல்லி என்று ஏராளமான மாநிலங்களில் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்து வருகிறது. LF 7 மற்றும் NB.1.8.1. என்ற புதிய வகை கொரோனா வைரஸ் பரவல் வேகமாக பரவி வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்திருக்கிறது.

இந்த வகை கொரோனா வைரஸால் பெரியளவில் பாதிப்பு இருக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று ஒருநாள் மட்டும் 498 பேருக்கு கொரோனா பரவல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இதுவரை மொத்தமாக 5,364 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் நேற்று ஒரே நாளில் கொரோனா வைரஸ் காரணமாக 4 பேர் உயிரிழந்தனர்.
இதனால் பொதுமக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம் இல்லை என்றாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முகக்கவசம் அணிலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது கர்ப்பிணிகள் முகக்கவசம் அணிய வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. காய்ச்சல், இருமல், உடல் வலி இருந்தால் கர்ப்பிணிகள் முன்கூட்டியே மருத்துவமனைக்கு செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் விழுப்புரத்தில் கொரோனா வைரஸ் பரவலால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த 35 வயதான தியாகராஜன் என்பவர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டிவனம் பெரப்பேரியைச் தியாகராஜன், ஐதராபாத்தில் பில்டிங் காண்ட்ராக்டராக பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு காய்ச்சல் ஏற்பட்டு சோதனை செய்த போது, கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் காரணமாக தியாகராஜன் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இதன்பின் விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலைய்டில் இன்று திடீரென சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். ஏற்கனவே சென்னையில் ஒருவர் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உயிரிழந்தார். இதனால் பொதுமக்கள் இடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications