Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தைல மரக்காட்டில் அத்துமீறிய "ஜோடி".. அந்தம்மாவுக்கு 40 வயசாம்.. வாட்ஸ்அப்பில் திடீர்னு கசிந்த வீடியோ

40 வயது பெண்ணை பலாத்காரம் செய்து பணம் பறித்த 2 பேரை போலீசார் தேடிவருகிறார்கள்

Subscribe to Oneindia Tamil

விழுப்புரம்: தைல மரக்காட்டிற்கு்ள் கள்ளக்காதல் ஜோடி ஒன்று புகுந்ததையடுத்து, எதிர்பாராதவிதமாக பயங்கரம் அங்கே நடந்துள்ளது..!!

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியை சேர்ந்த அந்த பெண்ணுக்கு 40 வயதிருக்கும்.. திருமணமாகிவிட்டது.. ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்துவிட்டார்..

இவருக்கு 3 மகள்கள் இருக்கிறார்கள்.. மகள்களுடன் தனியாக வசித்து வருகிறார்... கோட்டக்குப்பம் அருகே சின்னமுதலியார் சாவடியில் உள்ள ஒரு லாட்ஜில் ஊழியராக வேலை செய்து வருகிறார்.

 தைலமரக்காட்டில்

தைலமரக்காட்டில்

இந்தநிலையில் அந்த பெண்ணுக்கும், புதுச்சேரி காலாப்பட்டு பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது... இவர்கள் அடிக்கடி வெளியில் சந்தித்து கொள்வார்கள்.. அப்படித்தான், சம்பவத்தன்றும் இந்த ஜோடி, மரக்காணம் அருகே உள்ள தைலமர தோப்பில் சந்தித்து பேசிக் கொண்டிருந்தனர்.... அப்போது அதே மரக்காணம் பகுதியை சேர்ந்த எழில் பரதனும், அவரது நண்பரும் அங்கு வந்திருக்கிறார்கள்.. இந்த ஜோடியை பார்த்ததும் அருகில் வந்து, கள்ளக்காதலனை கொன்று விடுவதாக மிரட்டி அங்கிருந்து கிளம்பி போகும்படி சொன்னார்கள்.

 தைல மரக்காட்டில்

தைல மரக்காட்டில்

அந்த நபரும், இளைஞர்களின் மிரட்டலுக்கு பயந்து கொண்டு, அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்... தனியாக சிக்கிக்கொண்ட அந்த பெண்ணை, எழில்பரதனும், அவரது நண்பரும் சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்... அதனை செல்போனில் வீடியோவும் எடுத்துள்ளனர்.. இந்த சம்பவத்தை வெளியே சொன்னால், உன்னையும், உன் 3 மகள்களையும் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டிவிட்டு அங்கிருந்து அவர்கள் சென்றனர். இதனால் பயந்துபோன அந்த பெண், தனக்கு நடந்த கொடுமையை யாரிடமும் சொல்லவில்லை.

மிரட்டல்

மிரட்டல்

உடனே இதை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட, எழில்பரதனும், அவரது நண்பரும் ஆபாச வீடியோவை சோஷியல் மீடியாவில் பதிவிட்டு விடுவதாக மிரட்டி, அந்த பெண்ணை அடிக்கடி தனியாக வரவழைத்து பாலியல் பலாத்காரம் செய்து வந்ததாக தெரிகிறது... இதைதவிர, பெண்ணிடம் பணம் கேட்டு அவர்கள் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. நாளுக்குநாள் அவர்களின் தொல்லை அதிகரிக்கவும், தற்கொலை செய்து கொள்ளலாம் என்று முடிவுக்கு வந்துவிட்டார் அந்த பெண்.. ஆனால் 3 மகள்களின் கதி என்ன ஆகும்? என்று பயந்து தற்கொலை முடிவை கைவிட்டுள்ளார்.

அந்தரங்கம்

அந்தரங்கம்

இதனிடையே, தாங்கள் கேட்ட பணத்தை, அந்த பெண் தராததால், அவரை மிரட்டும் வகையில், அந்த ஆபாச வீடியோவை வாட்ஸ் அப்பில் எழில்பரதன் பதிவிட்டதாக தெரிகிறது... இந்த விஷயம் தெரிந்து அதிர்ச்சியும், ஆத்திரமும் அடைந்த பெண், நேரடியாக கோட்டக்குப்பம் மகளிர் போலீசுக்கு சென்றுவிட்டார்.. நடந்த சம்பவங்களை போலீசில் சொல்லி புகார் அளித்தார்... இந்த புகாரின்பேரில் போலீசாரும் வழக்குப்பதிவு செய்து எழில்பரதன் மற்றும் அவரது நண்பரை வலைவீசி தேடி வருகின்றனர்.. தைல மரக்காட்டில் இருந்து, முதல்நாளிலேயே தப்பித்து ஓடிய கள்ளக்காதலன் என்ன ஆனார் என்றே தெரியவில்லை..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+