விழுப்புரம் ராதாகிருஷ்ணனுக்கு விபரீதமான கட்டாய கல்யாணம்.. தாலியின் ஈரம் காயும் முன் உயிருடன் இல்லை
விழுப்புரம்: விழுப்புரத்தில் இளம்பெண்ணுக்கு கட்டாயத்தின் பேரில் தாலி கட்டிய வங்கி ஊழியர் திடீரென உயிரையே மாய்த்துக் கொண்டார். தன்னை சிலர் திருமணம் செய்ய கட்டாயப்படுத்தியதாக கடிதம் எழுதி வைத்துள்ளார். அதன் அடிப்படையில் 5 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
விழுப்புரம் அருகே திருவெண்ணெய்நல்லூர் காந்திகுப்பத்தை சேர்ந்தவர் பாவாடை. இவரது மகன் ராதாகிருஷ்ணன். 27 வயதாகும் இவர் பி.டெக் பட்டதாரி ஆவார். ராதாகிருஷ்ணன் விழுப்புரத்தில் உள்ள ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்தார். இவருக்கு 16 வயது இருக்கும் போதே, அதாவது 10 வருடங்களுக்கு முன்பே ஒரு பெண்ணை காதலித்துள்ளார். அந்த பெண்ணுக்கு தற்போது 26 வயது ஆகிறது. ராதாகிருஷ்ணனும் அந்த பெண்ணும் கடந்த 10 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் அந்த இளம்பெண், வங்கி ஊழியர் ராதாகிருஷ்ணனிடம், காதலிக்க தொடங்கி 10 வருடங்கள் ஆன நிலையில், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்த தொடங்கி உள்ளார். அதற்கு ராதாகிருஷ்ணன் தனது தயார் இறந்து சில மாதங்களே ஆவதால், ஓராண்டு கழித்து திருமணம் செய்து கொள்ளலாம் என கூறி காலத்தை கடத்தி வந்தாராம்
இந்த நிலையில் அந்த இளம்பெண், வங்கி ஊழியர் ராதாகிருஷ்ணனிடம், காதலிக்க தொடங்கி 10 வருடங்கள் ஆன நிலையில், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்த தொடங்கி உள்ளார். அதற்கு ராதாகிருஷ்ணன் தனது தாயார் இறந்து சில மாதங்களே ஆவதால், ஓராண்டு கழித்து திருமணம் செய்து கொள்ளலாம் என கூறி காலத்தை கடத்தி வந்தாராம்
மாலை 4.30 மணியளவில் போலீஸ் நிலையம் அருகே உள்ள கோவிலில் ராதாகிருஷ்ணனுக்கும், அந்த பெண்ணுக்கும் கட்டாயத் திருமணம் செய்து வைக்கப்பட்டது. அதன்பிறகு ராதாகிருஷ்ணன் தனது மனைவி வீட்டிற்கு சென்றார். இரவு சிறிது நேரம் தங்கி இருந்த அவர் மனைவியிடம் எனது வீட்டுக்கு சென்றுவிட்டு, காலையில் வந்து உன்னை அழைத்துச் செல்கிறேன் என்று கூறிவிட்டு, அங்கிருந்து சென்றுள்ளார்.
இந்தநிலையில் ராதாகிருஷ்ணன் நேற்று அதிகாலை வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைபார்த்த அவரது குடும்பத்தினர், உறவினர்கள் கதறி துடித்துள்ளார்கள். இதுபற்றி திருவெண்ணெய்நல்லூர் போலீசுக்கு உடனே தகவல் தெரிவிக்கப்பட்டத. அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
ராதாகிருஷ்ணன் தற்கொலை செய்வதற்கு முன்பு உருக்கமாக எழுதிய கடிதம் மற்றும் செல்போன் வாட்ஸ்அப் பதிவை போலீசார் கைப்பற்றி உறவினர்கள், அக்கம் பக்கத்தினரிடம் விசாரணையில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனிடையே ராதாகிருஷ்ணன் எழுதிய கடிதம் குறித்தும் தகவல் வெளியாகி உள்ளது.
அந்த கடிதத்தில் ராதாகிருஷ்ணன் கூறுகையில், "எல்லோரும் என்னை மன்னித்து விடுங்கள். என்னை வற்புறுத்தி எனக்கு விருப்பம் இல்லாமல் காவல்துறைக்கு சென்று திருமணம் செய்து வைத்தார்கள். எனக்கு இது பிடிக்கவில்லை. என்னையும் என் குடும்பத்தையும் அழித்து விடுவேன் என மிரட்டினர். எனவே அவர்கள் தான் என் சாவுக்கு முழுக்க முழுக்க காரணம். எனக்கு விருப்பம் இல்லாமல் இந்த வாழ்க்கையை என்னால் வாழ முடியாது" இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து ராதாகிருஷ்ணனின் தந்தை பாவாடை தனது மகன் சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்தார். அதன்பேரில், காந்திகுப்பத்தை சேர்ந்த சுப்பிரமணி மகன் முருகன் என்ற விடியலரசு, நாகமுத்து மகன் பன்னீர்செல்வம், கலியமூர்த்தி மகன் சக்கரவர்த்தி, செல்வராஜ் மகன் அய்யனார், தட்சிணாமூர்த்தி மனைவி குணவதி ஆகிய 5 பேரும் சேர்ந்து கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்ததுடன், ராதாகிருஷ்ணன் குடும்பத்தினருக்கு மிரட்டல் விடுத்தும், ராதாகிருஷ்ணனை தற்கொலைக்கு தூண்டியதாகவும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தற்கொலை தடுப்பு எண்கள்: தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்: சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -2464000 (24 மணி நேரம்), மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)


Click it and Unblock the Notifications
