Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விழுப்புரத்தில் ஒரே ஐடியாவில் ரூ.8.45 லட்சம் சம்பாதித்த தீயணைப்பு வீரர்.. பாவம் இன்னொரு வீரர்

Subscribe to Oneindia Tamil

விழுப்புரம்: அரசு வேலைக்கு போக விரும்புவோரை குறிவைத்து ஏமாற்றுவது அதிமாகி வருகிறது. அரசு வேலையில் சேர குறுக்கு வழியில் முயல்வோரிடம் பணம் பறிக்கும் வேலையில் பலரும் ஈடுபடுகிறார்கள். இதில் என்ன ஒரு வித்தியாசமான விஷயம் என்றால், அரசு வேலையில் இருந்து ஓய்வு பெற்றவர்களே, தற்போது பணியில் உள்ளவர்களிடம் பணம் கொடுத்து ஏமாறுவது தான். அப்படித்தான் மகனுக்கு அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி ஓய்வுபெற்ற ஊழியரிடம் ரூ.8.45 லட்சம் மோசடி நடந்துள்ளது. இது தொடர்பாக தீயணைப்பு வீரர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

யாராவது அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பணம் கேட்டால் மறந்தும் கொடுத்துவிட வேண்டாம். எனக்கு அவரை தெரியும், எனக்கு இவரை தெரியும்.. இவருக்கு நான் தான் வேலை வாங்கி கொடுத்தேன். நான் வேலை வாங்கி கொடுத்த பலர் பணியில் இருக்கிறார்கள் என்று நம்பிக்கை அளிக்கும் வகையில் தான் பேசுவார்கள்.

A firefighter in Villupuram earned Rs 8 45 lakh with a single idea but there s a twist

அப்போது ஏற்படும் சிறுசலனத்தை கண்டுபிடிக்கும் மோசடியாளர்கள், அவர்களை சதுரங்கவேட்டை பாணியில் மோசடி செய்து மொத்தமாக கிடைக்கும் பணத்தை வாங்கி விடுவார்கள். கொஞ்சம் கொஞ்சமாக எவ்வளவு முடியுமோ அவ்வளவு பணத்தை வாங்கிவிட்டு, போலி ஆர்டரை கொடுப்பார்கள்.. இல்லாவிட்டால்.. நமக்கு வேண்டியவர் கொஞ்ச நாள் பொறுக்க சொல்கிறார் என்று கூறி காலம் கடத்துவார்கள்.. நீண்ட நாளைக்கு பிறகு தான் ஏமாற்றப்பட்டது தெரியவரும்..

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பாலப்பட்டு தெருவை சேர்ந்த 64 வயதாகும் ஆறுமுகம் என்பவர் தீயணைப்பு நிலையத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். ஆரணி சைதாப்பேட்டை அண்ணா நகரை சேர்ந்தவர் துளசி என்பவருடைய மகன் சிவசங்கர் (37).இதில் ஆறுமுகமும், சிவசங்கரும் கடந்த 2013-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் உள்ள தீயணைப்பு அலுவலகத்தில் தீயணைப்பு வீரர்களாக பணியாற்றி உள்ளார்கள். அப்போது அவர்கள் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.

இந்த நிலையில் ஆறுமுகம் கடந்த 2021-ம் ஆண்டு பணியில் இருந்து ஓய்வு பெற்றார். அதன் பிறகும் பழக்கத்தின் அடிப்படையில் சிவசங்கர், அவ்வப்போது ஆறுமுகத்தை செல்போனில் தொடர்பு கொண்டு பேசி நலம் விசாரித்து வந்திருக்கிறார். அந்த சமயத்தில் சிவசங்கர், ஆறுமுகத்திடம் அவரது மகனை பற்றி விசாரித்தாராம். அதற்கு ஆறுமுகம், தனது மகன் பி.இ. சிவில் படித்து முடித்துள்ளதாகவும், அரசு வேலைக்கு முயற்சி செய்வதாகவும் கூறியிருக்கிறார்.

உடனே தீயணைப்பு வீரர் சிவசங்கர், தனது உறவினர் ஒருவர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பணியாற்றி வருவதாகவும், அவர் மூலமாக உங்கள் மகனுக்கு அரசு வேலை வாங்கித்தருவதாகவும் கூறி நம்பவைத்தாராம். ஆனால் அதற்கு பணம் தர வேண்டும் என்று கூறினாராம்,

இதை உண்மை என்று நம்பிய ஆறுமுகம் சிவங்கருக்கு சிறுக, சிறுக பல தவணைகளாக ரூ.8 லட்சத்து 86 ஆயிரத்தை கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் பணத்தைப்பெற்ற சிவசங்கர், ஆறுமுகத்தின் மகனுக்கு அரசு வேலை ஏதும் வாங்கித்தராமலும், வாங்கிய பணத்தை திருப்பிக் கொடுக்காமலும் ஏமாற்றி மோசடி செய்துவிட்டாராம்.

இதுகுறித்து ஆறுமுகம், விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தாராம். அதன்பேரில் சிவசங்கர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்கள். மேலும் சிவசங்கர் துறை ரீதியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சிவசங்கரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை செஞ்சி கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தி விழுப்புரம் வேடம்பட்டில் உள்ள சிறையில் அடைத்தார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+