"தாத்தா, பிள்ளை, பேரன்.. மன்னராட்சி நடத்தும் திமுக.. இதுதான் திராவிட மாடலா?" சி.வி.சண்முகம் கேள்வி
விழுப்புரம்: தமிழக அரசுக்கு எதிராக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய சி.வி.சண்முகம், ஆளும் திமுக அரசையும் முதல்வர் ஸ்டாலினையும் கடுமையாக விமர்சித்துப் பேசினார்..
சொத்துவரி, மின்கட்டணம் மற்றும் பால் விலையை திமுக அரசு உயர்த்தியதற்கு எதிராகவும் விலைவாசி உயர்வு, சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டைக் கண்டித்தும் அதிமுக சார்பில் மாநிலம் தழுவிய போராட்டங்கள் இன்று நடைபெற்றன.
அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் முன்னாள் அமைச்சரும் மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி பேரூராட்சியில் நடந்த இந்த போராட்டத்தில் ஏராளமான அதிமுகவினர் கலந்து கொண்டனர்.

சிவி சண்முகம்
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பேசிய சி.வி. சண்முகம் தமிழ்நாட்டு மக்களுக்குத் தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை எனக் குற்றஞ்சாட்டினார். மேலும் மக்களுக்குச் சுகாதாரமான முறையில் மருத்துவச் சிகிச்சை அளிப்பதற்கு போதிய மருந்து இல்லாததால் மக்கள் அவதிப்பட்டு வருவதாகச் சாடிய அவர், தற்பொழுது சுகாதாரத்துறை அமைச்சர் மருத்துவத்தைப் பற்றியும் மருந்து பற்றாக்குறை குறித்தும் பேசாமல் நயன்தாராவைப் பற்றிப் பேசி வருகிறார் என்று சாடினார்.

அக்கறை இல்லை
இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய சி.வி.சண்முகம், "தற்போது முதல்வராக உள்ள ஸ்டாலின், மக்களைப் பற்றிச் சிந்திக்காமல் தன் குடும்பத்தைப் பற்றி மட்டும் யோசித்து வருகிறார். ஸ்டாலின் செயல்படாத ஒரு முதலமைச்சராகவே உள்ளார். அவர் ஆட்சிக்கு வந்த 1.5 ஆண்டுகள் ஆகிவிட்டது. இதுவரை அவர்கள் தமிழக மக்களுக்குச் செய்தது என்ன? கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்றால் கூட பரவாயில்லை. கூடுதல் துன்பங்களை மக்களுக்குத் தரும் அரசாகவே திமுக உள்ளது. ஸ்டாலின் பொம்மை முதல்வராகவே செயல்பட்டு வருகிறார்.

வாக்குறுதிகள்
தேர்தல் சமயத்தில் ஒவ்வொரு குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்குவதாக அறிவித்தார்கள். இப்போது 1.5 ஆண்டு ஆகிவிட்டது. அதைப் பற்றிப் பேசுவதே இல்லை. இப்போது மாநிலத்தில் 26% கமிஷன் கொடுத்தால் மட்டுமே அனைத்து வேலைகளும் நடக்கிறது. இங்கு திமுக அமைச்சர்கள் யாரும் அமைச்சர்களாகவே செயல்படுவதில்லை. உயிரிழக்கும் முன்பே சொன்ன அத்தனை வாக்குறுதிகளையும் ஒன்று விடாமல் நிறைவேற்றியவர் ஜெயலலிதா. கடைசியில் தாலிக்குத் தங்கம் திட்டத்தில் வழங்கப்படும் தாலியைக் கூட அரை சவரனில் இருந்து ஒரு சவரனாக மாற்றியவர் ஜெயலலிதா.

புதிய திட்டங்கள் இல்லை
ஆனால், திமுக ஆட்சியைப் பாருங்கள். எந்த புதிய திட்டமும் இல்லை. இப்போது மாநிலத்தில் சிமெண்ட் விலை மூட்டைக்கு 520 ரூபாயாக உள்ளது. திமுகவின் பினாமிகள் சிமெண்ட் கம்பெனி நடத்துகிறார்கள். அவர்களுக்காகவே சிமெண்ட் விலை குறையாமல் அரசு பார்த்துக்கொள்கிறது போல, அவர்களுக்கு வரும் கமிஷனும் திமுகவுக்குத் தான் செல்கிறது. திமுக ஆட்சியில் அரசு அதிகாரிகள் கூட ஒன்றிய செயலாளர்களின் வீட்டில் தான் உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள். வாக்களித்த அனைத்து மக்களையும் திமுக வஞ்சித்தே வருகிறது.

வரி, மின் கட்டண உயர்வு
முதலில் வீட்டு வரியை உயர்த்தினார்கள். அடுத்து மின்சார கட்டணம் தொடங்கி பலவற்றை உயர்த்தினார்கள். திமுக சொல்வது ஒன்றும் செய்வது ஒன்றுமாகவே உள்ளது. மின் கட்டண உயர்வால் பொதுமக்கள் மட்டுமின்றி, சிறு, குறு தொழிற்சாலைகள் கூட கடுமையாகப் பாதித்து உள்ளது. திமுக அரசிடம் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தவும் எந்தவொரு திட்டமும் இல்லை. மக்களுக்கு என்ன பிரச்சனை, நாட்டில் என்ன நடக்கிறது என்பதைக் கூட தெரியாத, கனவு உலகில் முதலமைச்சர் ஸ்டாலின் இருக்கிறார்.

மன்னராட்சி
இந்தியா ஒரு ஜனநாயக நாடு. ஆனால் இங்கு மன்னரைப் போலத் தான் திமுக ஆட்சி நடைபெறுகிறது. தாத்தா, பிள்ளை, பேரன் என வரிசையாக ஆட்சி நடத்துகின்றனர். இதுதான் அவர்கள் சொல்லும் திராவிட மாடலா? அதேபோல இப்போது மாநிலம் முழுக்க கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் எளிதாகக் கிடைக்கிறது. பள்ளி வளாகங்களில் கூட கஞ்சா எளிதாகக் கிடைக்கிறது. போலீசார் அடக்குமுறை மூலம் அதிமுகவை ஒடுக்க அரசு முயல்கிறது. எத்தனை வழக்குகள் போட்டாலும் சந்திக்கத் தயாராகவே உள்ளோம். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக அரசுக்குப் பொதுமக்கள் பாடம் புகட்டுவார்கள்" என்று கடுமையாகச் சாடி பேசினார்.
-
பெரம்பூரில் விஜய்க்காக அரங்கேறும் திரைமறைவு சதி! பலிகடாவாக்கப்படுகிறதா அதிமுகவின் வெற்றிவாய்ப்பு! -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
அன்று ஸ்டாலின்.. இன்று அமைச்சர் சக்கரபாணியை எதிர்த்து.. ஒட்டன்சத்திரத்தில் களமிறங்கும் விடியல் சேகர் -
சான்ஸை தட்டிப்பறித்த சிவி சண்முகம்.. குறுக்கே வந்த வக்கீல்.. எடப்பாடிக்கு தலைவலியாக மாறிய "பசுபதி" -
மொத்தம் 23 வேட்பாளர்கள்.. இந்த 3 பேரை கவனிச்சிங்களா! அதிமுகவில் தொகுதி மாறியவர்கள்! காரணம் இதுதான்! -
களம் இப்போதான் சூடுபிடிக்குது..முதல் ஆளாக பிரச்சாரத்துக்கு கிளம்பிய எடப்பாடி! ரேசில் முந்தும் அதிமுக -
கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் தொண்டர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி.. பரபரப்பு -
“வருத்தத்தில் இருக்கிறேனா? வதந்தியை பரப்பாதீங்க.. நம்பிக்கை இருக்கு!” - சீனுக்குள் வந்த கவுதமி -
கோவையை விடுங்க.. மொத்தமாகவே ஏமாந்த பாஜக! அதிமுக மீது உச்சகட்ட அதிருப்தியில் அண்ணாமலை -
நாகர்கோவில் தொகுதியை.. தூக்கி கொடுத்த எடப்பாடி பழனிசாமி! போராட்டத்தில் குதித்த அதிமுக மகளிர் அணி -
அவிநாசி: பாஜகவுக்காக.. அதிமுகவின் எஃகு கோட்டையை தாரை வார்த்த எடப்பாடி பழனிசாமி! தனபால் கதை ஓவர் -
2021 vs 2026.. அதிமுக கூட்டணியில் யாருக்கு லாபம்.. பாஜக, பாமக அமமுக வாக்கு சதவீதம் என்ன?












Click it and Unblock the Notifications