பாஜகவை தூக்கிவிடுறாங்க! அதிமுக அரசியலில் காணாமல்போகும் - மார்க்சிஸ்டு மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்
விழுப்புரம்: பாஜகவின் கொள்கையை தூக்கிப்பிடிக்கும் அதிமுக தமிழக அரசியலில் களத்தில் இருந்து காணாமல் போகும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்து உள்ளார்.
விழுப்புரத்தில் மார்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மண்டல பேரவை கூட்டம் கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்ட அக்கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் முன்னதாக செய்தியாளர்களை சந்தித்தார்.

அம்பானி, அதானி
அப்போது பேசிய அவர், "தமிழகத்தில் ஜவுளி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு பருத்தி விலை உயர்வே காரணம். எனவே அரசே நேரடியாக பருத்தியை கொள்முதல் செய்து குறைந்த விலையில் கொடுக்க வேண்டும். அதானி, அம்பானி போன்ற தனியார் நிறுவனங்கள் பருத்தியை கொள்முதல் செய்து பதுக்கி வைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

சர்க்கரை ஆலைகளை திறக்க வேண்டும்
மேலும் கரும்பு விவசாயிகளை பாதிக்காத வகையில் மூடி வைத்துள்ள பென்னாகரம் அம்பிகா சர்க்கரை ஆலை, மதுரை மாவட்டத்தில் உள்ள அரசு சர்க்கரை ஆலையை உடனடியாக திறக்க வழிவகை செய்ய வேண்டும். தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக அதிமுக ஆட்சியில் இருந்தபோது எந்த ஒரு விசாரணையும் நடத்தப்படவில்லை.

திமுக அரசின் துரித நடவடிக்கை
ஆனால் திமுக ஆட்சியில் விக்னேஷ் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட மூன்று அதிகாரிகளையும் உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் குற்றச் சம்பவங்கள் தொடர்பாக உண்மை தன்மையை ஆராய்ந்து தமிழ்நாடு காவல் துறையின் உடனடி நடவடிக்கை எடுத்து வருகிறது.

அதிமுக காணாமல்போகும்
தமிழ்நாடு அரசைப் பொருத்தவரை எதுவாக இருந்தாலும் உடனடி நடவடிக்கை எடுப்பதால் குறை சொல்ல ஏதுமில்லை. தமிழகத்தில் பாஜக அரசுக்கு துணை போகும் கட்சியாகவே அதிமுக செயல்பட்டு வந்தது. மத்திய அரசிடம் பொதுமக்களின் கோரிக்கைகள் எதையுமே அளிக்காமல் பாஜகவை தூக்கிவிடும் கட்சியாகவே அதிமுக செயல்பட்டு வருவதால் விரைவில் அதிமுக தமிழக அரசியல் களத்தில் இருந்து காணாமல் போகும்.

மதுரை நீதிமன்றமே ஆக்கிரமிப்புதான்
மதுரை நீதிமன்றம் நீர்நிலை ஆக்கிரமிப்பு தான். விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகமும் நீர்நிலை ஆக்கிரமிப்பில் கட்டப்பட்டதுதான். இப்படி இருக்க நீர்நிலைகளில் இருந்து கட்டிடங்களை இடிக்க உத்தரவிடுவது வேதனையாக உள்ளது. நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டாம் என்று நாங்கள் கூறவில்லை. நீர்நிலை ஆக்கிரமிப்பு பகுதியில் உள்ள பயனாளிகளுக்கு மாற்று இடங்களை ஏற்பாடு செய்யக் கோருகிறோம்.
-
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்?












Click it and Unblock the Notifications