விக்கிரவாண்டி’பாமக’ பேனரில் சிரிக்கும் ஜெயலலிதா! எங்களுக்கு பெருமை தானே.. என்ன சொன்னார் எடப்பாடி?
விழுப்புரம்: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் மீண்டும் பரபரப்பு அரசியலுக்குள் வந்திருக்கிறது. கள்ளக்குறிச்சி மரணம், சட்டமன்ற கூட்டத் தொடர் உள்ளிட்டவற்றால் விக்கிரவாண்டி இடைத் தேர்தல் குறித்து அவ்வளவு கவனம் இல்லாத நிலையில் தற்போது ஜெயலலிதாவின் புகைப்படத்தால் தமிழக அளவில் பேசுபொருளாகியிருக்கிறது. களத்தில் இருக்கும் மூன்று கட்சிகளும் அதிமுக வாக்குகளை பற்றி பேச ஆரம்பித்திருக்கின்றனர்.
மக்களவைத் தேர்தல் முடிவடைந்த கையோடு விக்கிரவாண்டி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டாலும் அரசியல் கட்சிகள் சுறுசுறுப்போடு தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. தங்கள் எம்எல்ஏ மரணமடைந்ததால் மீண்டும் திமுகவே அந்த தொகுதியில் போட்டியிடுகிறது.

திமுக சார்பில் வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிக்கப்பட்டு இருக்கிறார். தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக தேர்தலில் போட்டியிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பணபலம், ஆளுங்கட்சி அராஜகம் உள்ளிட்டவற்றால் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்து அதிர்ச்சி கொடுத்தார் கட்சியின் பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிச்சாமி.
அதே நேரத்தில் வன்னியர் வாக்குகள் அதிகம் இருப்பதால் விக்கிரவாண்டி தொகுதியில் பாஜக கூட்டணியில் பாமக போட்டியிடும் என அறிவித்தார் ராமதாஸ். அந்த கட்சியின் சார்பில் வேட்பாளராக சி.அன்புமணி அறிவிக்கப்பட்டுள்ளளார். இதேபோல தர்மபுரி தொகுதியில் சௌமியா அன்புமணியை எதிர்த்து போட்டியிட்ட அபிநயாவும் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். இதை அடுத்து விக்கிரவாண்டி தேர்தல் களத்தில் மும்முனை போட்டி உருவாகி இருக்கிறது.
வாக்குப்பதிவுக்கு இன்னும் ஒரு வார கால இடைவெளியே இருக்கும் நிலையில் 5 நாட்களில் அதாவது 8ஆம் தேதி தேர்தல் பிரச்சாரம் நடைபெற இருக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சி தலைவர்கள் அங்கு முகாமிட்டு தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திமுக சார்பில் 25க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் களமிறக்கப்பட்டு அங்கு தேர்தல் பணிகள் நடைபெற்று வருகிறது. இதேபோல பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக அன்புமணி ராமதாஸ், சௌமியா அன்புமணியும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஆதரவாக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட நட்சத்திர பேச்சாளர்களும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
அதிமுக தேர்தலை புறக்கணித்திற்கும் இடையில் அந்த கூட்டணியில் இருக்கும் தேமுதிக மற்றும் அதிமுகவின் வாக்கு யாருக்கு என்பதுதான் தற்போது விக்கிரவாண்டி தேர்தல் களத்தில் பேசுபொருளாக இருக்கிறது. வன்னியர் வாக்குகளும் அதிமுக வாக்குகளும் எங்களுக்கு தான் கிடைக்கும் நான் ஏற்கனவே அவர்களுக்காக பிரச்சாரம் மேற்கொண்டு இருக்கிறேன் என சீமான் ஒரு பக்கம் கூற, எம்ஜிஆர் திமுகவில் இருந்து வந்தவர் எனவே திமுகவினருக்கு தான் அதிமுகவினரின் வாக்கு கிடைக்கும் என அமைச்சர் எ.வ.வேலு கூறியிருப்பது பரபரப்பை பற்ற வைத்திருக்கிறது.
இவற்றிற்கெல்லாம் ஒரு படி மேலே போய் தனது பிரச்சாரத்தின் போது எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் புகைப்படங்களை பயன்படுத்தி வருகிறார் பாமக தலைவரான அன்புமணி ராமதாஸ். இதை அடுத்து அதிமுகவினர் வாக்கு யாருக்கு செல்லும் என்பதை பேசுவதாக இருக்கிறது பலரும் அதிமுகவின் வாக்குக்கு சொந்தம் கொண்டாடி வருகின்றனர். இதற்கிடையே பாமகவுக்கு அதிமுக வாக்களிக்கக் கூடாது என எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டதாக செய்திகள் வெளியானது.
இந்த நிலையில் பிரச்சாரத்தின் போது ஜெயலலிதாவின் புகைப்படங்களை பயன்படுத்துவது குறித்து அதிமுக பொதுச் செயலாளரும் தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி இடம் கேட்கப்பட்டபோது, ஜெயலலிதாவின் புகைப்படத்தை பாமக பயன்படுத்துவது எங்களுக்கு பெருமைதான்.. அதிமுக தலைவர்களை பயன்படுத்தினால் தான் வாக்குகள் விழும் என்ற நிலை இருப்பது எங்களுக்கு பெருமை தானே.." என்று சிரித்துக் கொண்டே கூறினார். இதை வைத்து பாமகவினர் அதிமுகவின் மறைமுக ஆதரவு தங்களுக்கு தான் இருக்கிறது எனக் கூறி வருகின்றனர்
கடந்த தேர்தல்களில் அதிமுகவினரின் புகைப்படங்களை ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட சிலர் பயன்படுத்திய போது அதற்கு எடப்பாடி பழனிச்சாமி தரப்பு கடும் கண்டனம் தெரிவித்தது. குறிப்பாக ஜெயலலிதா குறித்த அண்ணாமலையின் பேச்சுக்கு எடப்பாடி பழனிச்சாமி தரப்பும் அதிமுகவினரும் கடுமையாக கண்டனங்களை கூறினர். மேலும் தங்கள் தலைவர்களை பற்றி பேசக்கூடாது எனவும் அவர்கள் தெரிவித்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமி இந்த பேச்சு தங்களுக்கு சாதகமாகவே இருக்கிறது என கூறி வருகின்றனர்.
2026 சட்டமன்ற தேர்தலில் குறி வைத்தே எடப்பாடி பழனிச்சாமி இப்படியான நிலைப்பாடு எடுத்திருக்கிறார் என்கின்றனர் அதிமுகவினர். தமிழகத்தை பொறுத்தவரை பாஜகவுடன் கூட்டணி இல்லை என அதிமுக அறிவித்தாலும் 2026 சட்டமன்ற தேர்தலில் நிச்சயம் கூட்டணி கட்சிகளின் ஆதரவு தேவைப்படும். இதனால் வட மாவட்டங்களில் வலுவாக இருக்கும் பாமகவை இதற்கு பயன்படுத்திக் கொள்ள அதிமுக தலைமை திட்டமிட்டு இருக்கலாம்.. இதன் காரணமாகத்தான் தேர்தலிலும் போட்டியிடாமல் தற்போது ஜெயலலிதா படத்தையும் பயன்படுத்த வெளிப்படையான எதிர்ப்பு தெரிவிக்காமல் வெளிப்படையான ஆதரவையும் தெரிவிக்கவில்லை என்கின்றனர்.
-
காங்கிரஸ் செய்த கழுத்தறுப்புகள்.. ஆசிர்வாதம் செய்த ராகுல் காந்தி! விடாத திமுக.. குதிக்கும் தலைகள்! -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
துரைமுருகன் Out? ஆ.ராசா In.. திமுக செயல் தலைவராகும் கனிமொழி? அறிவாலயத்தை ரவுண்ட் கட்டும் யூகங்கள்! -
பெப்பே காட்டிய விஜய்.. விஷத்தை கடைந்த ராகுல்.. திமுக, காங்கிரஸ் பந்தம் டோட்டலாக க்ளோஸ் ஆயிருச்சே -
சைலண்ட் கில்லரான ஸ்டாலின்.. அதிமுக நிர்வாகிகளுக்கு பறந்த அழைப்பு.. தவெகவுக்கு செக் -
அண்ணா அறிவாலயத்தில் ஆட்டம் போட்ட மகளிரணி.. ரீல்ஸ் போடச் சொல்லும் ஸ்டாலின்! தவெகவைப் பார்த்து சூடு? -
ஆடிய ஆட்டமென்ன? குறுநில மன்னர்களாக அமைச்சர்கள்! அடங்காத மா.செ.க்கள்! ஆக்ஷனுக்கு தயாரான ஸ்டாலின்! -
கரண்ட் கட்.. போராட்டமாக மாறிய பொதுக்கூட்ட மேடை! சூடான திமுகவினர்! சென்னையில் சலசலப்பு! -
அஸ்திவாரத்தை ஆட்டும் விஜய்.. அலற போகும் அறிவாலயம்! திமுக ‘மாஜி’ புள்ளிகளுக்கு செக்! களமிறங்கிய டீம்! -
தவெகவுக்கு முக்கியத்துவம்?.. மாங்குடியில் ப.சிதம்பரம் செய்த சம்பவம்..அதிருப்தியில் திமுக நிர்வாகிகள் -
பாமக போட்ட பிச்சை.. அதிமுகவைக் காப்பாற்றிய அன்புமணி! போட்டுத் தாக்கிய சிவி சண்முகம்! உண்மை என்ன? -
மாற்றத்தை எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றமே.. தவெக ஆட்சியை விமர்சித்து ஜவாஹிருல்லா பேச்சு












Click it and Unblock the Notifications