விஜய் இப்படி செய்வாருனு நினைக்கலை! தண்ணீர் கேட்ட தவெக தொண்டர்களுக்கு நேர்ந்த கதி.. 60 பேர் மயக்கம்

Subscribe to Oneindia Tamil

விழுப்புரம்: விக்கிரவாண்டி வி சாலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு நடைபெறும் இடத்தில் வெயில் கொளுத்தி எடுக்கிறது. இதனால் காவலர் உள்பட அடுத்தடுத்து 60 பேர் மயங்கி உள்ளனர். இதற்கிடையே தான் தண்ணீர் தேடி தொண்டர்கள் அலையும் நிலையில் மாநாட்டை நிர்வகிக்கும் நபர்கள் ‛ரேம்ப்வாக்' செல்ல அமைக்கப்பட்ட மேடையில் இருந்து தொண்டர்களை நோக்கி குடிநீர் பாட்டிலை வீசியது சர்ச்சையாகி உள்ளது. இதனால் தொண்டர்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியின் வி சாலையில் இன்று மாலை நடைபெற உள்ளது. இந்த மாநாட்டையொட்டி கட்சியின் தலைவரான நடிகர் விஜய் நேற்றை அங்கு சென்றார்.

tvk maanadu tamilaga vetri kazhagam actor vijay

இன்று மாலை 4 மணிக்கு 100 அடி கொடிக்கம்பத்தில் நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை ஏற்றி வைக்கிறார். அதன்பிறகு மாநாடு தொடங்க உள்ளது. மாலை 6 மணிக்கு விஜய் கட்சியின் கொள்கை, கட்சி கொடி பற்றிய விஷயங்களை பேச உள்ளார்.

இந்த மாநாட்டுக்கு நேற்று இரவே மாநிலம் முழுவதும் இருந்து ஏராளமான தொண்டர்கள் சென்றனர். இன்று காலை முதல் தொண்டர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மதியம் 1 மணிக்கே மாநாட்டுக்காக போடப்பட்ட இருக்கைகள் முழுவதுமாக நிரம்பி விட்டன. இந்த மாநாட்டை பொறுத்தவரை மேடைக்கு மட்டுமே மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது.

தொண்டர்கள் அமர்ந்து மாநாட்டை பார்க்கும் இடத்தில் இருக்கை மட்டுமே போடப்பட்டுள்ளது. அதில் மேற்கூரை இல்லை. இதற்கிடையே தான் இன்று வி.சாலை பகுதியில் வெயில் வெளுத்து வாங்குகிறது. இதனால் தொண்டர்கள் சேரை தலையில் கவிழ்த்து வைத்து வெயிலை சமாளிக்கின்றனர். இன்னொரு தரப்பினர் கட்சியின் துண்டை தலையில் கட்டி வெயிலில் இருந்து தப்பிக்கின்றனர்.

ஆனாலும் கூட அதிக வெயில் காரணமாக அடுத்தடுத்து சிறுமி, காவலர், தொண்டர்கள் மயங்கி வருகின்றனர். மதியம் 1 மணி நிலவரப்படி காவலர் உள்பட மொத்தம் 60 பேர் மயங்கி உள்ளனர். இவர்களுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த மயக்கத்துக்கு மாநாடு நடக்கும் இடத்தில் போதிய அளவு தண்ணீர் இல்லாதது தான் காரணம் என்று சொல்லப்படுகிறது. பெரிய பெரிய டேங்கர்களில் மாநாட்டுக்கு தண்ணீர் கொண்டு வந்து வைக்கப்பட்டது.

மதியத்துக்கு மேல் தான் தொண்டர்கள் வருவார்கள் என்ற நிலையில் காலையிலேயே தொண்டர்கள் குவிந்ததால் அந்த தண்ணீர் காலியானது. இதனால் வெயிலுக்கு நடுவே தொண்டர்கள் தண்ணீர் தேடி அலைந்தனர். இதையடுத்து அங்கு பணியில் இருந்த செக்யூரிட்டிகள் தண்ணீர் பாட்டில்களை தொண்டர்களுக்கு வழங்கினர். இதுதான் சர்ச்சையாகி உள்ளது. அதாவது தண்ணீர் பாட்டில்கள் தொண்டர்களின் கைகளில் நேரடியாக வழங்கப்படவில்லை.

நடிகர் விஜய் நடந்து சென்று பேசுவதற்காக அமைக்கப்பட்ட ‛ரேம்ப் வாக்' மேடையில் இருந்து தண்ணீர் பாட்டில்கள் ஒவ்வொன்றாக தூக்கி வீசப்பட்டன. அதனை தொண்டர்கள் கேட்ச் பிடித்து பயன்படுத்தி கொண்டனர். ஆனாலும் கூட ஒரே நேரத்தில் பல தொண்டர்கள் தண்ணீர் பாட்டிலை நாடியதால் பலருக்கும் கிடைக்காமல் போனது. இது தொண்டர்களுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+