விழுப்புரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

விழுப்புரம் "போதை".. அப்போ அதெல்லாம் வெறும் பெயருக்குதானா? அன்புமணி ராமதாஸ் 'கறார்' கேள்வி

Google Oneindia Tamil News

விழுப்புரம்: விழுப்புரத்தில் தலைமை ஆசிரியரை போதையில் இருந்த அரசு பள்ளி மாணவர் ஒருவர் கண்மூடித்தனமாக தாக்கியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியிலும், அரியலூரிலும் தடையில்லாமல் கிடைக்கும் கஞ்சாதான் இந்த சம்பவத்திற்கு காரணம் என்றும் அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார்.

ஷாக்! இளைஞர்களின் வாழ்க்கையில் 'சம்பவம்' செய்த கெமிக்கல்ஸ்.. உலக அளவில் அதிகரித்த விந்தணு குறைபாடு! ஷாக்! இளைஞர்களின் வாழ்க்கையில் 'சம்பவம்' செய்த கெமிக்கல்ஸ்.. உலக அளவில் அதிகரித்த விந்தணு குறைபாடு!

போதை

போதை

விழுப்புரம் அருகே உள்ள கண்டமங்கலத்தில் வள்ளலார் பெயரில் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இப்பள்ளியில் சுமார் 2,000க்கும் அதிகமான மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இவ்வாறு இருக்கையில் சில மாணவர்களின் நடத்தையில் தொடர் மாற்றம் தெரிந்திருக்கிறது. இவர்கள் மாணவிகளை தொடர்ந்து ஆபாசமான வார்த்தைகளால் கேலி பேசி வந்துள்ளனர். இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியர் சேவியர் சந்திரகுமார் விசாரணை செய்ததில் மாணவர்கள் போதை பழக்கத்திற்கு அடிமையாகியிருந்தது தெரிய வந்தது.

தாக்குதல்

தாக்குதல்

உடனடியாக இதிலிருந்து மாணவர்கள் மீண்டு வருவதற்கு தேவையான மனநல ஆலோசனைகளை தலைமையாசிரியர் வழங்கி வந்துள்ளார். இவ்வாறு இருக்கையில் இன்று பள்ளி வந்த மாணவர் ஒருவர் போதையிலிருந்தது தெரிய வரவே தலைமையாசிரியர் அம்மாணவனை கண்டித்துள்ளார். அப்போது ஆத்திரமடைந்த மாணவன் தலைமை ஆசிரியரை கூர்மையான பொருள் கொண்டு தலையில் தாக்கியுள்ளார். இதனால் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே சரிந்த தலைமையாசிரியர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மாணவன் வேறு பள்ளிக்கு மாற்றப்பட்டுள்ளார்.

வள்ளலார் பள்ளி

வள்ளலார் பள்ளி

இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், இது குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் டிவிட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது, "விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் கஞ்சா போதையில் மாணவிகளை தகாத வார்த்தைகளில் பேசியதை கண்டித்த தலைமை ஆசிரியர் சேவியர் சந்திரகுமாரை, மாணவர் ஒருவர் கூர்மையான பொருளால் தாக்கி மண்டையை உடைத்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இந்த கொடுமை நிகழ்ந்த பள்ளி வள்ளலார் பெயரில் அமைந்துள்ளது.

எல்லையில் கஞ்சா

எல்லையில் கஞ்சா

அப்பள்ளியில் 11 மாணவர்கள் கஞ்சாவுக்கு அடிமையாகியுள்ளனர். அவர்களுக்கு போதையிலிருந்து மீள்வதற்கான சிகிச்சைகளுக்கும் தலைமை ஆசிரியர் ஏற்பாடு செய்துள்ளார். ஆனால், அவரே தாக்கப்பட்டுள்ளார். போதை மீட்பு சிகிச்சை பெற்றும் மாணவர்கள் கஞ்சா போதைக்கு அடிமையாவதற்கு காரணம் புதுச்சேரி அரியூரிலும், அருகிலுள்ள பகுதிகளிலும் கஞ்சா தடையில்லாமல் விற்பனை செய்யப்படுவதுதான். புதுவை-தமிழக எல்லையில் கஞ்சா விற்பனையை தடுக்க இரு மாநில காவல்துறைகளும் தவறி விட்டன.

கண்காணிப்பு

கண்காணிப்பு

தமிழ்நாட்டில் கடந்த ஓராண்டாக போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஆனாலும், பள்ளி மாணவர்களுக்கே தடையில்லாமல் கஞ்சா கிடைக்கிறது என்பதிலிருந்தே போதை ஒழிப்பு நடவடிக்கைகள் பெயரளவுக்கு மட்டுமே நடக்கின்றன என்பது உறுதியாகிறது. தமிழ்நாடு முழுவதும் கஞ்சா - போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளை இன்னும் பல மடங்கு தீவிரப்படுத்த வேண்டும். பள்ளி மாணவர்களுக்கு போதையின் தீமை குறித்து எச்சரிப்பதுடன், அவர்களின் செயல்பாடுகளையும் கண்காணிக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.

English summary
The incident of an intoxicated government school student indiscriminately attacking the headmaster in Villupuram had caused great shock. In this case, the leader of the Proletariat People's Party Anbumani Ramadoss has condemned the incident. Anbumani Ramadoss also criticized the unhindered availability of ganja in Puducherry and Ariyalur as the cause of this incident.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X