ராமதாஸை சந்திக்க வந்த ஆடிட்டர் குருமூர்த்தி, சைதை துரைசாமி.. பாமகவில் முடிவுக்கு வரும் மோதல்?
விழுப்புரம்: பாமக நிறுவனர் ராமதாஸை சந்திக்க ஆடிட்டர் குருமூர்த்தி மற்றும் அதிமுக மூத்த நிர்வாகி சைதை துரைசாமி ஆகியோர் தைலாபுரம் வந்துள்ளனர். சில மணி நேரத்திற்கு முன்பாக பாமக தலைவர் அன்புமணி தைலாபுரம் வந்த நிலையில், ராமதாஸ் உடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி இடையிலான மோதல் உச்சத்தில் இருந்து வருகிறது. அன்புமணி எடுத்த முடிவுகள் மீது சரமாரியாக ராமதாஸ் விமர்சனங்களை முன் வைத்திருந்தார். இதனைத் தொடர்ந்து சென்னையில் பாமக நிர்வாகிகளை சந்தித்து அன்புமணி, ராமதாஸ் கொள்கையை ஏந்தி பாமகவில் பயணிப்போம் என்று அறிவித்தார்.

அன்புமணி vs ராமதாஸ்
இதனால் அன்புமணி பாமகவை கையில் எடுக்க முடிவு செய்துவிட்டதாக பார்க்கப்பட்டது. ஆனாலும் நேற்று வரை அன்புமணிக்கு ஆதரவாக இருக்கும் 31 மாவட்டச் செயலாளர்களை ராமதாஸ் பதவியில் நீக்குவதாக அறிவித்தார். அதேபோல் வன்னியர் சங்க நிர்வாகிகளின் ஆதரவும் ராமதாஸ்-க்கு இருக்கிறது. இதனால் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையிலான மோதலை நிறைவு செய்ய சமாதான பேச்சுவார்த்தைகள் நடந்தன.
தைலாபுரத்தில் ஆடிட்டர் குருமூர்த்தி
இந்த நிலையில் சென்னையில் இருந்த அன்புமணி திடீரென இன்று காலை தைலாபுரத்தில் உள்ள ராமதாஸை சந்திக்க புறப்பட்டார். அன்புமணியின் திடீர் பேச்சுவார்த்தைக்கு என்ன காரணம் என்று குழப்பம் ஏற்பட்டது. இந்த நிலையில் அன்புமணி ராமதாஸ் தைலாபுரம் வந்த சில மணி நேரங்களிலேயே துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி மற்றும் அதிமுக மூத்த தலைவர் சைதை துரைசாமி வந்தனர்.
அமித் ஷா - குருமூர்த்தி
இவர்கள் இருவரும் இணைந்து பாமக நிறுவனர் ராமதாஸை சந்தித்துள்ளனர். அன்புமணி ராமதாஸ்-க்காக சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருப்பதாக பார்க்கப்படுகிறது. கடந்த முறை சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆடிட்டர் குருமூர்த்தியுடன் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக அவரின் இல்லத்திலேயே ஆலோசனை மேற்கொண்டார்.
பாஜக - பாமக கூட்டணி?
இதனால் ஆடிட்டர் குருமூர்த்தி நேரடியால தைலாபுரத்திற்கே சென்று ராமதாஸுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவது பல்வேறு விவாதங்களை தொடங்கி இருக்கிறது. இதனால் அதிமுக - பாஜக கூட்டணியில் பாமகவை இணைக்க ஆடிட்டர் குருமூர்த்தி மற்றும் சைதை துரைசாமி ஆகியோர் முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக பார்க்கப்படுகிறது.
வட மாவட்டங்களில் கவனம்
ஜூன் 8ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மதுரை வருகிறார். அப்போது தென் மாவட்டங்களில் அடுத்தக் கட்ட தேர்தல் பணிகள் குறித்து ஆலோசிக்க உள்ளார். இதனால் வட மாவட்டங்களில் அதிமுக - பாஜக கூட்டணியை வலுப்படுத்த ஆடிட்டர் குருமூர்த்தி முயற்சிகளை மேற்கொண்டிருப்பதாக விவாதங்கள் நடந்து வருகின்றன.
-
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல்












Click it and Unblock the Notifications