பாஜகவுக்காக வந்தேனா.. 3 மணி நேரமாக ராமதாஸுடன் பேசியது என்ன? ஆடிட்டர் குருமூர்த்தி விளக்கம்!
விழுப்புரம்: பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் ஆடிட்டர் குருமூர்த்தி இடையிலான 3 மணி நேர சந்திப்பு நிறைவடைந்துள்ளது. நீண்ட கால நண்பரான ராமதாஸை சந்திக்க வந்ததாக கூறிய குருமூர்த்தி, பாஜகவுக்காக தைலாபுரம் வரவில்லை என்று தெரிவித்துள்ளார். மேலும் அன்புமணி தைலாபுரம் வந்ததே தெரியாது என்றும் விளக்கம் கொடுத்துள்ளார்.
தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அதிமுக - பாஜக கூட்டணி உறுதியாகி இருக்கிறது. அடுத்தக் கட்டமாக பாஜக தரப்பில் பாமகவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியது. ஆனால் பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையிலான மோதல் உச்சத்தில் இருந்து வருகிறது. இந்த நிலையில் இன்று காலை அன்புமணி திடீரென தைலாபுரம் புறப்பட்டார்.

அன்புமணி - ராமதாஸ் சந்திப்பு
தைலாபுரம் வந்த அன்புமணி, சுமார் 30 நிமிடங்கள் ராமதாஸ் உடன் பேச்சுவார்த்தை நடத்திவிட்டு புறப்பட்டு சென்றார். அன்புமணி சென்ற மறுநிமிடமே ஆடிட்டர் குருமூர்த்தி மற்றும் அதிமுக மூத்த தலைவர் சைதை துரைசாமி ஆகியோர் தைலாபுரம் வந்தனர். ஜூன் 8ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மதுரை வருகிறார்.
தைலாபுரத்தில் குருமூர்த்தி
இதனால் ராமதாஸ் - குருமூர்த்தி இடையிலான சந்திப்புக்கு அமித் ஷா வருகையே காரணம் என்று பார்க்கப்பட்டது. 2 வாரங்களுக்கு முன்பாக ஏற்கனவே சைதை துரைசாமி தைலாபுரம் வந்து ராமதாஸை சந்தித்திருந்தார். தற்போது மீண்டும் வந்த சைதை துரைசாமி, உடன் குருமூர்த்தியையும் அழைத்து வந்திருப்பது பல்வேறு விவாதங்களை எழுப்பி இருக்கிறது.
3 மணி நேரம் ஆலோசனை
இதன்பின் தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் குருமூர்த்தி இடையிலான சந்திப்பு சுமார் 3 மணி நேரம் வரை நீடித்தது. இதன்பின் காரில் வெளியில் வந்த குருமூர்த்தி செய்தியாளர்களை சந்தித்து, நான் பாஜகவுக்காக தைலாபுரம் வரவில்லை. ராமதாஸ் உடன் எனக்கு நீண்ட கால நட்பு இருக்கிறது. நண்பனை பார்க்கவே வந்தேன். வேறு எதுவும் இல்லை என்று தெரிவித்தார்.
குருமூர்த்தி விளக்கம்
தொடர்ந்து அன்புமணியும் தைலாபுரம் வந்தாரே என்ற கேள்விக்கு, அன்புமணி தைலாபுரம் வந்தாரா என்று அருகில் இருந்த சைதை துரைசாமியிடம் அதிர்ச்சியாக கேள்வி எழுப்பினார். தொடர்ந்து, அன்புமணி தைலாபுரம் வந்தது எனக்கு தெரியாது. பிரச்சனை நடக்கும் இடங்களுக்கும் நான் செல்லவில்லை. நான் சொல்லும் இடங்களில் பிரச்சனை உள்ளது என்று தெரிவித்தார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications