பிரபல சினிமா டைரக்டர் நறுக்.. "ஏன் கத்தணும், கதறணும், உருளணும்? இனியாவது திருந்துங்க".. கவனித்த திமுக
விழுப்புரம்: Gowthaman, cinema director, film director gowthaman slams dmk, vck mp ravikumar, சினிமா டைரக்டர், டைரக்டர் கவுதமன், கவுதமன் பேட்டி, திமுக, விசிக ரவிக்குமார், விழுப்புரம் மேல்பாதி,
விழுப்புரம் மாவட்டம், கோலியனூர் அருகேயுள்ள மேல் பாதி கிராம விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது.. அங்குள்ள தர்மராஜா திரெளபதி அம்மன் கோவிலில் பட்டியலின மக்கள் சாமி தரிசனம் செய்ய, வன்னியர் சமூக மக்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்..

இதையடுத்து, மாவட்ட நிர்வாகத்தினர் 8 முறை பேச்சுவார்த்தை நடத்தியும் அது தோல்வியில் முடிந்தது. இதனையடுத்து வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் தலைமையிலான அதிகாரிகள் கோவிலுக்கு கடந்த ஜுன் 7ம் தேதி சீல் வைத்தனர்...
மேலும் 2 தரப்பிலும் கோவில் விவகாரம் தொடர்பாக எழுத்து பூர்வமாக விளக்கம் அளித்தனர்.. எனவே, அந்த கோயிலுக்கு வருவாய் துறையினர் பூட்டி சீல் வைத்துள்ளனர்.வெளி ஆட்கள் கிராமத்துக்குள் வர தடைவிதிக்கப்பட்டுள்ளது. கோவிலை திறந்து பூஜை செய்வதற்கு அர்ச்சகருக்கு மட்டும் அனுமதி அளிக்க வேண்டுமென கோரிக்கைகள் எழுந்துள்ளன.
பிரபல டைரக்டர்: இந்நிலையில், பிரபல திரைப்பட டைரக்டரும், தமிழ் பேரரசு கட்சியின் பொதுச்செயலாளருமான வ. கெளதமன் மேல்பாதி கிராமத்துக்குள் சென்று, அங்குள்ள மக்களிடம் பேசினார்... இந்த விஷயம் அதற்குள் வளவனூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு சொல்லவும், சிறிது நேரத்தில் போலீஸார் விரைந்து வந்தனர்.. கௌதமனை அங்கிருந்து வெளியேற்றி, விழுப்புரம் மாவட்ட எஸ்பி ஆபீசுக்கு அழைத்துவந்தனர்.
எஸ்பி. கோ.சஷாங்க் சாயை சந்தித்த கவுதமன், மேல்பாதி பிரச்சினை குறித்து கேட்ட றிந்தார். பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி தந்த வ.கெளதமன், "மேல்பாதி கிராமத்தில் உள்ள திரெளபதி அம்மன் கோயிலில் வழிபாடு மேற்கொள்வதில் எந்தவிதமான பிரச்சினையும் இல்லை. அரசியல் கட்சியினர் பெரிதுப்படுத்தியதன் காரணமாகவே இப்பிரச்சினையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

சிறைவைப்பு: இதனால் கோவில் சாமி சிறை வைக்கப்பட்டு உள்ளது.. இதற்கு அந்த மக்கள் பழியை சுமந்து கொண்டு இருக்கிறார்கள்.. அமைச்சர் பொன்முடி இதில் சாராயம் குடித்து இறந்த வழக்கினை மறைப்பதற்காக பொய் பிரச்சாரம் செய்துள்ளார்.. திமுகவுடன் விசிக கட்சி கூட்டணியில் இருக்க வேண்டும் என்பதால் இந்த விவகாரத்தினை எம்பி ரவிக்குமார் பெரிதாக்கி உள்ளார்..
தமிழகத்தில் விரைவில் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் திமுகவின் கூட்டணி கட்சியினர் தங்களது இருப்பை உறுதி செய்து கொள்வதற்காகவே திட்டமிட்டு இதை தூண்டி விட்டுள்ளனர். கோயில் பிரச்சினை தொடர்பாக மாவட்ட நிர்வாகம் சார்பில் 7 முறை அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டும் தீர்வு காணப்படவில்லை. திரெளபதி அம்மன் கோயில்இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமானது என்பதற்கான ஆதாரமும் காட்டப்படவில்லை.
திருடுற கூட்டம்: அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளார்.. செந்தில் பாலாஜி திமுகவிற்கே நிதி களஞ்சியம்.. அவரே பதவி விலகி வேண்டும்... அவர் தவறு செய்யவில்லை என்றால் ஏன் கத்தனும், கதறனும், உருளனும்? செந்தில் பாலாஜிக்கு நடைபெற்றதை ரசிக்க முடியல.. ஆனாலும், திருடுகிற கூட்டம் இனியாவது திருந்துகள்.. யார் தப்பு செய்தாலும் யோசிக்காமல் உடனே அவர்களை பதவியில் இருந்து தூக்கி எறியணும்" என்றார்.
-
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
திமுக VS அதிமுக.. சென்னையில் 11 இடங்கள் உள்பட 121 தொகுதிகளில் நேரடி போட்டி.. மாவட்ட வாரியாக முழு லிஸ்ட் -
அண்ணா நகர் முதல் வில்லிவாக்கம் வரை.. சென்னையில் 6 சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு ‘கல்தா’.. லிஸ்ட் -
Mano Thangaraj: அமைச்சர் மனோ தங்கராஜுக்கு சீட் இல்லை.. கைவிரித்த திமுக தலைமை.. இதுதான் காரணமா? -
விட்டு கொடுக்காத திமுக.. விஜய்யுடன் நேருக்கு நேர் போட்டி.. பெரம்பூர் சிட்டிங் எம்எல்ஏக்கு வாய்ப்பு -
திவ்யா சத்யராஜ், வைஷ்ணவி, ராஜீவ் காந்தி, கனிமொழி, போஸ் வெங்கட்டுக்கு சீட் ஏன் கிடைக்கவில்லை? -
என்னங்க சொல்றீங்க? அப்போ எல்லா கணக்கும் தப்பா போகுதா? ஷாக்கான விஜய்.. காரணமான அந்த ரிப்போர்ட் -
திமுக அமைச்சர்களின் தொகுதிகளில் களம் இறங்கும் அதிமுக வேட்பாளர்கள் யார் யார்? இதோ லிஸ்ட்! -
164 தொகுதிகளில் களமிறங்கும் திமுக! வேட்பாளர்கள் யார்? மாலையில் அறிவிக்கும் ஸ்டாலின்? -
விசிகவுக்கு திருப்போரூர், பெரியகுளம் உள்பட 8 தொகுதிகள்! உத்தேச பட்டியல் வெளியீடு! -
ஸ்டாலின் கவுன்டவுன் ஸ்டார்ட்.. முன் கூட்டியே தொடங்கும் பிரச்சாரம்.. ஏவப்போகும் அஸ்திரம் -
திமுக கூட்டணியில் தொகுதி லிஸ்ட்: வேட்பாளர் பட்டியல் இன்னும் வராதது ஏன்? பின்னணியில் 3 முக்கிய காரணம்











Click it and Unblock the Notifications