திண்டிவனத்தில் ‘என் கனவு என் எதிர்காலம்‘ திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

Subscribe to Oneindia Tamil

விழுப்புரம்: சட்டமன்ற தேர்தல் அறிவிப்பிற்கு குறுகிய காலமே உள்ளது. ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுக பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. கட்சி ரீதியாகவும், ஆட்சி ரீதியாகவும் பல்வேறு நடவடிக்கைகளுடன் களத்தில் வேகம் காட்டி வருகிறார்கள். பரபரப்பான சூழ்நிலையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் சென்ற முதல்வர் ஸ்டாலின் அந்த மாவட்டத்தில் முடிவடைந்த திட்டங்கள் மற்றும் பல்வேறு புதிய திட்டங்களுக்கு ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். மேலும் 'என் கனவு - என் எதிர்காலம்' என்கிற திட்டத்தையும் தொடங்கி வைத்தார்.

2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. தமிழ்நாட்டில் திமுக, அதிமுக, தவெக, நாம் தமிழர் என்று 4 முனை போட்டி நிலவி வருகிறது. கூட்டணிகள் கிட்டத்தட்ட இறுதி செய்யப்பட்டுவிட்டன. தொகுதி பங்கீடு, தேர்தல் வாக்குறுதிகள், பிரச்சாரம், கட்சி மாறுதல் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

MK Stalin En Kanavu En Ethirkaalam

ஸ்டாலின் திண்டிவனம் விசிட்

இந்நிலையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் சென்றார். 'என் கனவு - என் எதிர்காலம்' என்கிற புதிய திட்டத்தைத் தொடங்கி வைத்தார். ' உங்களுடன் ஸ்டாலின் முகாம்' மூலம் விழுப்புரத்தில் 1.80 லட்சம் மனுக்கள் பெறப்பட்டுள்ளன. அதனடிப்படையில் முதியோர் பாதுகாப்பு மற்றும் சமூகப் பாதுகாப்புத் திட்டப் பயன்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டத்தில் திமுக ஆட்சியில் தொடங்கி நிறைவடைந்த திட்டங்களின் தொடக்க விழா நடைபெற்றது. அதனுடன் பல்வேறு புதிய திட்டங்களுக்கும் முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து, இளைஞர்களின் கனவுகளை பதிவு செய்யும், 'என் கனவு - என் எதிர்காலம்' திட்டத்திற்காக உருவாக்கப்பட்ட இணையதளத்தை தொடங்கி வைத்தார்.

10,000 பயனாளிகளுக்கு நலத்திட்டம்

வேளாண்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகள் மூலம் 10,000க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. திண்டிவனம் வரும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு விழுப்புரம் திமுகவினர் பிரம்மாண்ட வரவேற்பளிக்கப்பட்டது. அதன் பிறகு, திண்டிவனம் தீர்த்தகுளம் பகுதியில் இருந்து செஞ்சி சாலை காந்தியார் திடல் வரை ஸ்டாலின் ஊர்வலமாக சென்றார். ஸ்டாலின் வருகையை முன்னிட்டு அங்கு 500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

முன்னதாக, திண்டிவனத்தில் அன்னை இந்திராகாந்தி பேருந்து நிலையத்தை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+