Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"வெறி".. கல்லூரி மாணவி ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை.. வயல்வெளியில் பயங்கரம்.. சுத்துப்போட்ட போலீஸ்

இன்று அதிகாலை 5 மணியளவில் இயற்கை உபாதை கழிப்பதற்காக, வீட்டுக்கு அருகே உள்ள வயல்வெளிக்கு தரணி சென்றிருக்கிறார். ஆனால், நீண்டநேரமாகியும் அவர் வரவில்லை.

Subscribe to Oneindia Tamil

விழுப்புரம்: விழுப்புரத்தில் இன்று அதிகாலை நடந்த அதிபயங்கர சம்பவம் அந்த மாவட்டத்தையே பற்றி எரிய வைத்துள்ளது. ஏதோ ரவுடியை கொலை செய்வதை போல கல்லூரி மாணவி ஒருவர் ஓட ஓட வெட்டி படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்.

இந்த சம்பவம் குறித்து நடத்தப்பட்டு வரும் விசாரணையில் அடுத்தடுத்து திகிலூட்டும் தகவல்கள் கிடைத்து வருகின்றன. எனினும், போலீஸார் இதுபற்றி முழுமையாக கூற மறுக்கிறார்கள். விசாரணை முழுமையாக முடிவடைந்ததும் அனைத்து விவரங்களும் வெளியிடப்படும் என போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நேற்று வரை அனைவரிடமும் சிரித்து பேசி விளையாடிக் கொண்டிருந்த ஒரு இளம்பெண், இன்று காலை ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதை பார்த்து அவரது பெற்றோரும், உறவினர்களும் கதறி அழுதது கல் நெஞ்சையும் கரைக்கும் விதமாக இருந்தது.

 பதற வைக்கும் கொலைகள்..

பதற வைக்கும் கொலைகள்..

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக இளம்பெண்கள் கொடூரமாக வெட்டிக் கொல்லப்படுவது அதிகரித்துள்ளது. 2016-ம் ஆண்டு நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி என்ற இளம்பெண் கொலை செய்யப்பட்டது தமிழகத்தை ஒரு உலுக்கு உலுக்கியது. ஆனால், அதன் பிறகு இளம்பெண்கள் கொலை செய்யப்படுவது சர்வ சாதாரணமாக மாறிவிட்டது. பெரும்பாலும் ஒருதலை காதல், காதல் முறிவு போன்ற பிரச்சினைகளே இந்தக் கொலைகளுக்கு மூலக்காரணமாக இருக்கிறது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவியை அவரது ஆண் நண்பர் ரயிலில் தள்ளி கொலை செய்தான். தன்னை காதலிக்க மறுத்ததால் ஆத்திரத்தில் இந்த படுபாதக செயலில் அவன் ஈடுபட்டான். அதேபோல, தாம்பரம் ரயில் நிலையத்தில் குரோம்பேட்டையை சேர்ந்த கல்லூரி மாணவி அவரது முன்னாள் காதலனால் கழுத்தறுத்து கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.

 நர்சிங் மாணவி

நர்சிங் மாணவி

இந்த சம்பவங்கள் ஏற்படுத்திய அதிர்ச்சி அடங்குவதற்குள்ளாக, தற்போது விழுப்புரத்தில் ஒரு பயங்கர சம்பவம் அரங்கேறியிருக்கிறது. அதுகுறித்து இங்கு பார்க்கலாம். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள ராதாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் தரணி (19). இவர் விழுப்புரத்தில் உள்ள நர்சிங் கல்லூரி ஒன்றில் முதலாமாண்டு படித்து வந்தார். அனைவரிடமும் சகஜமாக பழகக்கூடியவர் என்பவதால் தரணிக்கு தோழிகளும், நண்பர்களும் அதிகம் எனக் கூறப்படுகிறது.

 இயற்கை உபாதைக்காக..

இயற்கை உபாதைக்காக..

இதனிடையே, நேற்று மாலை வழக்கம் போல கல்லூரி முடிந்து வந்த மாணவி தரணி, வீட்டில் உள்ளவர்களிடம் எப்போதும் போல பேசிவிட்டு உறங்கச் சென்றார். இந்நிலையில், இன்று அதிகாலை 5 மணியளவில் இயற்கை உபாதை கழிப்பதற்காக, வீட்டுக்கு அருகே உள்ள வயல்வெளிக்கு தரணி சென்றிருக்கிறார். ஆனால், நீண்டநேரமாகியும் அவர் வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவரது பெற்றோர் வயல்வெளிக்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது அங்கு பார்த்த காட்சி அவர்களை அதிர்ச்சியில் உறைய வைத்தது.

 ரத்தக்களரி.. சிக்கும் மிருகம்..

ரத்தக்களரி.. சிக்கும் மிருகம்..

கழுத்து, தலை உள்ளிட்ட இடங்களில் ஆழமாக வெட்டு விழுந்த நிலையில், ரத்த வெள்ளத்தில் தரணி அங்கு இறந்து கிடந்தார். இதை பார்த்த அவரது பெற்றோரும், உறவினர்களும் கதறி அழுதனர். இதுகுறித்து தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து, தரணியின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து போலீஸார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. மதுரப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர்தான் இந்த வெறிச்செயலில் ஈடுபட்டிருக்கிறார் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்திருப்பதாக போலீஸார் தெரிவித்தனர். காதல் விவகாரத்தில் இந்தக் கொலை நடந்திருப்பதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+