வேங்கைவயல் கொடூரம்.. விக்கிரவாண்டி ‘வக்கிரம்’.. குடிநீர் கிணற்றில் மனித மலம்? ஆட்சியரின் விளக்கம்..!
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே கே.ஆர்.பாளையம் கிராமத்தில் நூற்றுக்கு மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வரும் நிலையில் அவர்கள் குடிநீருக்காக பயன்படுத்தும் திறந்தவெளி கிணற்றில் மர்ம நபர்களால் மனித மலம் கழிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சாதி மறுப்பு, சமூக நீதி, கல்வி போன்றவற்றில் இந்தியாவுக்கு எடுத்துக் காட்டாக இருந்த தமிழகம் தற்போது சாதிவெறியர்களின் கூடாரமாக மாறி விட்டதோ என மக்கள் அச்சப்படும் சூழல் தான் தற்போது பல பகுதிகளில் நிலவுகிறது.

உடுமலை சங்கர் மரணம், நாங்குனேரி மாணவன் கொலை முயற்சி, இரட்டைக் குவளை சம்பவங்கள், சாதி மறுப்பு திருமணம் இளைஞர் கொலை - மனைவி தற்கொலை என தமிழகம் கண்ட சாதிய வன்கொடுமை சம்பவங்கள் கணக்கில் அடங்காது.
வேங்கைவயல் சம்பவம்: அதையெல்லாம் விட மக்கள் குடிக்கும் தண்ணீரில் சாதி வெறியால் மலம் கலக்கப்பட்டதாக செய்தி வெளியான போது மக்கள் விக்கித்து போனார்கள். 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் நாளன்று புதுக்கோட்டை அருகே இறையூர் வேங்கை வயல் பகுதியில் தாழ்த்தப்பட்ட மக்கள் பயன்படுத்தி வந்த குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்டு இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியானது. நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்திய இந்த சம்பவத்தை அடுத்து தமிழகத்தின் பல்வேறு அமைப்புகளும் அரசியல் கட்சிகளும் போராட்டத்தில் குதித்தன.
காவல்துறை திணறல்: தமிழக காவல்துறை குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறிய நிலையில் இந்த வழக்கு வெள்ளனூர் போலீசாரிடம் இருந்து சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. ஆனாலும் இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. டிஎன்ஏ சோதனை, குரல் மாதிரி பரிசோதனை வரை சென்று விட்ட நிலையில் தற்போது வரை அதாவது பதினைந்து மாதங்களாகியும் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவுகளை கலந்த அந்த கயவர்கள் யார் என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை.

மாட்டு சாணம்: இதேபோல் புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக் கோட்டை ஒன்றியம் சங்கம்விடுதி ஊராட்சிக்குட்பட்ட குருவண்டான் தெருவில் பட்டியலின மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டிருப்பதாக வெளியானது. குருவண்டான் தெரு குடிநீர்த் தொட்டியில் சில நாட்களுக்கு முன்பாகவே மாட்டுச்சாணம் கலக்கப்பட்டிருக்கக் கூடும் எனக் கூறும் அப்பகுதி மக்கள் இதன் காரணமாக ஏராளமானோருக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகவும் குற்றம் சாட்டினர். ஆனால் அது பாசி என அதிகாரிகள் விளக்கம் தெரிவித்தனர்.
மனித மலம்: இந்த சம்பவம் முடிவதற்குள் விழுப்புரம் மாவட்டத்தில் மற்றுமொரு சம்பவம் அரங்கேறியிருப்பதாக வரும் மற்றொரு தகவல் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தாலுக்கா (செஞ்சி காவல் உட்கோட்டம்) கஞ்சனூர் ஊராட்சிக்கு உட்பட்ட கே.ஆர்.பாளையம் கிராமத்தில் நூற்றுக்கு மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் குடிநீராக பயன்படுத்தும் திறந்தவெளி கிணற்றில் மர்ம நபர்களால் மனித மலம் கழிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மக்கள் புகார்: இந்த கிராமத்தில் இருக்கும் குடிநீர் கிணற்றில் இருக்கும் நீரை மோட்டார் மூலம் இறைத்து அதற்கு அருகில் உள்ள குடிநீர் தொட்டியில் நிரப்பப்படுகிறது. பின்னர் அந்த கிராமத்தில் வசிக்கும் 100 குடும்பங்களுக்கு குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. கிராமத்தின் ஒரே குடிநீர் ஆதாரமான அந்த கிணற்றில், மதுபோதையில் சில மர்ம நபர்கள் மலம் கழித்ததாக புகார் எழுந்துள்ளது. கிணற்றின் மீதுள்ள தடுப்பு சுவற்றின் மீது மனித மலம் இருந்ததாக கூறப்படும் நிலையில் இதனை கண்ட கிராம மக்கள் கஞ்சனூர் காவல் நிலைத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக தற்போது விக்கிரவாண்டி ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் அப்பகுதியில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆட்சியர் மறுப்பு: இதற்கிடையே இந்த சம்பவத்தை மாவட்ட நிர்வாகம் மறுத்துள்ளது. இதுதொடர்பாக விழுப்புரம் மாவட்ட ஆட்சித்தலைவர் பழனி விடுத்துள்ள பத்திரிக்கைச் செய்தியில்," விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், கஞ்சனூர் மதுரா கே.ஆர்.பாளையம் கிராமத்தில் அமைந்துள்ள குடிநீர் கிணற்றில் மலம் கலப்பு என சில தனியார் தொலைக்காட்சிகளில் இன்று வரப்பெற்ற செய்தி முற்றிலும் தவறான செய்தியாகும். மாவட்ட ஆட்சியர் அவர்களின் உத்தரவின் பேரில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி), விக்கிரவாண்டி வருவாய் வட்டாட்சியர், காணை வட்டார வளர்ச்சி அலுவலர், செயற்பொறியாளர், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் ஆகியோர் அடங்கிய குழு சம்மந்தப்பட்ட இடத்தினை பார்வையிட்டது.
பாதுகாப்பானது: தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் செயற்பொறியாளர் மேற்படி கிணற்றில் உள்ள நீரை பரிசோதனை செய்ததில் குடிநீர் முற்றிலும் பாதுகாப்பானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மலம் என செய்திகளில் வரப்பெற்ற பொருளானது தேன் அடை ஆகும் எனவும் இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது. கே.ஆர்.பாளையம் கிராமத்தில் வசித்து வரும் பொதுமக்கள் முன்னிலையில் எடுத்துக்காட்டப்பட்டது. இருப்பினும் மேற்படி கிணற்றின் மீது இரும்பு கம்பிகளால் வேலி அமைக்க மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவிட்டுள்ளார்." என கூறியுள்ளார்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications