கருணாநிதி பெயர் வேண்டாம்.. திண்டிவனம் பஸ் நிலையத்துக்கு பெயர் சூட்ட காங்கிரஸ் கடும் எதிர்ப்பு - பின்னணி
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் - சென்னை சாலையில் நகராட்சி சார்பில் ரூ.25 கோடி செலவில் புதிய பஸ் நிலையம் கட்டப்பட்டுள்ளது. திறப்பு விழாவிற்கு தயாராக உள்ள பஸ் நிலையத்துக்கு மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பெயரை சூட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் கருணாநிதியின் பெயர் சூட்ட காங்கிரஸ் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஏற்கனவே திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியினருக்கு நிறைய சீட் கிடைக்காது என கூறப்படும் நிலையில் இந்திரா காந்தியின் பெயர் வைக்க கோரிக்கை வைத்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் பழைய பஸ் நிலையத்துக்கு மாற்றாக புதிய பஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. ரூ.25 கோடி செலவில் திண்டிவனம் நகராட்சி சார்பில் திண்டிவனம் - சென்னை சாலையில் இந்த பஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த பஸ் நிலையத்தின் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் விரைவில் திறக்கப்பட உள்ளது. இந்நிலையில் தான் இந்த பஸ் நிலையத்திற்கு மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பெயர் வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் சமீபத்திய நகர் மன்ற கூட்டத்தில், 'முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் நுாற்றாண்டு பேருந்து நிலையம்' என பெயர் வைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனால் கருணாநிதியின் பெயர் பஸ் நிலையத்துக்கு வைக்கப்பட வாய்ப்புள்ளது. இந்நிலையில் தான் கருணாநிதியின் பெயர் சூட்ட காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
கருணாநிதி பெயரை வைப்பதற்கு பதில் மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பெயரை வைக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியறுத்தி உள்ளது. விரைவில் தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி அதிக சீட்டுகளை எதிர்பார்க்கிறது. ஆனால் திமுக அதனை கொடுக்காது என்று கூறப்படுகிறது. இப்படி கூட்டணிக்குள் குழப்பம் இருப்பதாக கூறப்படும் நிலையில் கருணாநிதியின் பெயர் வைக்க எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாகதமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
"சென்னை - திண்டிவனம் நெடுஞ்சாலையில் ரூபாய் 25 கோடி செலவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பேருந்து நிலையத்திற்கு பெயர் வைப்பதில் சில பிரச்சினைகள் எழுந்துள்ளன. நீண்டகாலமாக திண்டிவனம் பேருந்து நிலையத்திற்கு முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி பேருந்து நிலையம் என்று பெயர் சூட்டப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது.
புதிய பேருந்து நிலையத்தை அமைக்கிற போது பழைய பெயரையே சூட்டுவது தான் மரபாகும். அந்த மரபை மீறுகிற வகையில் வேறொரு பெயரை சூட்டுவது எவ்வகையிலும் நியாயமல்ல. கடலூர் மக்களவை உறுப்பினர் டாக்டர் எம்.கே. விஷ்ணுபிரசாத் புதிய பேருந்து நிலையத்திற்கு முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பெயரை சூட்ட வேண்டுமென்ற கோரிக்கையை வலியுறுத்தி எனக்கு கடிதம் எழுதியிருக்கிறார்.
1980 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலின் போது நேருவின் மகளே வருக, நிலையான ஆட்சி தருக என்று எந்த இந்திரா காந்தியை வரவேற்று கருணாநிதி உரையாற்றினாரோ அதை பெருமைப்படுத்துகிற வகையில், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பெயரையே புதிய பேருந்து நிலையத்திற்கு சூட்ட வேண்டுமென்ற கோரிக்கையை தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் பரிசீலிக்க வேண்டுமென அன்போடு கேட்டுக் கொள்கிறேன்." என கூறியுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications