“வர்ணாசிரமம்..” பாஜகவின் திட்டம்.. ஸ்டாலினிடம் நேரில் பேசி இருக்கேன் - சீதாராம் யெச்சூரி வார்னிங்
விழுப்புரம்: அடித்தட்டு மக்களை நசுக்கும் வேலையை செய்து வரும் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி, வர்ணாசிரமத்தை கொண்டு வரும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி தெரிவித்து உள்ளார்.
விழுப்புரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பட்டியல், பழங்குடியின மக்களின் பாதுகாப்பு மற்றும் உரிமை மீட்பு மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் அக்கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பாஜகவை கடுமையாக விமர்சித்தார்.

"தலித் மக்களுக்கு எதிராக அநீதி இழைக்கப்படும் இடங்களில் எல்லாம் சிவப்புக் கொடி பறக்க வேண்டும். உத்தரப்பிரதேச மாநிலத்தில் தலித் சகோதரிகள் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். ஆணவப் படுகொலையும் அதிகரித்து இருக்கிறது. இந்தியாவில் இன்று நடைபெறும் பாஜக ஆட்சியில் அடித்தட்டு மக்களை நசுக்கும் வேலை நடைபெறுகிறது.
பாஜக வர்ணாசிரமத்தை கொண்டு வரும் செயலை தீவிரமாக செய்து கொண்டு இருக்கிறது. பாசிச இந்துத்துவ கொள்கைகளும் கோட்பாடுகள் உயர்ந்து கொண்டிருக்கின்றனர். பாஜக அதை மேன்மேலும் உயர்த்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. நாட்டின் பல இடங்களில் கைகளால் மலம் அள்ளும் நிலை நாட்டின் பல இடங்களில் தொடர்ந்துகொண்டு இருக்கிறது.
பாஜக அரசில் தலித்துகளுக்கு எதிராக பல கொடுமைகள் நடக்கின்றன. சாதிய வன்கொடுமைகளுக்கு எதிராக இந்தியாவில் போராட்டங்களை நடத்தினாலும் நிலை மாறவே இல்லை. பொருளாதார ரீதியாக மக்களுக்கு அங்கீகாரம் கிடைத்தால் மட்டுமே மாற்றம் செய்யப்படும். நாட்டின் வளங்களை கொள்ளையடித்துக் கொண்டு இருக்கும் பாஜக அரசை நாம் வீழ்த்த வேண்டும்.
தலித்துகள் மற்றும் முஸ்லிம் மாணவர்கள் வெளிநாடுகளுக்கு சென்று கல்வி கற்பதற்காக மத்திய அரசு வழங்கி வரும் உதவித் தொகையை மோடி அரசாங்கம் நிறுத்தி வைத்து இருக்கிறது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நான் சந்தித்து பேசினேன். அப்போது மதசார்பற்ற அமைப்புகளை ஒன்றிணைக்க வேண்டும் என்று நான் தெரிவித்தேன்.

கர்நாடகா மாநில மக்கள் மிகப்பெரிய வெற்றியை கொடுத்து இருக்கிறார்கள். ஒளிமயமான இந்தியாவை உருவாக்குவதற்கான தேவை உள்ளது. சமூக நீதி போராட்டத்தை எடுத்து செல்ல வேண்டிய தேவையும் இருக்கிறது. அதற்கு உதாரணமாக தமிழ்நாடு உள்ளது." என்று தெரிவித்துள்ளார்.
இந்த மாநாட்டில் தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, விடுதலை சிறுத்தைகள் பொதுச்செயலாளர் ரவிக்குமார் எம்பி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் கே பாலகிருஷ்ணன், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் தி வேல்முருகன் எம்.எல்.ஏ, மதிமுக அரசியல் ஆய்வு மைய செயலாளர் செந்திலதிபன், திராவிடர் கழக பொதுச்செயலாளர் சந்திரசேகரன், அய்யா வழி சமய தலைமை குரு பாலபிரஜாபதி அடிகளார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இந்தியாவில் ஆணவப் படுகொலைகளை தடுப்பதற்கான தனிச் சட்டங்களை இயற்ற வேண்டும், பஞ்சமி நிலங்களை மீட்டு தலித் மக்களின் பயன்பாட்டுக்காக அவற்றை வழங்க வேண்டும் போன்ற பல்வேறு முக்கிய தீர்மானங்களை ஒருமனதாக நிறைவேற்ற வேண்டும்.
-
6 சீட் கேட்டு அடம் பிடிக்கும் மார்க்சிஸ்ட்.. 5ல் உறுதியாக ஸ்டாலின்! இன்று திமுகவுடன் மீண்டும் பேச்சு -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு!












Click it and Unblock the Notifications