சடலங்களுடன்.. விசித்திர "பழக்கம்" கொண்ட சிவராஜ்.. பரிதாப பாட்டி.. விழுப்புரம் கோர்ட் சொன்னதை பாருங்க
பாட்டியை பலாத்காரம் செய்த இளைஞருக்கு சாகும்வரை ஜெயில் தண்டனை தரப்பட்டுள்ளது
விழுப்புரம்: 26 வயது நபரின் காமக்கொடூரத்தை பார்த்து விழுப்புர மாவட்டம் அதிர்ந்து போயுள்ளது.. இது தொடர்பான வழக்கின் தீர்ப்பும் தற்போது வெளியாகி உள்ளது.
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூரை அடுத்த ஒட்டனந்தல் காலனி புதுமனை தெருவை சேர்ந்தவர் கவிதாஸ்.. 26 வயதாகிறது.. இவர் பொக்லைன் எந்திர டிரைவராக வேலை பார்க்கிறார்.
கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம், ஆலங்குப்பம் ஊராட்சி பகுதியில் குடிநீர் குழாய் புதைப்பதற்கான பணிக்காக பள்ளம் தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

கவிதாஸ்
அப்படித்தான் 17.2.2019 அன்றைய தினம் இரவு கவிதாஸ், தன்னுடைய வேலையை முடித்துவிட்டு, இரவு நேரம் வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார்.. அப்போது மணி 12 ஆகிவிட்டது.. சாலையோரம் உள்ள வீடு ஒன்றில், 70 வயதுடைய பாட்டி தூங்கி கொண்டிருந்தார்.. அந்த வீட்டிற்குள் யாரும் இல்லை.. பாட்டி மட்டும் தனியாக படுத்து தூங்கிக்கொண்டிருந்தார். இதை பார்த்த கவிதாஸ், அந்த வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து, தூங்கிக்கொண்டிருந்த பாட்டியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார்..

பேனா கத்தி
இதனால் அதிர்ச்சி அடைந்த பாட்டி, கத்தி கூச்சலிட்டுள்ளார்.. ஆத்திரமடைந்த கவிதாஸ், தான் வைத்திருந்த பேனா கத்தியால் பாட்டியின் கழுத்தில் குத்திக்கொலை செய்துவிட்டார்.. அதற்கு பிறகு, பாட்டியின் சடலத்துடன் வன்கொடுமை செய்துள்ளார்.. அந்த சமயத்தில் பாட்டியின் வீட்டில் நடுராத்திரி லைட் எரிவதை அவரது உறவினர்கள் கவனித்துள்ளனர்.. பாட்டிக்கு உடம்பு சரியில்லாமல் போய்விட்டதோ என்று நினைத்து, விசாரிப்பதற்காக வீட்டுக்கு வந்துள்ளனர்..

சடலம் உறவு
ஆனால், அதற்குள் கவிதாஸ் அங்கிருந்து தப்பித்து ஓடிவிட்டார்.. பாட்டி சடலமாகி அலங்கோல நிலையில் இருப்பதை பார்த்து பதறிப்போன உறவினர்கள், உடனடியாக திருவெண்ணெய்நல்லூர் போலீசாருக்கு தகவல் தரவும் அவர்கள் கவிதாசை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை விழுப்புரம் மகளிர் கோர்ட்டில் இத்தனை நாட்களும் நடந்து வந்த நிலையில், அனைத்துவிதமான சாட்சிகளின் விசாரணையும் முடிவடைந்தது..

சாகும்வரை
இறுதியில், குற்றம் சாட்டப்பட்ட கவிதாசுக்கு இயற்கையாக மரணம் ஏற்படும் வரை சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும், ரூ.3 ஆயிரம் அபராதம் விதித்தும் நீதிபதி (பொறுப்பு) சாந்திபரபரப்பான தீர்ப்பு கூறினார். இதையடுத்து சிறை தண்டனை விதிக்கப்பட்ட கவிதாஸ், கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் அரசு வழக்கறிஞர் சங்கீதா ஆஜராகியிருந்ததார்.. இந்த கவிதாஸ் ஒரு ரவுடியாம்.. ஏற்கனவே 8 வழக்கில் தொடர்புடையவரும்கூட..

அக்கா - தங்கை
இப்படித்தான், கண்டமங்கலம் காவல் நிலையத்திற்குட்பட்ட கலித்திரம்பட்டு பகுதியில் அக்கா - தங்கை 2 பேரையுமே கொலை செய்துள்ளார்.. அந்த 2 பெண்களுமே வயதானவர்களாம்.. அந்த சடலங்களுடன் உறவு கொண்டுள்ளார்.. இறுதியில் நகையை திருடி சென்ற கேஸும் இவர் மீது உள்ளது.. வயதான பெண்களை கொலை செய்துவிட்டு, அந்த சடலங்களுடன் உறவு கொள்வது என்பது சிவதாஸின் பழக்கமாம்.. ஆக, பெண் என்பவள், கைக்குழந்தையாக, சிறுமியாக, குமரியாக, தாயாக, ஏன் கிழவியாக இருக்க வேண்டும் என்றுகூட கட்டாயமில்லை.. ஆனால், அவள் "பெண்" என்ற ஒரு அடையாளத்துடன் இருந்தால் மட்டும் போதும் இந்த காம கொடூரர்களுக்கு..!!












Click it and Unblock the Notifications