கடலூர் மாநாட்டுக்கு பணம் கேட்டு குவாரி உரிமையாளருக்கு மிரட்டல்.. தேமுதிக நிர்வாகி கைது
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் கிளியனூர் அருகே தென்கோடி பாக்கம் கிராமம் உள்ளது. இங்கு சென்னையை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் கல்குவாரி நடத்தி வருகிறார். இந்தநிலையில் தே.மு.தி.க. கிளியனூர் ஒன்றிய செயலாளர் தணிகைவேல் என்பவர் கடலூர் மாநாட்டுக்கு பணம் கேட்டு குவாரி உரிமையாளரை மிரட்டிதாக புகார் எழுந்தது.இந்த புகாரின் பேரில் தே.மு.தி.க. நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார். இன்னொரு நிர்வாகியை போலீசார் தேடி வருகிறார்கள்.
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள பாசார் கிராமத்தில் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தே.மு.தி.க.வின் மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0 நாளை மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் தே.மு.தி.க. கூட்டணி குறித்து அறிவிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இந்த மாநாடு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. மாநாட்டிற்காக கடந்த டிசம்பர் மாதம் பந்தக்கால் நடப்பட்டு, அனைத்து ஏற்பாடுகளும் முழுவீச்சில் செய்யப்பட்டிருக்கிறது. சுமார் 150 ஏக்கரில் மாநாட்டு பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் நாளை பிற்பகல் 2.30 மணிக்கு பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மாநாட்டு திடலில் கட்சி கொடியை ஏற்றி வைக்கிறார்.

தொடர்ந்து 3.23 மணிக்கு பரதநாட்டியம், கேப்டனை பற்றிய கதை, 3.40 மணிக்கு பட்டிமன்றம், மாலை 4.40 மணிக்கு கலைக்குழுவினரின் நடனம், பரத நாட்டிய குழுவினரின் நிகழ்ச்சி, கிராமிய கலைக்குழு நிகழ்ச்சி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது. இந்த மாநாட்டில் தேமுதிக தொண்டர்கள் பலர் பங்கேற்க வருகிறார்கள்
இதனிடையே விழுப்புரம் மாவட்டம் கிளியனூர் அருகே தென்கோடி பாக்கம் கிராமம் உள்ளது. இங்கு சென்னையை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் கல்குவாரி நடத்தி வருகிறார். இந்தநிலையில் தே.மு.தி.க. கிளியனூர் ஒன்றிய செயலாளர் 35 வயதாகும் தணிகைவேல், நல்லாவூர் கிராமத்தை சேர்ந்த தே.மு.தி.க. பிரமுகரான 35 வயதாகும் கலியமூர்த்தி ஆகியோர் நேற்று கல் குவாரிக்கு சென்று, பாலகிருஷ்ணனிடம், கடலூர் மாவட்டம் வேப்பூரில் நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெறும் தே.மு.தி.க. மாநாட்டுக்கு நன்கொடையாக பணம் தருமாறு கேட்டுள்ளனர். ஆனால் அவர் பணம் கொடுக்க மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள், பாலகிருஷ்ணனை மிரட்டியதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக கிளியனூர் போலீஸ் நிலையத்தில் பாலகிருஷ்ணன் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தே.மு.தி.க. ஒன்றிய செயலாளர் தணிகைவேலை நேற்று கைது செய்து, அடைத்தனர். கலியமூர்த்தியை தேடி வருகின்றனர்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications