சத்யராஜ்ஜூக்கு பேச முடியல.. பேப்பர்ல "அவர்" பேரை எழுதி காட்டினாராம்.. அதிர்ந்த போலீஸ்.. அய்யோ சசிகலா
விழுப்புரம்: கேட்டரிங் தொழில் செய்யும் சத்யராஜ் என்பவர், கழுத்து அறுபட்ட நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.. ஆனால், சீரியஸாக இருக்கிறாராம்.. சத்யராஜுக்கு என்ன ஆச்சு?
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்துள்ளது ஜம்போதி என்ற கிராமம்.. இங்கு வசித்து வருபவர் சத்யராஜ்.. 27 வயதாகிறது.. அதே கிராமத்தை சேர்ந்தவர் சசிகலா.. 24 வயதாகிறது.
இவர்கள் 2 பேரும் உயிருக்கு உயிராக காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.. கல்யாணம் ஆகி ஒரு வருடம்தான் ஆகிறது.. சத்யராஜ் சென்னையில் தங்கி கேட்டரிங் தொழில் செய்து வருபவராம்.

சத்யராஜ்
சம்பவத்தன்று வேலை விஷயமாக வெளியில் சென்றிருக்கிறார் சத்யராஜ்.. ஆனால் மறுபடியும் வீட்டுக்கு வந்துசேரவில்லை. இதனால் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்து, அவரை பல இடங்களில் தேட துவங்கினார்கள்.. இந்நிலையில், செஞ்சி அடுத்த மொடையூர் சங்கராபரணி ஆற்றுப்பாலத்தின் அடியில் சத்யராஜ் விழுந்து கிடப்பதை அங்குள்ளவர்கள் பார்த்துள்ளனர்.. சத்யராஜ் கழுத்து அறுக்கப்பட்டிருந்தது.. ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்... இதை பார்த்ததுமே பொதுமக்கள், உடனடியாக செஞ்சி போலீசுக்கு தகவல் சொன்னார்கள்..

விசாரணை
சம்பவ இடத்துக்கு சென்ற போலீசாரும், சுயநினைவின்றி விழுந்து கிடந்த சத்யராஜை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.. இதற்கு பிறகு சத்யராஜுக்கு சுயநினைவும் திரும்பியது.. அப்போது போலீசார் சத்யராஜிடம் விசாரணை நடத்த முயன்றனர்.. ஆனால், கழுத்து அறுபட்டதால் சத்யராஜால் பேச முடியவில்லை.. அதனால், நடந்த சம்பவம் என்ன என்பதை ஒரு பேப்பர் மூலம் போலீசுக்கு எழுதி காட்டினார்..

ஆன் தி ஸ்பாட்
அதில், எல்லாவற்றுக்கும் காரணம் தன்னுடைய மனைவி சசிகலாவும், ஜம்போதி கிராமத்தை சேர்ந்த அவருடைய கள்ளக்காதலன் ஜான் என்றும் எழுதினார் சத்யராஜ்... அவர்கள் 2 பேரும் சேர்ந்துதான், தன்னுடைய கழுத்தை அறுத்துவிட்டதாகவும் அந்த பேப்பரில் எழுதி காட்டினார். இதை படித்து போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.. அந்த நேரம் பார்த்து, செஞ்சி அரசு மருத்துவமனைக்கு, கணவனை பார்க்க சசிகலா வந்திருந்தார்.. அப்போது அவருடன் கள்ளக்காதலன் ஜானும் வந்திருந்தார்.. சசிகலாவை பார்த்ததுமே, 'ஆன் தி ஸ்பாட்டிலேயே' வைத்து அவரை கைது செய்தனர்... இந்த விஷயம் அறிந்து, கள்ளக்காதலன் ஜான் மருத்துவமனையிலிருந்து தப்பிவிட்டார்.. அவரை தேடிக்கொண்டு போலீசார் விரைந்தனர்..

சீரியஸ் சத்யராஜ்
திருவண்ணாமலையில் இருந்து அரசு பஸ்ஸில் ஓசூருக்கு தப்பி செல்ல ஜான் முயன்றார்.. அதற்குள் இந்த விஷயத்தை மோப்பம் பிடித்துவிட்ட போலீசார், பஸ் ஸ்டாண்டுக்கு சென்று, ஜானை சுற்றிவளைத்து கைது செய்தனர்.. 2 பேரிடமும் இனிமேல்தான் விசாரணை ஆரம்பமாக போகிறது.. கணவனை கழுத்தறுத்து கொன்றுவிட்டு, புதுவாழ்க்கையை வாழ பிளான் போட்டுள்ளது இந்த ஜோடி.. ஆனால், கொலை முயற்சி கடைசியில், ஃபெயிலியர் ஆகிவிட்டதால், விசாரணை வளையத்துக்குள் உள்ளனர். ஆனால் சத்யராஜ் சீரியஸாக இருக்கிறாராம்.. கழுத்து அறுக்கப்பட்டதால் ஆபத்தான நிலையில் இருப்பதாக சொல்கிறார்கள்.. அதனால், மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications