ஆற்றுப்பாலத்துக்கு அடியில் சசிகலா.. பின்னாடியே போன சத்யராஜ்.. திடீர்னு பார்த்தால் "அந்த" உருவம்.. ஐயோ
விழுப்புரம்: கேட்டரிங் தொழில் செய்யும் சத்யராஜ் என்பவர், கழுத்து அறுபட்ட நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.. ஆனால், சீரியஸாக இருக்கிறாராம்.. சத்யராஜுக்கு என்ன ஆச்சு?
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்துள்ளது ஜம்போதி என்ற கிராமம்.. இங்கு வசித்து வருபவர் சத்யராஜ்.. 27 வயதாகிறது.. அதே கிராமத்தை சேர்ந்தவர் சசிகலா.. 24 வயதாகிறது.
இவர்கள் 2 பேரும் உயிருக்கு உயிராக காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.. கல்யாணம் ஆகி ஒரு வருடம்தான் ஆகிறது.. சத்யராஜ் சென்னையில் தங்கி கேட்டரிங் தொழில் செய்து வருபவராம்.

சத்யராஜ்
சம்பவத்தன்று வேலை விஷயமாக வெளியில் சென்றிருக்கிறார் சத்யராஜ்.. ஆனால் மறுபடியும் வீட்டுக்கு வந்துசேரவில்லை. இதனால் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்து, அவரை பல இடங்களில் தேட துவங்கினார்கள்.. இந்நிலையில், செஞ்சி அடுத்த மொடையூர் சங்கராபரணி ஆற்றுப்பாலத்தின் அடியில் சத்யராஜ் விழுந்து கிடப்பதை அங்குள்ளவர்கள் பார்த்துள்ளனர்.. சத்யராஜ் கழுத்து அறுக்கப்பட்டிருந்தது.. ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்... இதை பார்த்ததுமே பொதுமக்கள், உடனடியாக செஞ்சி போலீசுக்கு தகவல் சொன்னார்கள்..

பரிதாப சத்யராஜ்
சம்பவ இடத்துக்கு சென்ற போலீசாரும், சுயநினைவின்றி விழுந்து கிடந்த சத்யராஜை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.. இதற்கு பிறகு சத்யராஜுக்கு சுயநினைவும் திரும்பியது.. அப்போது போலீசார் சத்யராஜிடம் விசாரணை நடத்த போலீசார் முயன்றனர்.. ஆனால், கழுத்து அறுபட்டதால் சத்யராஜால் பேச முடியவில்லை.. அதனால், நடந்த சம்பவம் என்ன என்பதை ஒரு பேப்பர் மூலம் போலீசுக்கு எழுதி காட்டினார்..

மடக்கிபிடித்தனர்
அதில், எல்லாவற்றுக்கும் காரணம் தன்னுடைய மனைவி சசிகலாவும், ஜம்போதி கிராமத்தை சேர்ந்த அவருடைய கள்ளக்காதலன் ஜான் என்றும் எழுதினார் சத்யராஜ்... அவர்கள் 2 பேரும் சேர்ந்துதான், தன்னுடைய கழுத்தை அறுத்துவிட்டதாகவும் அந்த பேப்பரில் எழுதி காட்டினார். இதை படித்து போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.. அந்த நேரம் பார்த்து, செஞ்சி அரசு மருத்துவமனைக்கு, கணவனை பார்க்க சசிகலா வந்திருந்தார்.. அப்போது அவருடன் கள்ளக்காதலன் ஜானும் வந்திருந்தார்.. சசிகலாவை பார்த்ததுமே, 'ஆன் தி ஸ்பாட்டிலேயே' வைத்து அவரை கைது செய்தனர்... இந்த விஷயம் அறிந்து, கள்ளக்காதலன் ஜான் மருத்துவமனையிலிருந்து தப்பிவிட்டார்.. அவரை தேடிக்கொண்டு போலீசார் விரைந்தனர்..

சீரியஸ் சத்யராஜ்
திருவண்ணாமலையில் இருந்து அரசு பஸ்ஸில் ஓசூருக்கு தப்பி செல்ல ஜான் முயன்றார்.. அதற்குள் இந்த விஷயத்தை மோப்பம் பிடித்துவிட்ட போலீசார், அவருடைய செல்போன் நம்பரை வைத்து அவர் எங்கே இருக்கிறார் என்று கண்டுபிடித்தனர்.. அதன்படி, திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியில், ஓசூருக்கு சென்று கொண்டிருந்த சத்யராஜை, அரசு பஸ்ஸூக்குள்ளேயே வைத்து கைது செய்தனர்.. பிறகு இருவரையும் அழைத்து வந்து விசாரணையை போலீசார் துவக்கினர்.. சத்யராஜூடன் 8 வருட காதலாம் சசிகலாவுக்கு... ஆனால், இதற்கு இடையூறாக சத்யராஜ் இருப்பதால்தான், கொலை செய்ய திட்டம் தீட்டியதாக சசிகலா தெரிவித்துள்ளார்..
அதன்படி, சென்னையில் கேட்டரிங் வேலையில் இருந்த சத்யராஜை, இதற்காகவே, ஊருக்கு வரும்படி சசிகலா அழைத்தாராம்.. சென்னையில் இருந்து நாட்டார்மங்கலம் பகுதிக்கு சத்யராஜ் வந்ததுமே, அங்கே டூ வீலரில் தயாராக காத்து கொண்டிருந்தாராம் சசிகலா.. சத்யராஜை தன்னுடைய பைக்கில் உட்காரவைத்து, ஜம்போதி கிராமத்திற்கு அழைத்து சென்றுள்ளார்... அப்போது வழியில் மொடையூர் ஆற்றுப்பாலம் அருகே சென்றதுமே, சம்பந்தமே இல்லாமல் சசிகலா, சத்யராஜிடம் வாக்குவாதம் ஆரம்பித்தாராம்.. எதுக்காக தேவையில்லாமல் சண்டை போடுகிறாய்? என்று சத்யராஜ் கேட்டும்கூட, வாதத்தை வளர்த்து கொண்டே சென்று, வம்படியாய் தகராறு செய்திருக்கிறார் சசிகலா..

ஆற்றுப்பாலம்
பிறகு, ஆவேசமாக இருப்பது போல நடித்து,, கோபித்துக் கொண்டே ஆற்றுப் பாலத்தின் அடியில் போய் நின்றுகொண்டாராம். இதெல்லாம் பார்த்து ஒன்றுமே புரியாத சத்யராஜ், மனைவியை சமாதானப்படுத்த ஆற்றுப்பாலத்துக்கு சென்றுள்ளார்.. ஆனால், அங்கு ஏற்கனவே கள்ளக்காதலன் ஜான் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்... உடனே, சசிகலா சத்யராஜை கெட்டியாக பிடித்துக் கொள்ள, ஜான் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சத்யராஜின் கழுத்துப்பகுதியில் வெட்டியிருக்கிறார்..

பேப்பர் நேம்
இதில் சத்யராஜ் வலி தாங்க முடியாமல் அங்கேயே ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்துள்ளார்... சத்யராஜ் இறந்துவிட்டதாக நினைத்து 2 பேருமே அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது தெரியவந்துள்ளது.. ஆனால், உயிர்பிழைத்து வந்து, பேப்பரில் தன் பெயரை எழுதி காட்டுவார் என்று சசிகலா நினைக்கவேயில்லையாம்.. எல்லாவற்றையும் போலீசில் வாக்குமூலமாக சொல்லவும், தொடர் விசாரணை அந்த ஜோடியிடம் நடந்து கொண்டிருக்கிறது.. இப்போது சத்யராஜ் சீரியஸாக இருக்கிறாராம்.. கழுத்து அறுக்கப்பட்டதால் ஆபத்தான நிலையில் இருப்பதாக சொல்கிறார்கள்.. அதனால், மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications