விஜய் சினிமா நடிகர் அப்படித்தான் இருப்பார்.. திமுக முன்னாள் அமைச்சர்கள் பொன்முடி , மஸ்தான் தாக்கு
விழுப்புரம்: தமிழக வெற்றிகழக தலைவர் விஜய் அரசியலில் என்ன வாக்குறுதி கொடுக்க போறோம், எப்படி நிறைவேற்ற போறோம் என எதுவும் தெரியாது, ஏதோ எழுதிக் கொடுத்ததை படித்துவிட்டு ஏதோ செல்கிறார், சினிமா நடிகர் அப்படித்தான் இருப்பார் என திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். விஜய் வாக்குறுதிகள் புதுசாக ஏதாவது சொல்ல வேண்டும் முன்னாள் அமைச்சர் மஸ்தான் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக விழுப்புரம் மண்டலத்தின் மூலம் விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து விழுப்புரம் சுற்றுவட்டார பகுதி கிராமங்கள் மற்றும் சென்னை உட்பட பல்வேறு பகுதிகளுக்கு ஏழு புதிய மகளிர் விடியல் பயண பேருந்துகள் மற்றும் ஆறு புனரமைக்கப்பட்ட புறநகர் பேருந்துகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக முன்னாள் அமைச்சர் பொன்முடி மற்றும் செஞ்சி மஸ்தான் தனித்தனியே கொடி அசைத்து துவங்கி வைத்தனர்.

அதனை தொடர்ந்து தமிழக வெற்றிகழக தலைவர் விஜய் இருசக்கர வாகனம் மற்றும் வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டிதரபடும் என்று கூறியிருப்பது குறித்து செய்தியாளரின் கேள்விக்கு பதில் அளித்த முன்னாள் அமைச்சர் பொன்முடி, விஜய் புதியதாக கட்சி ஆரம்பித்து உள்ளார் எது வேண்டுமானாலும் சொல்வார்.
அரசியலில் என்ன வாக்குறுதி கொடுக்க போறோம், எப்படி நிறைவேற்ற போறோம் என எதுவும் தெரியாது, ஏதோ எழுதிக் கொடுத்ததை படித்துவிட்டு ஏதோ செல்கிறார். சினிமா நடிகர் அப்படித்தான் இருப்பார். எஸ் ஐ ஆர் பணிகள் முதலமைச்சரின் அறிவுறுத்தல் படி மேற்பார்வை செய்து வருகிறோம் சிறப்பாக நடைபெற்று வருகிறது என பொன்முடி தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் மஸ்தான் பேசுகையில, அதிமுகவினர் திமுகவில் சேர்வது என்பது திராவிட முன்னேற்றக் கழகத்தில் கொள்கை பிடிப்பு அதனை அறிந்தவர்கள். திமுகவில் இணைந்து வருகின்றனர். திமுகவில் யார் எப்பொழுது வந்தாலும் மரியாதை அளிக்கக்கூடிய இயக்கம். திமுக மேலும் திமுக தலைவர் ஸ்டாலின் மீது உள்ள நம்பிக்கையில் தொடர்ந்து திமுகவில் இணைந்து வருகின்றனர். விஜய் வாக்குறுதிகள் புதுசாக ஏதாவது சொல்ல வேண்டும்.0அண்ணா, கலைஞர் இப்போது ஸ்டாலின் ஆட்சி வரை தாயின் கருவறை முதல் கல்லறை வரை மக்கள் நலனில் திட்டங்கள் தீட்டி இருப்பது திராவிட மாடல் ஆட்சி. குறிப்பாக பெண்கள் கல்வி மற்றும் முன்னேற்றத்திற்க பல்வேறு திட்டங்கள் செய்து வருகிறது. தமிழகத்தில் பெண்கள் உயர்கல்வியில் சிறந்து விளங்குவதாக மத்திய அரசின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன இவ்வாறு கூறினார்.












Click it and Unblock the Notifications