நாதக வேட்பாளர் போட்ட கோஷம்.. போலீஸ் முன்பே அடித்துக்கொண்ட நாம் தமிழர்- திமுக! பரபரத்த விக்கிரவாண்டி!
விழுப்புரம்: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரத்தின்போது திமுக, நாம் தமிழர் கட்சியினர் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. போலீசார் முன்னிலையிலேயே இரு தரப்பினரும் தாக்கிக்கொண்டுள்ளனர்.
விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் வரும் 10ஆம் தேதி நடைபெற உள்ளது. இடைத்தேர்தலில் மொத்தம் 29 வேட்பாளர்கள் களத்தில் இருந்தாலும், திமுக, பாமக, நாம் தமிழர் கட்சியினர் இடையே தான் மும்முனை போட்டி உள்ளது. இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக, பாமக, நாம் தமிழர் உள்ளிட்ட அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட தொரவி, பனையபுரம், அசோகபுரி உள்ளிட்ட இடங்களில் திறந்தவெளி வாகனத்தில் சென்று வாக்கு சேகரித்துக் கொண்டிருந்தார் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா. அப்போது எதிர்திசையில் ஏராளமான பெண்களுடன் வாக்குச் சேகரித்தபடி திமுகவினர் வந்து கொண்டிருந்தனர்.
அப்போது, திமுகவினரையும் அவர்களுடன் சென்ற பெண்களையும் பார்த்து சரமாரியாக கேள்விகளை எழுப்பி உள்ளார் நாம் தமிழர் கட்சி வேட்பாளார் அபிநயா. ஒரு நாள் அவர்கள் கொடுக்கும் 500, 1,000 ரூபாய் பணத்துக்காக ஏன் இப்படி வந்து தெருவில் நிற்கிறீர்கள்? உங்களை எல்லாம் பார்த்தால், அறியாமையில் நின்று கொண்டிருப்பதாகத்தான் தெரிகிறது.
கள்ளச் சாராய மரணங்களுக்கு என்ன பதில்? பணத்தை வாங்கிக் கொண்டு திமுகவினருடன் சென்றால், அந்த பாவம் உங்கள் பிள்ளைகளுக்கு வந்து சேரும் என்று நாதக வேட்பாளர் அபிநயா காட்டமாகப் பேசினார். மேலும், போடுங்கம்மா ஓட்டு கள்ளச்சாராய கும்பலை பார்த்து.. போடுங்கம்மா ஓட்டு தாலி அறுக்கற கும்பலை பார்த்து என கோஷம் போட்டார் வேட்பாளர் அபிநயா.

இது திமுகவினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது. இதுபோல, நாதக வேட்பாளர் அபிநயா, தான் பிரச்சாரத்திற்கு செல்லும் இடங்களில் எல்லாம் திமுகவை வசைபாடி வந்துள்ளார். தொரவி கிராமத்தில் உள்ள திரெளபதி அம்மன் கோயில் அருகே வாக்கு சேகரிப்பில் ஈடுபடுவதற்காக, 100-க்கும் மேற்பட்டதிமுகவினர் நின்று கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக பிரச்சாரம் செய்தபடி வந்த நாம் தமிழர் கட்சியினர், வழக்கம்போல திமுகவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியபடி, திமுகவுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று பிரச்சாரம் செய்தனர். இதனால் ஆத்திரமடைந்த திமுகவினர், நாம் தமிழர் கட்சியினருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி, மோதலாக மாறியது.
இரு தரப்பினரும் போலீசார் முன்னிலையிலேயே ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டுள்ளனர். மோதலில் ஈடுபட்ட திமுக, நாம் தமிழர் கட்சியினரை தடுத்து நிறுத்திய போலீசார், இரு தரப்பினரையும் அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
மோதல் தொடர்பாக திமுக, நாம் தமிழர் கட்சி தரப்பில் யாரும் புகார் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுக, நாம் தமிழர் கட்சியினரிடையே மோதல் ஏற்பட்டு ஒருவரையொருவர் தாக்கி கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
முதலமைச்சர் விஜய்யை சந்திக்க வாய்ப்பில்லை! மேயர் பிரியா கறார்! காரணம் இதுதான்! -
திமுகவின் TAPS தேவாமிர்தம்.. இப்போ OPS வேணுமா? கரைவேட்டி கட்டாத கட்சிக்காரர்கள்.. TNGEA விளாசல்! -
"வாயை மூடி பேசவும்" மாவட்டச் செயலாளர்கள் கண்ட்ரோலில் திமுக குழு.. விரக்தியில் அடிமட்ட தொண்டர்கள்! -
சென்னையில் மின்வெட்டின் பின்னணி.. அமைச்சர் கருத்துக்கு திமுக தொழிற்சங்கம் திட்டவட்டமாக மறுப்பு -
CM Saar.. மாறி மாறி மக்களை ஏமாற்றும் விஜய்.. SCAM செய்யும் தவெக அரசு.. உதயநிதி ஸ்டாலின் அதிரடி! -
கூட்டணி கட்சிகளுக்குள் வெடித்த கலவரம்: திமுக - விசிக இடையே பயங்கர கல்வீச்சு! தடியடி நடத்திய போலீசார் -
திமுகவில் உதயநிதிக்கு செயல் தலைவர் பதவி? மெல்ல நகரும் திட்டம்.. ஸ்டாலின் மேஜையில் ரிப்போர்ட் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம்












Click it and Unblock the Notifications