விஜய் மாநாட்டில் திமுக எம்எல்ஏவின் கொள்ளுப்பாட்டி கட் அவுட்.. யார் இந்த அஞ்சலை அம்மாள்!

Subscribe to Oneindia Tamil

விழுப்புரம்: விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் ஏற்கனவே பெரியார், அம்பேத்கர், காமராஜர் ஆகியோரின் கட் அவுட்கள் இடம்பெற்று இருந்த நிலையில், இப்போது வீரமங்கை வேலுநாச்சியார் மற்றும் அஞ்சலையம்மாள் கட் அவுட்களும் வைக்கப்பட்டுள்ளன. விடுதலைக்காக அரும்பாடுபட்ட இந்த அஞ்சலை அம்மாள் குறித்து நாம் பார்க்கலாம்.

நடிகர் விஜய் ஆரம்பித்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. விழுப்புரத்தில் இந்த மாநாடு நடக்கும் நிலையில், இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

tvk maanadu tamilaga vetri kazhagam actor vijay

கட் அவுட்: மாநாடு நடக்கும் இடத்தில் ஏற்கனவே பெரியார், அம்பேத்கர், காமராஜர் ஆகிய தலைவர்களின் கட் அவுட்களுடன் விஜய் கட் அவுட்டும் வைக்கப்பட்டு இருந்தது. இதற்கிடையே இப்போது வீரமங்கை வேலுநாச்சியார் மற்றும் அஞ்சலை அம்மாள் கட் அவுட்களும் அதில் வைக்கப்பட்டுள்ளன. இதில் வீரமங்கை வேலுநாச்சியார் குறித்து பலருக்கும் தெரிந்து இருக்கும். ஆனால், அஞ்சலை அம்மாள் குறித்துத் தெரியாமல் இருக்கலாம்.

அஞ்சலை அம்மாளின் கொள்ளுப்பேரன் இப்போது திமுக சார்பில் எம்எல்ஏவாக இருப்பவர்.. யார் அவர்.. அஞ்சலை அம்மாள் சுதந்திரப் போராட்டத்திற்கு என்ன செய்துள்ளார் என்பது குறித்துப் பார்க்கலாம்,

அஞ்சலை அம்மாள்: 1890ம் ஆண்டு ஜூன் 1ம் தேதி கடலூரில் முதுநகர் சுண்ணாம்புக்கார தெருவில் அம்மாக்கண்ணு - முத்துமணி இணையருக்கு மகளாகப் பிறந்தவர் தான் அஞ்சலை அம்மாள். இவர் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் ஐந்தாம் வகுப்பு வரை படித்தவர். மகாத்மா காந்தி 1921ல் ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்கிய போதே, அஞ்சலை அம்மாளும் தனது பொது வாழ்க்கையைத் தொடங்கினார்.

சென்னையில் நடந்த ஆங்கிலேயப் படைத் தளபதி ஜேம்ஸ் நீல் சிலை அகற்றும் போராட்டம், கடலூரில் நடந்த உப்பு சத்தியாகிரக போராட்டம், அந்நிய ஆடை எதிர்ப்பு போராட்டம், 1940ல் நடந்த தனிநபர் சத்தியாகிரக போராட்டம் எனப் பல போராட்டங்களில் பங்கேற்று அஞ்சலை அம்மாள் சிறைத் தண்டனை பெற்றுள்ளார்.

போராட்டம்: அஞ்சலை அம்மாளை தென்னாட்டின் ஜான்சிராணி என்று மகாத்மா காந்தியடியே பாராட்டியுள்ளார். இவர் விடுதலை போராட்டங்களில் பங்கேற்றதற்காகப் பல முறை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 1932ம் ஆண்டு போராட்டத்தில் பங்கேற்று சிறை சென்ற போது அவர் நிறைமாத கர்ப்பிணி.. அப்போது பெற்றெடுத்த மகனுக்கு ஜெயில் வீரன் என பெயர் வைத்தார். மேலும், மற்றொரு முறை விடுதலை போராட்டத்தில் ஈடுபட்ட போது தனது 9 வயது மகளுடன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர்.

மகாகவி பாரதியார் புதுச்சேரியில் இருந்த நேரம் அது.. அவர் தமிழகம் வந்தால் கைது செய்யப்படுவார் என்ற சூழலே இருந்தது. இங்குப் பிரிட்டிஷ் போலீசார் பாரதியை தேடி வந்தனர். அந்த நேரத்திலும் பாரதியார் மாறு வேடமிட்டு தமிழகம் வந்து அஞ்சலை அம்மாளை பார்த்துச் சென்றார். அந்தளவுக்கு விடுதலை போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டவர் மேலும் விடுதலைப் போராட்டத்திற்காகத் தனது குடும்பச் சொத்துக்களையும், குடியிருந்த வீட்டையும் கூட விற்று, நாட்டிற்காகத் தியாகம் செய்தார்

கொள்ளு பேரன்: 1937ம் ஆண்டு ஒரு முறை, இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு இரண்டு முறை என்று மூன்று முறை அஞ்சலை அம்மாள் சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு மக்கள் பணியாற்றியவர். இப்படி நாட்டின் சுதந்திரத்திற்காகப் பெரும்பாடுபட்ட இவரது கொள்ளுப்பேரன் தான் ஆயிரம் விளக்கு தொகுதியின் எம்எல்ஏ மருத்துவர் எழிலன்.

அஞ்சலை அம்மாளின் தியாகங்களைச் சுட்டிக்காட்டி, அவருக்குக் கடலூரில் சிலை வைக்க வேண்டும் என்று எழிலன் கோரிக்கை விடுத்தார். அதை ஏற்று சில மாதங்களுக்கு முன்பு தமிழக அரசு சார்பில் கடலூரில் சிலையும் அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+