18 மணி நேர ரெய்டு.. பொன்முடி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நிறைவு! அடுத்து என்ன?
விழுப்புரம்: அமைச்சர் பொன்முடியின் விழுப்புரம் இல்லத்தில் 15 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்று வந்த சோதனை தற்போது நிறைவடைந்து இருக்கிறது.
கடந்த ஜூன் மாதம் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு, தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அலுவலகம், உறவினர்கள், நண்பர்களின் இல்லம், அலுவலகங்களில் அமலாக்கத்துறை தீவிர சோதனை நடத்தியது. சோதனை நிறைவடைந்த நாளில் நள்ளிரவே அமலாக்கத்துறை அதிகாரிகள் செந்தில் பாலாஜியை கைது செய்தனர்.

இந்த நிலையில் தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மீது கடந்த 2011 ஆம் ஆண்டு, செம்மண் குவாரி ஒதுக்கீட்டில் முறைகேடு செய்து அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக இன்று காலை அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையை தொடங்கின.
பொன்முடி மற்றும் அவரது மகனும் கள்ளக்குறிச்சி திமுக எம்.பியுமான கௌதம் சிகாமணி, அவரது இளைய மகனும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவருமான மருத்துவ அசோக் சிகாமணி ஆகியோருக்கு தொடர்புடைய இடங்களில் இன்று காலை 7 மணி முதலே அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டார்கள்.
விழுப்புரத்தில் உள்ள அமைச்சர் பொன்முடி வீடு, சென்னை சைதாபேட்டையில் அவரது வீடு, அவரது மகனும் திமுக எம்பியுமான கௌதம் சிகாமணி அலுவலகம், பொன்முடிக்கு சொந்தமான கல்லூரி, அசோக் சிகாமணிக்கு சொந்தமான மருத்துவமனை உட்பட அவருக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
சென்னையில் உள்ள வீட்டில் அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி, அவரது மகன் அசோக் சிகாமணி ஆகியோர் இருந்துள்ளனர். அவர்களிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் வீட்டில் வைத்தே தீவிர விசாரணை மேற்கொண்டார்கள். அதேபோல் வங்கி அதிகாரிகளும் பொன்முடி வீட்டுக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர்.
இந்த சோதனையில் ரூ.70 லட்சம் ரொக்கம், 10 லட்சம் மதிப்புள்ள அமெரிக்க டாலர், முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகின. இதனை அடுத்து அமைச்சர் பொன்முடியை விசாரணைக்காக சாஸ்திரி பவனில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர்.
அங்கு அவரிடம் சுமார் 4 மணி நேரத்தும் மேலாக தீவிர விசாரணை நடத்தினர். இதற்கிடையே விழுப்புரம் சண்முகபுரம் காலணியில் உள்ள அமைச்சர் பொன்முடியின் வீட்டில் நடைபெற்று வரும் சோதனை 15 மணி நேரம் கழித்து முடிவுக்கு வந்தது. அதை தொடர்ந்து நள்ளிரவு 12.50 மணியளவில் சென்னை, விழுப்புரத்தில் பொன்முடி தொடர்புடைய அனைத்து இடங்களிலும் சோதனை நிறைவடைந்து உள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications