Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இன்னும் ஒரே ஒரு நாள் தான்.. நாளை விக்கிரவாண்டி இடை தேர்தல் வாக்குப்பதிவு! ஜரூராக நடக்கும் ஏற்பாடுகள்

Subscribe to Oneindia Tamil

விழுப்புரம்: கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக வீசி வந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தல் புயலானது ஓய்ந்திருக்கிறது. நேற்று தலைவர்களின் பிரச்சாரம் நிறைவடைந்த நிலையில், நாளை வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக செய்து வருகிறது. மேலும் பணப்பட்டுவாடா உள்ளிட்டவற்றை தடுக்க தீவிர கண்காணிப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக, பாமக, நாம் தமிழர் கட்சிகள் களமிறங்கி இருக்கின்றன. தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக போட்டியிடாத நிலையில் அக்கட்சியினர் தங்கள் கட்சிக்கு வாக்களிக்க வேண்டுமென அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த நிலையில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கும் கடைசி நேரத்தில் அண்ணாமலையின் பேச்சு அதிமுகவினரை கொதிப்படையச் செய்திருப்பதால், பாமகவுக்கு அதிமுகவினர் வாக்களிக்க மாட்டார்கள் என திட்டவட்டமாக கூறுகின்றனர் அதிமுகவினர்.

vikravandi assembly by election 2024 election commission villupuram 2024

மக்களவைத் தேர்தல் முடிவடைந்த கையோடு விக்கிரவாண்டி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டாலும் அரசியல் கட்சிகள் சுறுசுறுப்போடு தேர்தல் பணிகளில் ஈடுபட்டன. தங்கள் எம்எல்ஏ மரணமடைந்ததால் மீண்டும் திமுகவே அந்த தொகுதியில் போட்டியிடுகிறது.

திமுக சார்பில் வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிக்கப்பட்டார். தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக தேர்தலில் போட்டியிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தேர்தலில் போட்டியிடவில்லை என அறிவித்தது.

பணபலம், ஆளுங்கட்சி அராஜகம் உள்ளிட்டவற்றால் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்து அதிர்ச்சி கொடுத்தார் கட்சியின் பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிச்சாமி. அதே நேரத்தில் வன்னியர் வாக்குகள் அதிகம் இருப்பதால் விக்கிரவாண்டி தொகுதியில் பாஜக கூட்டணியில் பாமக போட்டியிடும் என அறிவித்தார் ராமதாஸ். அந்த கட்சியின் சார்பில் வேட்பாளராக சி.அன்புமணி அறிவிக்கப்பட்டார்.

இதேபோல தர்மபுரி தொகுதியில் சௌமியா அன்புமணியை எதிர்த்து போட்டியிட்ட அபிநயாவும் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதை அடுத்து விக்கிரவாண்டி தேர்தல் களத்தில் மும்முனை போட்டி உருவானது. ஜூலை 10ஆம் தேதியான நாளை வாக்குப் பதிவு நடைபெறவுள்ள நிலையில், நேற்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவடைந்தது.

இறுதி நேரம் வரை அரசியல் கட்சி தலைவர்கள் அங்கு முகாமிட்டு தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். ஏற்கனவே அன்புமணி ராமதாஸ், சீமான், அண்ணாமலை உள்ளிட்ட தலைவர்கள் அங்கு பிரச்சாரத்தில் ஈடுபட்ட நிலையில், கடைசி இரண்டு நாட்கள் திமுக இளைஞரணி தலைவரும், விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் இறுதிக் கட்ட பிரச்சாரத்தில் பங்கேற்று வேட்பாளர் அன்னியூர் சிவாவுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.

மாலை 6 மணிக்கு வாக்குப் பதிவு நிறைவடைந்த நிலையில், தொகுதிக்கு சம்பந்தம் இல்லாதவர்கள் ,வெளியூரில் இருந்து அழைத்துவரப்பட்டவர்கள், அரசியல் கட்சி நிர்வாகிகள், அமைச்சர்கள் உள்ளிட்டோர் மற்றும் வாக்காளர் அல்லாதோர் ஆறு மணிக்கு மேல் தொகுதிகள் இருக்கக் கூடாது என அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து அனைவரும் வெளியேறினர். மேலும் 6 மணிக்கு மேல் சமூக ஊடகங்கள், துண்டு பிரச்சாரம் என எந்த வகையான ஊடகங்கள் மூலமாகவும் மூலம் வாக்கு சேகரிக்க தடை விதிக்கப்பட்டது.

மேலும் இறுதி நேரத்தில் பண பட்டுவாடா உள்ளிட்ட தேர்தல் விதி மீறல்கள் குறித்து கண்காணிக்கும் வகையில் தேர்தல் ஆணையம் ஏற்பாடுகள் செய்திருக்கிறது. மேலும், துணை ராணுவம், காவல்துறையினர் மூலம் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. மாலை 6:00 மணியுடன் விக்கிரவாண்டியில் தேர்தல் பிரசாரம் ஓய்ந்த நிலையில், நாளை காலை 7 மணிக்கு தொடங்கி வாக்குப் பதிவு மாலை 6 மணி வரை நடைபெற இருக்கிறது.

விக்கிரவாண்டி இடைத் தேர்தலுக்கு கடந்த 14ஆம் தேதி வேட்பு மனுத் தாக்கல் தொடங்கிய நிலையில் 24-ஆம் தேதி வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது. மொத்தம் 64 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் 35 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. கடந்த ஜூன் மாதம் 26ஆம் தேதி இறுதி கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. தற்போதைய சூழலில் 29 வேட்பாளர்கள் விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் களம் காண்கின்றனர். அதே நேரத்தில் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் அன்னியூர் சிவா, பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் அன்புமணி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா ஆகியோர் இடையே தான் போட்டி நிலவுகிறது.

இந்நிலையில் நாளை வாக்குப்பதிவுக்கு தேவையான நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. 260 வாக்குச்சாவடிகளில் வாக்கு பதிவு நடைபெற இருக்கும் நிலையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. மேலும் வாக்கு சாவடிகளுக்கு வாக்கு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு இயந்திரம், விவி பேட் உள்ளிட்டவற்றையும், பென்சில் பேனா, மை உள்ளிட்ட 111 பொருட்கள் அடங்கிய பெட்டகம் தயார் செய்யப்பட்டு இருக்கிறது.

தொடர்ந்து விக்கிரவாண்டி வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து அந்த பொருட்கள் வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பப்படுகிறது இதற்கான நடவடிக்கைகளை தேர்தல் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் வாக்குச்சாவடிக்கு இருவர் என காவல்துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். மேலும் பதட்டம் நிறைந்த வாக்குச்சாவடிகளை கூடுதல் கண்காணிப்பு மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+